"ஷங்கரின் படைப்பு ", என்றவுடன் ரஜினி ரசிகர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம், அதற்கு காரணமும் சொல்கிறேன்.
ஷங்கர் ஒரு தனித்துவமான இயக்குனர் என்பதில் எனக்கு எந்த மாறுபட்ட கருதும் இல்லை. தமிழ் சினிமாவில் பல புதிய விடயங்களை புகுத்தியவர். ஆனால் அவர் பற்றிய விமர்சனங்கள் பல உண்டு.அவரது படங்களில் முன்னைய படங்களின் சாயல் தெரியும். லாஜிக் மீறிய தன்மை, நடைமுறை யதார்த்தத்துக்கு ஒத்து வராத நியாயங்கள்.... இப்படி எல்லாம். எந்திரன் இதில் சில தன்மைகளைக் கொண்டிருக்கிறான். ஆனால் விஷயம் என்னவென்றால் திரைப் படத்தின் பலமே அதுதான்.
ஒரு தரமான அதியுயர் தொழில்நுட்பப் படைப்பைப் பார்த்த அனுபவம் கிடைக்கிறது. ஹாலிவுட் படமல்ல. ஏனெனில் நம்மவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.
ஷங்கரின் கனவுப் படம். கொஞ்சமும் அலுக்க வைக்காத திரைக்கதை ஓட்டம். வேகமான தடங்கல் இல்லாத entertainer . இடத் தெரிவுகள் பற்றி சொல்லத் தேவையே இல்லை. சலித்து எடுத்திருக்கிறார். ஆனால் எல்லாவற்றையும் விழுங்கித் தின்றிருக்கிறது, கிராபிக்ஸ். செயற்கை என்று சொல்லவே முடியல. அதில் கூடுதல் கவனம், ரிஸ்க் எடுத்திருக்கிறார். ஏனென்றால் சில அருமையான விஷயங்கள் இதற்கு முன் கார்டூன் ஆன சந்தர்பங்கள் இருக்கின்றன.
பின்னணி இசை தனியாகத் தெரியவில்லை. கதையோடு ஒட்டி விட்டது. ஆஸ்கார் நாயகர் புகுந்து விளையாடிவிட்டார். கிலிமாஞ்சாரோ அரங்கை விட்டு வந்த பின்பும் காதிலேயே ஒட்டிக் கொண்டு விட்டாள்.
சண்டைக் காட்சிகள் இது வரை பார்க்கவே இல்லை. தமிழ் பட சண்டையா அது? Robot எப்படி மிரள வைக்கிறான்? + என்னவென்றால் வன்முறை வெறித் தனமாக ஒரு இடத்திலும் காணக் கிடைக்கவில்லை. மாறாக ஒரு வேகமான கால்பந்து ஆட்ட பார்த்த மாதிரி இருக்கிறது. கடைசி இருபது நிமிடங்கள் இருக்கையில் கட்டிப் போடுவது சண்டைக் காட்சிதான்.
திரைப் படத்தில் இன்னும் பலரின் உழைப்பு சுட்டிக்காட்டப் படாவிட்டாலும் , எல்லோருக்கும் ஒரு அருமையான படத்தைத் தந்ததற்கு நன்றிகள்.
படத்தில் ரஜினி, ஐஸ்வர்யா, ரோபோ ஆகிய மூவரும்தான் highlights . திரைக் கதையில் அது தேவையும் கூட. வில்லன் கொஞ்சம் மிரட்டி இருக்கிறார், கத்தாமல் அந்த mind game வில்லத் தனத்துக்கு ஒரு...... ஆனால் ரோபோ வில்லத் தனத்துக்கு முன்னாள் எல்லாம்.... "மே..மே..மே." ரசிகர்களை இப்படி மிரட்ட ரஜினிக்கு முடியுமா?
"இது எப்டி இருக்கு?"
ஐஸ்வர்யாவின் வயது கொஞ்சம் இடிக்கிறது. ஆனால் உலக அழகிதான் என்பதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியவில்லை. மறுபுறத்தில் ஒரு இளைஞனோடு அல்லவா நடிக்கிறார்? ரோபோவுக்கு அல்ல... ரஜினிக்கு வயதே இல்லை.
கடைசியாக, "ஷங்கரின் படைப்பு " என்பதற்கு காரணம் சொல்கிறேன். சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி ஷங்கரின் கனவே வாழ்ந்து கொடுத்திருக்கிறார். கலாபவன் மணியிடம் தப்பி ஓடுகிற காட்சியில் ..... இமேஜ் பார்த்தால் இப்படி நடிக்க முடியுமா? அதனால்தான் சூப்பர் ஸ்டார் .
தன்னை அடுத்த ராஜாவாக பீற்றிக் கொள்ளும் தளபதிகளுக்கு ஏன் இது புரியவே இல்லை?
குறை என எனக்குத் தெரிவது இரட்டை அர்த்த வசனங்கள்தான். அது தமிழ் சினிமாவின் சாபக்கேடா எனத் தெரியவில்லை!
என்னைப் பொறுத்த வரை இலங்கையில் நீண்ட வரிசையில் இப்படி நின்று, பெரும் கூட்டத்துடன் படம் பார்த்து நெடுநாளாகிறது. மறக்காமல் ஒரு முறையாவது பார்த்து விடுங்கள்.
Yes. It's a new attempt. So we can leave some minus points, But we can't accept it is a perfect movie.
ReplyDeleteஇந்த படத்தில் சில குறைகளை பொறுத்து கொள்ளலாம்.
ReplyDeletewhat is your content enthiran review but why you damage vijay image.stop the nonsence thought
ReplyDeletewhat is your content enthiran review but why you damage vijay image.stop the nonsence thought//
ReplyDeleteMy dear friend!
I didn't spoil Vijay's image. I wanted to see more from him. He has many talent amongst some others. Excellent dancer, actor and etc. But why should he waste them to the same punctured stories? I will be the first person to shout if we have to see same films like entiran.