Wednesday, August 1, 2012

கடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் ........

கடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் ........

கள்ளத் தோணிகள்
வட கிழக்கு தமிழ் மக்கள் சிலரால் இந்திய வம்சாவளி தமிழர்கள் இவ்வாறு அழைக்கப் படுவது உண்டு. இலங்கையின் மத்திய  மலை நாட்டில் பிறந்த இன்றைய சந்ததி பிஞ்சுகள் சில கள்ளத்தோணியை மட்டுமல்ல, கடலைக் கூட கண்டிருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள்  கள்ளத் தோணிகள் தான் . ஏனெனில் அவர்களின் பாட்டங்களின் அப்பாக்கள் இங்கு வந்தேறிகள் தான்.

அவர்கள் வலுக்கட்டயமாக, விரும்பி அல்லது வயிற்றுப் பாட்டுக்காக இங்கு குடியேற்றப் பட்டவர்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் விரட்டியடிக்கப் பட்டவர்கள்.

தமிழர் என்றோர் இனமுண்டு, அவர்கட்கென்று ஒரு குணமுண்டு....
அப்படியான தமிழர்களின் ஒரு இருண்ட பக்கத்தைதான் இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்..

1850 களில் பிழைப்புக்காக உறவுகளை விட்டு வந்த தமிழர்களின் பிஞ்சுகள்.

இலங்கையின் தமிழ் உறவுகள் என்று பொதுவாகச் சொன்னாலும் இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் மூன்று இனத்தவர்கள் .

1. பாரம்பரியமாக வடக்கில் வாழ்ந்து வந்த இலங்கை தமிழர் .
2. பிரித்தானிய காலத்தில் குடியேற்றப் பட்ட இந்திய தமிழர்.
3. வியாபாரம் செய்யும் நோக்கில் காலத்துக்கு காலம் குடியேறிய முஸ்லிம்கள்.

இந்தியர்களை பொறுத்த வரை அவர்கள் தமிழர்கள் என்று அறிவது முதலாம் வகையில் சொன்னவர்களை . ... ஆனால்  தமிழ் நாட்டுடன் உள்ள தொப்புள் கொடி உறவை அறுப்பத இல்லையா என்று இன்று வரை புரியாமல் இருக்கும், பல தமிழர்களால் மறக்கப் பட்ட மலையக தமிழர் இரண்டாம் வகையினர்.

நான் பேசப் போவது அவர்களை பற்றிதான். உண்மையைக் கூறப் போனால் இது இன்றைய காலகட்டத்தில் பேசப் பொருள்தான். ஏனெனில் சமூக, பொருளாதார நிலையில் இன்னும் மேலே வரத் தடுமாறிக் கொண்டிருக்கும் சமூகத்தைப் பற்றிப் பேச உலகம் தயங்குகிறது.

1850 காலப் பகுதி.
இலங்கையில் பிரித்தானியர்கள் ஆழக் கால் பதித்த வேளை . தங்களுடைய வியாபார பலத்தையும் பெருக்கிக் கொள்ள அவர்கள் முடிவெடுக்கின்றனர். இலங்கையில் காடுகள் அழிக்கப் பட்டு பொருளாதாரப் பயிர்கள் நடப் படுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயர்களுக்கு தேவை பட்ட ஒரே விடயம் ஆள் பலம் மட்டும்தான்.

பலரும் நினைப்பது போல் தமிழர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தருவிக்கப் பட்டது தேயிலைப் பயிர் செய்கைக்காக அல்ல, கோப்பி பயிர்ச் செய்கைக்காக .

அது சரிதான். ஆனால்  இந்தியாவில் இருந்து தமிழர்கள் தருவிக்கப் பட்டதன் நோக்கம் என்ன ? இலங்கை பிரித்தானியர்கள் கையில் தானே இருந்தது ?
உண்மை, ஆனால் அதற்கு பதில் ராபர்ட் க்நோக்ஸ் என்ற அதிகாரி இங்கிலாந்து உயர் பீடத்துக்கு எழுதிய கடிதத்தில் கிடைக்கும்.

" பயிர்ச் செய்கைக்கு நன்கு உழைக்கும் திறனுடைய , மலிவான ஆட்கள் தேவை. ஆனால் சிங்களவர்கள் அதில் சரிவர மாட்டார்கள் . குறைந்த ஊதியத்துக்கு அவர்கள் சரியான உடல் உழைப்பைத் தருவதில்லை."

இவர்களின் தெரிவு தென் தமிழ் நாட்டில் இருந்த தமிழர்கள். ஏன் ? அதற்கான காரணங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.

இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பும் சரி, அதற்குப் பின்பும் சரி இவர்கள் சமூக ரீதியாக சந்தித்த அவலங்களும் சவால்களும் எண்ணிலடங்காதவை . இவர்களைப் பற்றிய பேசுபொருள் ஆழமானது மட்டுமல்ல, சர்சைக்கு உரியதும் கூட.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த கையோடு எப்படி லட்சக் கணக்கான தமிழர்கள் சக வடகிழக்கு தமிழர்களின் ஆசியோடு சிங்களவர்களால் நாடற்றவர்கள் ஆக்கப் பட்டார்கள்?

மொழி வழக்கு சற்று மாறு பட்டது தவிர்ந்த மற்ற எல்லா வகையிலும் தங்கள் சகோதரர்களான தமிழர்களை ஏன் இலங்கை தமிழர்கள் வெறுத்தார்கள்?

இவற்றுக்கான விடைகள் அவ்வளவு எளியவை அல்ல.
பதில்களுடன் ...........
மீண்டும் வருவேன் .

பி.கு.
நான் இங்கு குறிப்பிடுபவை யார் மனதையும் காயப் படுத்துவதற்காக அல்ல. தமிழர்களாக நாம் தவற விட்ட தருணங்களை மீட்டுப் பார்க்கவே முயல்கிறேன் . என் கருத்துகளில் ஏற்படும் பிழைகளுக்காக ஆரோக்கியமான வாதங்களுக்கு எப்போதும் நான் தயார்.

வரலாறு யாரையும் மன்னிப்பதில்லை , அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளாதவரை.....10 comments:

 1. ம்ம் எழுதுங்க தெளிவான எழுத்து நடை..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஹாரி .... உங்கள் அதரவு தொடர வேண்டும்.

   Delete
 2. அறியாத பல தகவல்கள்... தொடருங்கள்...

  உங்கள் தளம் இங்கே (http://newsigaram.blogspot.in/2012/08/kalyaanavaibogam-05.html) அறிமுகப்படுத்தி உள்ளது...
  வாழ்த்துக்கள்...

  பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

  ReplyDelete
  Replies
  1. நன்றி திண்டுக்கல் தனபாலன்!என் ஒவ்வொரு பதிவையும் நன்கு வாசித்து பின்ன்ட்டம் இடுகிறீர்கள் . அது எத்தகைய மன நிறைவை அளிக்கும் என்பது பதிவராகிய உங்களுக்கு தெரியும்! உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன். எப்பொழுதும் உங்கள் எழுத்துகளுக்கே துணை நிற்பேன்

   Delete
 3. வணக்கம் சொந்தமே.இயல்பு தப்பாது சரளமா தொடரும் எழுத்து நடை அருமை.இங்கு பேசப்படும் விடயம் ஆராயப்பட வேண்டியதே..தொடர்ந்து துணிந்து பேசுங்கள்.ஆரோக்கியமான பதில்கள் நிச்சயம் கிடைக்கும்.

  ReplyDelete
 4. நன்றி அதிசயா......

  ReplyDelete
 5. உங்கள் கட்டுரை டீட்டெயிலாக இருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்... முக்கியமான இடங்களை போல்ட் எழுத்துக்களில் காட்டியிருப்பது சிறப்பு..

  ReplyDelete
  Replies
  1. சிறிய நிறையையும் சுட்டுகிறீர்கள் நன்றி நண்பா!என்னைப் படிக்கும் அன்பர்கள் தொடர்ந்து படித்து பகிர்ந்து கொள்ள வேண்டும் . உங்கள் திரட்டியில் இணைந்து பெருமளவு வாசகர்களை கவர்வது எப்படி?

   Delete
 6. உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Azhahi.Com

  இப்படிக்கு
  Azhahi.Com

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வரவுக்கு மிக்க நன்றி... நிச்சயம் இணைந்து கொள்கிறேன்...

   Delete