Tuesday, September 21, 2010

ஒபாமாவும் ஒரு மசூதியும்

வெள்ளை மாளிகைக்குள் ஒரு புயல் வீசி இருக்கிறது. ஒபாமா சாவகாசமாக சொன்ன சின்ன விஷயம் சர்ச்சையைத் தோற்றுவித்துவிட்டது. செப்டம்பர் பதினொன்று தாக்குதலை யாரும் மறந்து விட முடியாது. இன்று பலி வாங்கப் படும் பல உயிர்களுக்கு அது முதல் விதை.  


அந்த இரட்டைக் கோபுர வளாகத்தில் ஒரு மசூதி கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. அதுதான் சர்ச்சை. ஆனால் ஒரு புறம் மன்னிப்பு என்ற மனித உணர்வை ஊட்டும் அற்புதமான தருணமாக இதைக் கருதலாம். ஆனால் மன்னிக்க நாம் யார்? யார்தான் தவறு செய்யவில்லை? தவிர பயங்கரவாதிகளின் தவறுக்கு உண்மையான முஸ்லிம்களை எப்படி புண்படுத்த முடியும்?  


ஆனால் நடப்பதென்னவோ அதுதான். யாரும் மன்னிக்கவில்லை. 
ஒபாமா மசூதி கட்ட ஆதரவு தந்த ஒரே காரணத்தால் அவரின் ஆதரவு வீழ்ச்சி அடைந்து விட்டதாம். என்ன கொடுமைடா இது? 


வளர்ச்சி பெற்ற, கருத்து சுதந்திரம் பெற்ற அமெரிக்காவில் இந்த நிலையா? 
அதுவும் Mr. President இற்கு. 


தவிர என் தனிப்பட்ட openion! 
நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரி  சந்தர்ப்பத்துக்கு ஏற்றாப் போல் பேச அவருக்குத் தெரியாதா? உண்மையே பேசினாலும் ஆதாயம் இருந்தா தானே பேசுவாங்க? 
பாவம் பச்சை புள்ளதான் போங்க... 

1 comment:

  1. பழிக்குப் பழி என்று எல்லோரும் கிளம்பினால் இந்த உலகில் யாருமே மிஞ்ச மாட்டார்கள். உயர்திரு.புஷ் அவர்களின் தவறுகளை சரி செய்து முன்னேறிக் கொண்டிருக்கும் ஒபாமாவுக்கு இந்த நிலைமையா? ஆனால் ஒன்று. நல்லதுக்கு காலம் இல்லை?!

    ReplyDelete