பெரும்பாலான நண்பர்கள் பார்த்திருப்பீர்கள்..
எனினும் பார்க்காத தோழர்களுக்கு ஒரு அறிமுகமாகவும் பார்த்தவர்களுக்கு ஒரு சுகமான மீட்பாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் பகிர்ந்து கொள்கிறேன்..
உலக சினிமாவை ருசிக்க நினைக்கும் கற்றுக் குட்டி யாருக்குமே பொதுவாக பரிந்துரைக்கப்படும் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று இது... ( நானும் கற்றுக் குட்டி என்ற முறையில் பல்வேறு நல்ல விமர்சனங்கள் மூலமாகவே இந்த திரைப்படம் நோக்கி உந்தப் பட்டேன். )
இந்த திரைப் படம் உண்மை சம்பவம் ஒன்றை மையப் படுத்தி எடுக்கப் பட்ட பீரியட் பிலிம்.. பொதுவாகவே உலக சினிமாவில் வரலாற்றுக் கதைகள் நன்றாக இருக்கும். அதிலும் இது முதல் தரம்.
"இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப் பட்ட போலந்து யூத பியானிஸ்ட் ஒருவனின் கதை...ஒரு நகரத்தின் சாவு " என்ற தலைப்பில் அந்த யூதரால் எழுதப் பட்ட சுய சரிதையை மயமாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப் பட்டது.
திரைக்கதை
1939.
இரண்டாம் உலக யுத்தம் .
ஜெர்மானியப் படைகள் வெற்றிக்கனியை ருசித்துக் கொண்டிருக்கின்றன. அமைதியாக ஒதுங்கி நிற்கும் போலந்து மீதும் தாக்குதல் நடத்தப் படுகிறது. அந்த நாட்டின் ரேடியோ கட்டுப்பாட்டகம் குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. அதில் பியானிஸ்ட்ஆக தொழில் புரியும் ஒருவன்தான் ஸ்பில்மான். ( Szpilman )
யூதர்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு வெளியேறுவதற்கு சிறு அவகாசம் கிடைக்கிறது. தங்களால் முடிந்த அளவு பொருட்களை எடுத்துக் கொண்டு குடும்பம் வெளியேறுகிறது. யூதர்களின் மரணக் கிடங்கு ஒன்றுக்கு பலியிடப் படவே அவர்கள் அழைத்து செல்லப் படுகிறார்கள். பயணத்தின் வழியில் இந்த இசைக் கலைஞன் யூதன் அல்லாத நண்பன் ஒருவனால் காப்பாற்றப் படுகிறான்.
உறவுகள் அனைத்தும் அறுந்து விட்ட நிலையில் சபிக்கப் பட்ட வாழ்வை அடைகிறான். அடிமைத் தொழிலாளியாக ஒரு இடத்தில் வேலை செய்கிறான். அதே நேரத்தில் யூதப் புரட்சிக் குழு ஒன்று உருவாவதை அறிந்து சில ஆயுத கடத்தலிலும் உதவுகிறான். அதுவும் தோல்வி அடைகிறது.
மீண்டும் ஒரு முறையும் யமனின் கருணை அவனுக்கு கிடைக்காமலே போகிறது. அவனின் பழைய தோழி, அவளது கணவன் மூலமாக யூதரல்லாத மக்கள் வாழும் பகுதிக்கு அழைத்து செல்லப் பட்டு தலைமறைவாக தங்க வைக்கப் படுகிறான்.
பயங்கரமான தனிமையில் வாடும் அவனுக்கு தனக்குள் ஒளிந்திருக்கும் கலைஞனின் வேதனை புரிகிறது. அவனது விரல்கள் துடிக்கின்றன. போதாக் குறைக்கு ஜான்டிஸ் வந்து விடுகிறது.
வெகுவிரைவில் அந்த பகுதியும் யுத்தத்தால் அழிகிறது. சிதைவுகளுக்கு நடுவே உணவை தேடி ஓடுகிறான், பதுங்குகிறான்.
ஒரு முறை உணவைப் பிரித்தவாறு நிமிர்ந்தவன் நடுங்கிப் போகிறான். ஒரு ஜெர்மன் அதிகாரி நிற்கிறான். " நீ யார்?' என விசாரிக்கிறான்.
" நான் ஒரு பியானோ கலைஞன்"
அந்த அதிகாரி அவனை நம்பாமல் ஒரு பியானோ அருகே அழைத்து செல்கிறான் . அதன் முன்னால் அமரும் அவன் தன்னை மறக்கிறான். நடுங்கிய அவன் கைகளுக்கு தீனி கிடைக்கிறது... தன்னை மறந்து வாசிக்கிறான். அந்த அதிகாரியையும் மெய்மறக்க வைக்கிறான். மாலையில் மீண்டும் வரும் அதிகாரி ப்ரெடும் , ஜாமும் தருகிறான். சில நாட்களுக்கு இது தொடர்கிறது.
ஒரு நாள் மீண்டும் வரும் அதிகாரி தான் மாற்றலாகி செல்வதாக சொல்கிறான்.
" யுத்தம் முடிந்ததும் நீ என்ன செய்வாய்?"
" எங்கள் நாட்டு ரேடியோவில் வாசிப்பேன்"
" நான் அதைக் கேட்பேன்."
அந்த வாக்குறுதியையும் குளிருக்கு பாதுகாப்பாக தனது இராணுவ மேலங்கியையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறான்.
1945.
காட்சி மாறுகிறது.
ஜெர்மன் போரில் தோற்கிறது. மீட்புப் படைகள் இவன் தங்கி இருக்கும் கட்டடங்களை அழிக்கிறது . ஜெர்மானிய மேலங்கியோடு இவன் வெளியே வருவதால் துப்பாக்கிகள் இவனை நோக்கி திரும்புகிறது. சிலையாகி நிற்கிறான்.
************************************************
விருதுகள்
இத்திரைப்படம் 3 அகாடமி விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகர்: பியானிஸ்ட் - அட்ரியன் ப்ரோடி
சிறந்த இயக்குனர்: ரோமன் போலன்ஸ்கி
சிறந்த தருவிக்கப் பட்ட திரைக்கதை.. : ரோனலடு ஹாவார்ட்
இது தவிர கேன்ஸ், பப்டா , கெய்சர் விருதுகளையும் அள்ளிக் குவித்தது.
வசூல்.
35 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப் பட்ட இத்திரைப்படம் 120 மில்லியன் டாலர்களை குவித்தது.
விமர்சனங்கள்
விமர்சன ரீதியில் இத்திரைப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக ப்ரோட்யின் நடிப்பு... இசையும், இயக்கமும் பற்றி நல்ல கருத்துகள் வழங்கப் பட்டன.
![]() |
| இவர்தான் உண்மையான ஸ்பில்மான் தனது சுய சரிதையில் அந்த அதிகாரி பற்றி நன்றியோடு கூறுகிறார்.... |
படம் முழுவதும் வருவது ப்ரோடி.. ஒரு போதும் சலித்துப் போகவில்லை... கண்களின் பின்னணியில் எப்போதும் நீர் நிறைந்திருக்க இவரின் நடிப்பு மிக அருமை. இன்னும் பல படங்களில் இவர் முத்திரை பதித்து உள்ளார்.
அதிகாரி தரும் ஜாமை கை நிறைய அள்ளி விரலை சூப்பி விட்டு கண்ணை மூடும்போது நமக்குள்ளும் அந்த அகோரப் பசியை உணர்த்தி விடுகிறார். எந்த இடத்திலும் மிகை நடிப்பை காட்டவில்லை.
குடும்பத்தையே இழந்து நிக்கும் சோகம், கண்முன்னே இறந்து போகும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போகும் அவலம், நன்றியுணர்வு... எல்லாம்.
உண்மையான பியானோ கலைஞனை போலவே அசத்தி விட்டார்... அவரது நடிப்பில் பல இடங்களை குறிப்பிட்டு சொல்லத் தோன்றுகிறது. ஆனால் பதிவின் நீளத்துக்கு அது வேண்டாம்.
இரண்டாவது இயக்குனர்..
தனது உணர்வை அப்படியே வெளிப்படுத்தும் நடிகர்கள் கிடைத்து விட்டதால் அசத்தி விட்டார். காட்சியமைப்புகள் பாத்திரப் படைப்புகள் அனைத்தும் மிக நேர்த்தியாக இருந்தது .எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளவில்லை... ஸ்பில்மான் கதாநாயகனோ அல்லது விடுதலை வீரனோ அல்ல... அவன் ஒரு அதிருஷ்டசாலி அவ்வளவே.
படம் மனித நேயத்தை வலியுறுத்துகிறது. கொடூரங்களுக்கு நடுவே சில நல்ல உள்ளங்கள்.... நட்புக்காக தனது நண்பனைக் காப்பாற்றும் ஒரு போலிஸ்... அவனை தலை மறைவாக பாதுகாக்கும் அவனது இசையை நேசிக்கும் தோழி... இசைக்காக எதிரிக்கு உதவும் ஒரு இராணுவ அதிகாரி.
ஜெர்மன் அதிகாரி அவனை விளிக்கும் பொது " ஏய்... யூதா.." என்றே அழைக்கிறான். சிறிதளவே வந்தாலும் அக்கதாப்பாத்திரம் நிறைந்து விடுகிறது..
இறுதியாக அந்த அதிகாரி யுத்தக் கைதியாக ஒரு முகாமில் கிடக்கிறான். அவர்களை நோக்கி செய்யப் படுகின்றன...
அவர்களில் ஒருவனிடம் தான் ஒரு யூதனுக்கு உதவியதாக சொல்கிறான்..
சொல்லியே ஆக வேண்டிய இன்னொரு விஷயம் இசை...
இசைக் கலைஞன் பற்றிய படம் என்பதால் படம் முழுக்க நிறைந்து மனதை வருடுகிறது.
பல புகழ் பெற்ற கலைஞர்களின் இசை பயன்படுத்தப் பட்டது.
அந்த உடைந்த சிதைவுகளுக்கு மத்தியில் அவன் மனதில் ஒலிக்கும் இசை மாமேதை பீத்தோவன் உடையது...
ஆகா மொத்தத்தில் நல்ல நடிப்பு, இயக்கம், திரைக்கதை, இசை...
இந்த நான்கிற்காக ஒரு முறை கட்டாயம் பார்த்து விடுங்களேன்.....
கொசுறு
அந்த ஜெர்மன் அதிகாரி ஹோசன்பெல்ட்.
1952 இல் ஒரு கைதியாக இறந்து போனார்...
உண்மையில் அந்த அதிகரி ஒரு பியானிஸ்ட்... இது பின்னாளில் தெரிய வந்தது. இசை எப்படி மனிதனை மாற்றி இருக்கிறது பார்த்தீர்களா ?
பியாநிச்டின் கைகள் வாசிப்பது ப்ரோடி அல்ல... அந்த க்ளோஸ் அப் ஒரு உண்மையான போலந்து பியானிஸ்ட் உடையது. உண்மைத் தன்மைக்காக இயக்குனர் எவ்வளவு உழைத்து இருக்கிறார் பார்த்தீர்களா?
நாம் அனைவருமே வரலாறு கற்றுக் கொடுப்பதை மறந்து விடுகிறோம். அவ்வளவு அடிபட்ட யூத இனம் இன்று இன்னொரு இனத்தினரை வதைக்கின்றனர் அல்லவா ?அங்குதான் மனது உறுத்துகிறது.
நன்றி.....
........................
........................
........................
அருண்பிரசாத் வரிக்குதிரை Rating: 4.5/5






