பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முறைகேடாக நடந்ததை யாரும் மறுக்கவோ மன்னிக்கவோ முடியாது. ஆனால் அதற்கு ஹெயார் கூறியிருக்கும் விளக்கங்கள் அற்புதமானவை.
" பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நாகரீகம் தெரியாதவர்கள். அவர்கள் விளையாட்டை சரியாக விளையாடத் தெரியாதவர்கள். மற்ற அணியை எதிரிகளாகப் பார்ப்பார்கள்.எதிரணி வீரர்களை வசை பாடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. :" இப்படியெல்லாம் தொடர்கிறது ஹெயாரின் செய்யுள்.
சொல்பவரின் அணியின் லட்சணம் உலகே அறியும். எதிரணி வீரர்களை மிக மோசமாக வசை பாடுவதில் ஆஸ்திரேலியர்களை மிஞ்ச முடியுமா? நிறவெறியின் உச்சம் அல்லவா அவ்வணி? மற்ற அணியின் பலத்தை குறை கூறுதல், தோற்று விட்டால் நொண்டி சாக்கு சொல்லுதல் இதற்கேல்லாம் ரிக்கி பாண்டிங்கை விட ஒரு சிறந்த உதாரணத்தை சொல்ல முடியுமா? கடந்த போட்டியில் கூட ஆட்டமிழந்து விட்டு அநாகரிகமாக பாட்டை தூக்கி சேட்டை செய்தவர். இதெல்லாம் ஏன் ஹெயாருக்கு தெரியவில்லை?
யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். ஆனால் அதற்காக ஒருகுறிப்பிட்ட அணியை அல்லது நாட்டை எப்படி குறை கூறி தாக்க முடியும்? இவரின் வெறி பாகிஸ்தான் அல்லது குற்றங்கள் மீதல்ல. ஆசியர்கள் மீது.
முரளியின் விடயம், இந்திய வீரர்களைத் தூற்றுதல் இந்த விடயங்களால் எதை வெளிக் காட்டுகிறார்? விளையாட்டு உணர்வு மக்கிப் போய் கிடப்பது ஆசிய மண்ணில் அல்ல.
மேற்கத்தேயர்களுக்கு எப்போதுமே எந்தவொரு விடயத்திலும் தாங்கள்தான் சிறந்தவர்கள் என்ற இறுமாப்பு உண்டு. அதனாலேயே தங்கள் தவறுகளை ஒளித்து அடுத்தவர்கள் மேல் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். அதனை இப்பதிவு அழகாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது.
ReplyDelete