Tuesday, July 31, 2012

தமிழ் உண்மையில் செம்மொழிதானா?

தமிழ் உண்மையில் செம்மொழிதானா?
செம்மொழி எனும் பதம் classical  language என்ற பதத்துக்கு முழு அர்த்தம் தருவதுதானா ?

செம்மொழி என்பதற்கு பல வரைவிலக்கணங்கள்  தரப் படுகின்றன.

" It should be ancient, it should be an independent tradition that arose mostly on its own, not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature."

மேல் சொன்ன மொழியியலாலரின் கருத்து பெரும்பாலும் ஏற்றுக்  கொள்ளப் பட்டதாகும்.
- அது பழமையானதாக இருக்க வேண்டும்.
- எந்தவொரு மொழியினின்றும் தோற்றுவிக்கப் படாத சுயமான பாரம்பரியத்தை கொண்டிருக்க வேண்டும் 
- தொன்மையான இலக்கிய செழுமை கொண்டிருக்க வேண்டும். 

மேற் சொன்ன அடிப்படையின் கீழ் உலக மொழியியலாளர்களின் கருத்துப் படி உலகில் ஒன்பது செம்மொழிகள் .

சுமேரியன் 
எகிப்திய மொழி 
பாபிலோனிய  மொழி 

இம்மூன்றும் முன்பு காணப் படினும் உலக செம்மொழிகள் ஆறுதான். 
 மேல் நாட்டு கோட்பாட்டின்படி அவர்களின் மொழிகள் 2.
                    கிரேக்கம் 
                    இலத்தீன் 

உலக மொழிகள் 4.
                     சீனம் , ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் 

2008 தெலுங்கு, கன்னடம் இந்தியாவின் செம்மொழிகளாக அறிவிக்கப் பட்டன. அது எந்த அளவுக்கு பொருத்தம் என்று நான் அறியேன். ஆனால் உலகளவில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இவ்விடயத்தில் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்ட தமிழ் மொழிக்கு ஒரு தனியிடம் இந்திய அளவில் வழங்கப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்திக் கூற வேண்டும்.

ஏனெனில் தமிழர்கள் பல வழிகளிலும் எமது பெருமையை உணரத் திராணி அற்றவர்களாகத் தான் உள்ளோம் . பல்வேறு அரசியற் காரணங்களால் தமிழுக்கான சரியான இடத்தை இந்தியா வழங்கவில்லை என்பதே கசப்பான உண்மை. இந்நிலையில் நம்மவர்க்கேனும் எமது பெருமை தெரிந்திருக்க வேண்டும். 

Classical Languages in the world : 

1. Sumerian 2. Egyptian 3. Babylonian 

4. Hebrew 5. Chinese 6. Greek 7. Latin 8. Sanskrit 9. Tamil

* Though the first three languages existed along with all 9, only the last 6 languages are called as Worlds Classical languages. 

* Only Chinese and Tamil are used by masses now. 
இன்றும் உயிர்ப்புடன் இருக்கும்  மொழிகள் தமிழும், சீனமும் மட்டும்தான்.

இங்கு சகல தகுதிகளையும் எம் தமிழ் கொண்டிருப்பதால் தமிழ் classical language என்பதில் ஐயமில்லை. இங்கு வாதம் அதுவல்ல. "செம்மொழி"
என்பது அதற்கான சரியான தமிழாகுமா  என்பதே....


பேராசிரியர்.கா.சிவத்தம்பி கருத்துப் படி இந்த பதம் classical  language என்ற பதத்தின் பெருமையினை தமிழுக்கு முழுமையாகத் தரவில்லை.


பேராசிரியரின் கருத்துப் படி இந்த அந்தஸ்துக்கு தொடர்ச்சி என்பதும் அவசியம் என்கிறார். ( Continuity  as a Language )உண்மைதான். இந்திய மேலாண்மைவாதிகளுக்கு கசப்பாக இருந்தாலும் sanskrit சில உலக அறிஞர்களால் classical  language என ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. 
ஏனெனில் அது உலக வழக்கு அற்றுப் போய் விட்டது. 


கிரேக்கம் நவீன கிரேக்கமாய்   தொடர்கிறது. ஹீப்ரு, இஸ்ரேலில் வழங்குகிறது. ஆகவே மற்ற மொழிகளின் தொன்மை உண்டு எனினும் தொடர்ச்சி sanscrit இற்கு இல்லை. 
அனைத்திந்திய மட்டத்தில் தொன்மை , தொடர்ச்சி கொண்ட ஒரே மொழி தமிழ்தான் 


அது ஏனோ தமிழர் பெருமை திட்டமிடப் பட்டு அனைத்து  மட்டங்களிலும் மூடி மறைக்கப் படுவதால் இவ்விடயங்கள் குறித்த ஒரு சாரார்க்கு  மட்டுமே  சென்றடைகின்றன. 

பேராசிரியர் ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரை மூலம் இந்த விஷயங்களை விளக்கியுள்ளார். 
மேலே சொன்ன அனைத்து பண்புகளையும் உள்ளடக்கி தமிழுக்கு ஒரு பதம் ஒன்றை முன்மொழிகிறார். 


தமிழ் ஒரு, தொல்சீர்மொழி. 


அதற்கான  காரணங்கள் பலவற்றை அவர் விளக்கி இருந்தாலும் கட்டுரையின் சுருக்கம் கருதி அதை விளக்க இயலவில்லை.


ஆய்வுக் கட்டுரை முடிவாக செழுமையை மட்டும் குறிக்கும் செம்மொழி என்பதை விட தமிழின் மாண்பினை முழுமையாக விளக்கும் 'தொல்சீர்மொழி' என்ற பதம் பொருத்தமானதாக  இருக்கும் என விளக்குகிறது. 


இப்பதம் ஒரு அருமையான பதம் என்பதும் தமிழன்னையை போற்றுவதுமாக அமையும் என உணர்ந்து கொண்டேன். 


தமிழன்பர்களின் கருத்து  என்ன? பகிர்ந்து கொள்ளுங்கள்.


பி.கு.
கார்த்திகேசு சிவத்தம்பி 
இலங்கை தமிழறிஞர் ,திறனாய்வாளர் மற்றும் சிந்தனையாளர் .
Friday, July 27, 2012

புத்தர் பயமுறுத்துகிறார்

மாமிசம் உண்ட புத்தர் .......

வசனம் கண்டு கோபம் கொள்ள வேண்டாம். இந்த வசனத்தை கேட்டவுடன்   எனக்கும் வெகுண்டு எழத்தான் தோன்றியது. ஆனால் செய்தி கேட்டவுடன் உண்மையா என் மன மயக்கம் தோன்றவும் கூடும்.

இலங்கை இந்தியாவைப் போன்று ஒரு மதச் சார்பற்ற நாடு அன்று. இலங்கை அரசியல் சாசனப் படி இது ஒரு பௌத்த நாடு. பெருமைப் பட வேண்டியதுதான். ஆனால் அது ஒரு கேலிக் கூத்தாக மாறும் வரை. இலங்கையில் துரதிருஷ்ட வசமாக நடைபெறுவது என்னவோ அதுதான்.

இந்தியாவின் தேசியக் கொடியில் இருப்பது கூட அசோகச் சக்கரம் தானே?

சமத்துவம், சகோதரத்துவம் இவற்றை எய்துவதற்கு ஒரே வழி புத்த மதம்தான் என்பது அண்ணல் அம்பேத்கரின் முடிவு . ஆனால் அண்ணல் இலங்கையில் பிறந்திருந்தால் அந்த எண்ணத்தை மாற்றி இருப்பார் என்பது திண்ணம். ஏனென்றால் இந்தியாவின் சாபக் கேடான சாதி வெறியும் சரி, இலங்கையின் சாபக் கேடான இனவெறியும் சரி, சமூகத்தின் வக்கிரமே அன்றி சமயக் கோட்பாடுகளின் பிழை அன்று. 


ஏனென்றால் நாம் எமது மிருகத் தனத்துக்கு எல்லாம் மதச் சாயம் பூசிக் கொள்கிறோம் . 

புத்தர் மூன்று முறை இலங்கை வந்தார் என்று சிங்கள நூலான மகா வம்சம் கூறுகிறது. புத்த பெருமான் நாகரிகம் அற்ற இயக்கர் , நாகர் வம்சத்தை ( நம்ம தமிழப் பயதான்....) அழித்து  ஆரியர்கள் ( சிங்கள பௌத்தர்கள் ) சமயத்தை வளர்க்க வேண்டுமாம். 
( தமிழர்களை வந்தேறு குடிகள் என்று கூறுவதற்கு முரணாக அமையும் என்பதால் இயக்கரை , நாகரை தமிழர் என்று ஏற்றுக் கொள்வதில்லை சிங்களவர் )


அப்படியே இருந்தாலும் புறாவை  கொல்வதை  கூட ஏற்காத சித்தார்த்தன் ஒரு சமூகத்தை அளிக்க சொல்லி இருப்பானா ?


எல்லாளன் நேர்மையானவன் என்பதை மறுக்க முடியவில்லை. ஆனால் வஞ்சகமாக அவனைக் கொன்ற துட்டகெமுனு தமிழரை அழிப்பதன்  மூலம் புத்தரை நிலை நாட்டுகிறான் .


தமிழர் பகுதிகளில் புத்த தூபிகள் இருப்பது அது சிங்களவர்கள் உடையது என்பதற்கு சான்றாம். தமிழர்கள் ஒரு கட்டத்தில் பௌத்தர்களாக வாழ்ந்தனர் என்றும் அது அவர்களின் உடைமைகள் என்பது ஒரு போதும் அவர்கட்கு தெரியாது. இது அறியாமை அன்று. திட்டமிட்டு மறைக்கப் பட்ட உண்மைகள். 


எங்கள் ஐம்பெரும் காப்பியங்களும் சமண , பௌத்த காப்பியங்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. 


புத்தர் மூலம் அறிமுகம் ஆனது பஞ்ச சீலக் கொள்கை. புலால் உண்ணாமை, ஜீவா காருண்யம் இரண்டுமே சமணமும் பௌத்தமும் தந்த கொடைகள்  தானே? 


இலங்கையில் சைவர்கள் சிலர் மாமிசம் உண்பதில்லை. 
என் சக மாணவன் ஒருவன் அதற்கு காரணம் கேட்டான். அது உங்களுக்கு ( தமிழர்க்கு) மறுக்கப் படடதா?  என்று கேட்டான்.
நான் என் மேதாவி தனத்தை காட்ட  நினைத்து புத்த போதனைகளை அடுத்து தான் அப்படி ஒரு வழக்கம் அல்லது மறுமலர்ச்சி திருத்தம்  வந்ததாக கூறினேன்.


அவன் சாவகாசமாக கூறினான். 
" புத்தர் ஒரு போதும் அதனை மறுக்கவில்லை . புத்தர் கூட அதனை அடிக்கடி புசித்திருக்கிறார் . என்று எங்கள் சமய நூல்கள் சொல்கின்றன."
உண்மைதான் அப்படி ஒரு கற்பிதம் தான் இங்கு இருக்கிறது. அதாவது பௌத்தம் சிங்களவர்களை தூண்டி விடும் கருவியாக ,  துவேசத்தை கட்டியெழுப்ப , பிக்குகளின் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள தான் இங்கு பயன்படுகிறது. 


அங்கு பார்ப்பனர்கள்.... இங்கு பிக்குகள் ....
மதம் வேறு அன்றி   கொள்கைகள் அடக்கு முறைகள் வேறு அல்ல. சிங்களவர்களிடையே சாதி முறை தாராளமாக உண்டு. 


முன்னொரு காலத்தில் இலங்கை தமிழர்களிடையே புத்தர் அமைதியின் சின்னமாக அமர்ந்திருப்பார். இப்போதெல்லாம் புத்தர் சிலைகளின் அமைதி தமிழரின் மீதான அடக்கு முறை குறிக்கும் சின்னமாகவே அமைகிறது.


புத்தர் பயமுறுத்துகிறார். 


பி.கு.:
புத்தர் ஒரு புலால் உண்ணிதான் என்ற கற்பிதம் உண்மைலேயே உண்டு. நான் வெப் தேடலிலும் வாசித்தேன். சர்ச்சை என்னவெனில் இங்கு இந்த புத்தம் அரசியல் மட்டுமே என்பதுதான் 


" Buddhism is not practiced as a religion here, It is rather used as an equipment here. "


அது சரி எந்த நாட்டிலுமே மதம் ( எந்த மதமானாலும் ) இப்படிதானே பயன் படுகிறது .... 
 மனிதன் ஒரு கொடூரமான சமூகப் பிராணி.. Wednesday, July 25, 2012

தமிழ் வார்த்தை ஒரு லட்சம்


குப்பைகளுக்கு மத்தியில் டிவியில் ஒரு சில நல்ல முயற்சிகளும் நடப்பதுண்டு. நான் அப்படி விரும்பிப் பார்க்கும் நல்ல நிகழ்சிகளில் ஒன்று, ஜேம்ஸ் வசந்தின் ஒரு வார்த்தை ஒரு லட்சம். 

விஜய் டிவி யும் பல குப்பைகளை அள்ளி தந்தாலும் அதன் நிலைக்கு ஓரளவு துணை போவது அதன் வித்யாசமான முயற்சிகள் தான் . சில நிகழ்ச்சிகள் வேற்று மொழி நிகழ்சிகளின் அட்டக் காப்பிதான் என்றாலும் தமிழுக்கு கொஞ்சம் புதுசுதான். 

நிகழ்ச்சி ஜோடிகளுக்கானது . ஒருவர் உதவிக் குறிப்புகள் அளிக்க மற்றவர் அதனை யூகிக்க வேண்டும். 

என்னை பொறுத்த வரை இது ஒரு ஆரோக்கியமான முயற்சி. விஜய் தன் rating இனை கூட்டுவதற்கு பல ஆட்டங்களை ஆடுவது யாவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இது கொஞ்சம் அருமையான ஆட்டம். வசந்துக்கு தமிழர்கள் சார்பில் நன்றிகள் .

இப்போது இது பற்றி நான் சொல்ல வந்த விஷயங்களை கூறி விடுகிறேன். நிச்சயமாக நிகழ்ச்சி பற்றி அன்று. என் அருமை தமிழர்கள் பற்றியது.

பார்க்கும் போது மனதை உறுத்தும் விடயம் என் தமிழர்களின் தமிழ் புலமைதான். சாதாரண போட்டியாளர்களை விட்டு விடுகிறேன். 

நம் தமிழ் டிவி களில் கொடி  கட்டி  பறக்கும் நடிகர்களும் ( முக்கியமாக விஜயில் ) இதில் பங்கேற்பதுண்டு. 

 பலவற்றை கூற நினைத்தாலும் ஒரு சிலவற்றை மட்டும் கோடிட்டுக் காட்டுகிறேன். 

சரவணா மீனாட்சி புகழ் செந்தில் , ராஜசேகர் விளையாடினர். பெரிதாக
பிழை விடவில்லை. ஆனால் செந்திலுக்கு ஒரு கட்டத்தில் 'தனயன்" என்ற சொல் மகனா , தம்பியா என்பதே தெரியாமல் தவிக்கிறார். இதில் இவர் ஒரு வானொலி அறிவிப்பாளர் என்று நினைக்கிறேன் 

இன்னொரு தடவை இளைய தலை முறை. 
கனா காணும் காலங்கள் அணி வந்திருந்தது. ஆண்கள் அணி அருமையாகவே ஆடியது. ( பாவம் தமிழ் மீடியம் போலும்) 

அப்பப்பா... இந்த மகளிர் அணி? 
குறில் , நெடில் தெரியாதவர்கள் எதற்கு தமிழ் கலை துறைக்கு வரணும்?  கோட்டை , கொட்டை இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத இந்த வெள்ளைக் காரிகளை..... 
 இதில்வேறு  நாங்கள் இங்கிலீஷ் மீடியம் , இப்போதுதான் தமிழ் படிக்க ட்ரை பண்ணுறோம் என்று அசிங்கமாய் ஒரு விளக்கம் வேறு! 

உதாரணத்துக்காக தான் இரண்டு உதாரணங்கள் சொன்னேன் . இது போல மனம் துடித்த சந்தர்ப்பங்கள் பல. 

திறமையை வளர்க்க சந்தர்ப்பங்கள் இல்லை , தொழில்நுட்பம் குறைவு, வாய்ப்புகளில் தமிழர்க்கு ஓர வஞ்சனை இப்படி பல காரணங்களுக்காக தானே இலங்கையில் கூட தென்னிந்திய  கலைஞர்களை தங்கியுள்ளோம் ?

தயவு செய்து உங்கள் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் . காயம் கொண்ட எம்  மனங்களை நல்ல தமிழ் மூலம் குணப்படுத்துங்கள். 

இந்த சொல் விளையாட்டு கடினம்தான். ஆனால் தமிழ்  கடினம் அல்லவே.... 

இந்த பிறழ்வுக்கு பல காரணங்கள் இருக்கலாம் . விஜய் டிவி யில் மலையாளிகள் என்று பதிவுகள் வாசித்திருக்கிறேன். ஒரு வேலை அது காரணமோ தெரியாது. வேற்று மொழி காரர்களாகவே இருக்கட்டும் . அவர்களும் தமிழை முறையை பேசினால் மட்டுமே அனுமதி கொடுங்கள். 

S .P .B . தமிழர் அல்லவே... ஆனால் அவர்களின் பாடல்கள் தமிழ் மணக்குமே? 

மனதை வருத்திய , கோபம் கொள்ள வைத்த விடயத்தை பதிவை இட்டு உள்ளேன் . யாரும் மனம் வருந்த செய்திருந்தால் மன்னிக்கவும் . இங்கு எமக்கு   சரியான இடம் இன்றி அலட்சியப் படுத்த போது எமக்கு ஏழு கோடி சகோதரர்கள் இருப்பதை எண்ணி ஆறுதல் அடைவதுண்டு. ஆனால் அந்த சகோதரரில் பல டமிலரும் சில தமிழரும் இருப்பது இப்போதான் தெரிகிறது. 

தமிழுக்கு விலை இல்லை. ஆனால் அது இந்த பாடுபடுதலை தடுக்க ஒரு லட்சத்தை பல லட்சமாய் மாற்றினாலும் பரவாயில்லை .

பி .கு. 
இந்த நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரும் கலந்து கொண்டார். அவர் நன்றாகவே விளையாடியதாய்  ஞாபகம், 

அன்ட்ரோய்டு உலகின் கருப்பு சந்தை.

அன்ட்ரோய்டு அப்ளிகேசன்கள் பொதுவாக இலவசமானவை. ஆனால் முக்கியமான அல்லது பிரபலமான அப்ளிகேசன்கள்  பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் .

இந்த பதிவில் அவற்றை எப்படி இலவசமாக பெறுவது என்பதை சொல்லி தருகிறேன்.

உங்கள் போன் rooted என்றல் எந்த பிரச்சனயும் இல்லை. 

இதற்காக நீங்கள் பெற வேண்டிய அப்ளிகேசன் அன்ட்ரோய்டு உலகின் கருப்பு சந்தை. 


கூகுள் சர்ச் மூலம் Blackmart alpha எனும்
அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் .

ரூட் போன்  என்றால் superuser  தகுதியை பெற்று விடும். இல்லை எனில் டவுன்லோட் செய்யும் விடயங்களை இன்ஸ்டால் செய்ய ஒவ்வொரு முறையும் manual முறை செல்ல வேண்டும்.


இன்ஸ்டால் செய்தாயிற்ற?
இனி ஏராளமான paid அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இலவசமாய்  .


எல்லா அப்ளிகேசன்கள் இல்லாவிட்டாலும் பெரும்பாலான விடயங்கள் தாரளமாக கிடைக்கின்றன . இப்போதைக்கு தடை இல்லை என்பதால் இப்போதே டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்க.


செய்து பார்த்து விட்டு பயன்களை பின்னூட்டங்களில் சொல்லுங்கள் .