Tuesday, July 31, 2012

தமிழ் உண்மையில் செம்மொழிதானா?

தமிழ் உண்மையில் செம்மொழிதானா?
செம்மொழி எனும் பதம் classical  language என்ற பதத்துக்கு முழு அர்த்தம் தருவதுதானா ?

செம்மொழி என்பதற்கு பல வரைவிலக்கணங்கள்  தரப் படுகின்றன.

" It should be ancient, it should be an independent tradition that arose mostly on its own, not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature."

மேல் சொன்ன மொழியியலாலரின் கருத்து பெரும்பாலும் ஏற்றுக்  கொள்ளப் பட்டதாகும்.
- அது பழமையானதாக இருக்க வேண்டும்.
- எந்தவொரு மொழியினின்றும் தோற்றுவிக்கப் படாத சுயமான பாரம்பரியத்தை கொண்டிருக்க வேண்டும் 
- தொன்மையான இலக்கிய செழுமை கொண்டிருக்க வேண்டும். 

மேற் சொன்ன அடிப்படையின் கீழ் உலக மொழியியலாளர்களின் கருத்துப் படி உலகில் ஒன்பது செம்மொழிகள் .

சுமேரியன் 
எகிப்திய மொழி 
பாபிலோனிய  மொழி 

இம்மூன்றும் முன்பு காணப் படினும் உலக செம்மொழிகள் ஆறுதான். 
 மேல் நாட்டு கோட்பாட்டின்படி அவர்களின் மொழிகள் 2.
                    கிரேக்கம் 
                    இலத்தீன் 

உலக மொழிகள் 4.
                     சீனம் , ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் 

2008 தெலுங்கு, கன்னடம் இந்தியாவின் செம்மொழிகளாக அறிவிக்கப் பட்டன. அது எந்த அளவுக்கு பொருத்தம் என்று நான் அறியேன். ஆனால் உலகளவில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இவ்விடயத்தில் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்ட தமிழ் மொழிக்கு ஒரு தனியிடம் இந்திய அளவில் வழங்கப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்திக் கூற வேண்டும்.

ஏனெனில் தமிழர்கள் பல வழிகளிலும் எமது பெருமையை உணரத் திராணி அற்றவர்களாகத் தான் உள்ளோம் . பல்வேறு அரசியற் காரணங்களால் தமிழுக்கான சரியான இடத்தை இந்தியா வழங்கவில்லை என்பதே கசப்பான உண்மை. இந்நிலையில் நம்மவர்க்கேனும் எமது பெருமை தெரிந்திருக்க வேண்டும். 

Classical Languages in the world : 

1. Sumerian 2. Egyptian 3. Babylonian 

4. Hebrew 5. Chinese 6. Greek 7. Latin 8. Sanskrit 9. Tamil

* Though the first three languages existed along with all 9, only the last 6 languages are called as Worlds Classical languages. 

* Only Chinese and Tamil are used by masses now. 
இன்றும் உயிர்ப்புடன் இருக்கும்  மொழிகள் தமிழும், சீனமும் மட்டும்தான்.

இங்கு சகல தகுதிகளையும் எம் தமிழ் கொண்டிருப்பதால் தமிழ் classical language என்பதில் ஐயமில்லை. இங்கு வாதம் அதுவல்ல. "செம்மொழி"
என்பது அதற்கான சரியான தமிழாகுமா  என்பதே....


பேராசிரியர்.கா.சிவத்தம்பி கருத்துப் படி இந்த பதம் classical  language என்ற பதத்தின் பெருமையினை தமிழுக்கு முழுமையாகத் தரவில்லை.


பேராசிரியரின் கருத்துப் படி இந்த அந்தஸ்துக்கு தொடர்ச்சி என்பதும் அவசியம் என்கிறார். ( Continuity  as a Language )உண்மைதான். இந்திய மேலாண்மைவாதிகளுக்கு கசப்பாக இருந்தாலும் sanskrit சில உலக அறிஞர்களால் classical  language என ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. 
ஏனெனில் அது உலக வழக்கு அற்றுப் போய் விட்டது. 


கிரேக்கம் நவீன கிரேக்கமாய்   தொடர்கிறது. ஹீப்ரு, இஸ்ரேலில் வழங்குகிறது. ஆகவே மற்ற மொழிகளின் தொன்மை உண்டு எனினும் தொடர்ச்சி sanscrit இற்கு இல்லை. 
அனைத்திந்திய மட்டத்தில் தொன்மை , தொடர்ச்சி கொண்ட ஒரே மொழி தமிழ்தான் 


அது ஏனோ தமிழர் பெருமை திட்டமிடப் பட்டு அனைத்து  மட்டங்களிலும் மூடி மறைக்கப் படுவதால் இவ்விடயங்கள் குறித்த ஒரு சாரார்க்கு  மட்டுமே  சென்றடைகின்றன. 

பேராசிரியர் ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரை மூலம் இந்த விஷயங்களை விளக்கியுள்ளார். 
மேலே சொன்ன அனைத்து பண்புகளையும் உள்ளடக்கி தமிழுக்கு ஒரு பதம் ஒன்றை முன்மொழிகிறார். 


தமிழ் ஒரு, தொல்சீர்மொழி. 


அதற்கான  காரணங்கள் பலவற்றை அவர் விளக்கி இருந்தாலும் கட்டுரையின் சுருக்கம் கருதி அதை விளக்க இயலவில்லை.


ஆய்வுக் கட்டுரை முடிவாக செழுமையை மட்டும் குறிக்கும் செம்மொழி என்பதை விட தமிழின் மாண்பினை முழுமையாக விளக்கும் 'தொல்சீர்மொழி' என்ற பதம் பொருத்தமானதாக  இருக்கும் என விளக்குகிறது. 


இப்பதம் ஒரு அருமையான பதம் என்பதும் தமிழன்னையை போற்றுவதுமாக அமையும் என உணர்ந்து கொண்டேன். 


தமிழன்பர்களின் கருத்து  என்ன? பகிர்ந்து கொள்ளுங்கள்.


பி.கு.
கார்த்திகேசு சிவத்தம்பி 
இலங்கை தமிழறிஞர் ,திறனாய்வாளர் மற்றும் சிந்தனையாளர் .




8 comments:

  1. நல்ல பதிவு. நேற்றே மொபைலில் வாசித்துவிட்டேன். கருத்துரையிடத்தான் சற்று தாமதம். உன் இன்ட்லி பின்தொடர்வோர் விட்ஜெட்டை சரியாக எல்லைக்குள் அமைக்க வேண்டும். மற்ற விட்ஜெட்களையும் சைடு பாரில் இணைத்துவிட்டால் அழகாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல தேடல் நண்பரே, எனக்கு தெரியாத சில தகவல்களையும் தெரிந்துகொண்டேன். தொடருங்கள். சிகரம் வழியாக வந்தேன், அருமை.

    ReplyDelete
    Replies
    1. எனது பதிவுக்கு வந்தமைக்கு நன்றி நண்பரே... எனது தளத்தில் பின்தொடர வேண்டுமென வேண்டுகிறேன். உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன்.

      Delete
  3. தங்களின் எழத்து நடை மிகப் பொருத்தமான தேர்ந்தெடுத்த
    சொற்களால் அழகாக உள்ளது. சொல்ல வந்த கருத்தும்
    சரியான அர்த்தத்தில் பகிரப்பட்டுள்ளது கவர்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி... தமிழுக்கே நன்றி சொல்ல வேண்டும். வருகைக்கு மிக்க நன்றி...

      Delete
  4. We heard a lot of our MOTHER TONQUE Tamil .Why our people is always attacked by others?This is a question I am asking myself?I cannot find the reply for that .Even Mahakavi Bharathiar said there is no language just like so sweet of Tamil ,.But there is no power to destroy our TAMIL.in the world ,instead it WILL grow further and further.We will take all our steps to lift our TAMIL.by DK.,

    ReplyDelete
    Replies
    1. உண்மை துரைசாமி.. உங்கள் கருத்திலேயே விடை இருக்கிறது.. எமது மொழி போல் இனியது இல்லை. பாரதி தமிழன். ஆனால் வீரமாமுனி, கால்டுவெல் மற்றும் பலர் கிறிஸ்தவம் பரப்ப வந்து எமது மொழியின் அழகில் சொக்கி விடவில்லையா? எமது மொழியின் செழுமை, தமிழனின் அந்த புகழ் மற்றவர்களைப் பொறாமை கொள்ள செய்து விடுகிறது. தென்னிந்தியாவின் மற்ற மொழிக் காரர்கள் அதனால்தான் நம்மை அப்படி பார்க்கின்றனர். அவர்களுக்கு தாய் தமிழ்தான் என்பதை மறந்து...
      ஹிந்திக்கு என்ன பெருமை இருக்கிறது..? சமஸ்கிருதம் அழிந்து விட்டது. இந்திய அளவில் மட்டுமலாமல் உலக அளவிலும் தமிழன் எனப் பெருமையுடன் சொல்லலாம்.
      வருகைக்கு கருத்துக்கு நன்றி தோழா... என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்.

      Delete