அழுக்கு உடையுடன் பொலிதீன் பை சகிதமாக உள்நுழைந்தார் அந்த அரைக் கிழவன். முகத்தை வியர்வை ஆக்கிரமித்து இருந்தது. லேசாக குடித்து இருந்தது போலவும் இருந்தது. ஒரு பாண், சில மரக்கறிகள் வகையறாக்கள் பையில் இருந்திருக்கலாம்.
" ஐயா, காசு எடுங்க .." கூட்டத்தில் நீந்தினான் கண்டக்டர். மனிதர் தடுமாறி இருபது ரூபாயை நீட்டினார்.
"இறங்குரப்ப ரெண்டு ரூவா தாரேன்"
பின்னால் வந்த அரசுப் பேருந்துடன் ஒரு பந்தயம் காட்டி விட்டு அவசரமாக கிழவனை கழுதைப் பிடித்து தள்ளினான்.
"மிச்சம்..? "
"பிறகு எடுங்க .. டக்குனு இறங்குங்க.. இறங்குங்க.. "
அந்த மனுஷர் விடாப் பிடியாய் நின்றார். பின்னால் வரும் பஸ் நெருங்க கண்டக்டர் வேறு வழி இல்லாமல் ஒரு ரெண்டு ரூபாயை முகத்தில் விட்டெறிந்தான் . கிழவன் எதோ தூஷணம் பேசி விட்டு நகர்ந்து கேட்டது.
" குடிகாரன், இவனையெல்லாம் ஏத்தவே கூடாது. ரெண்டு ரூபாய்க்கு அலையுறான். " அவனை ஆமோதிப்பது போல சில சிரிப்புகள்.
இந்த சம்பவம் உங்கள் அனுபவத்தை சுட்டுச் சொன்னது போலக் கூட இருக்கலாம். சாதாரண விடயமாய் மறைந்து போயும் விடலாம். ஆனால் சம்யுதாய பிழைகளை எதிர்த்த ஒருவன் ஏன் அவமதிக்கப் படவேண்டும்?
அந்த இரண்டு ரூபாய்க்கு ஒரு இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளி படும் பாடு கொஞ்சம் இல்லை. பிச்சைக் காசு என அவமான படுத்தும் இவர்கள் அந்த சில்லறைக் காசுகளில் தானே பிழைக்கிறார்கள்? ஒரு ருபாய் குறைந்தாலும் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
குறை இவர்கள் மீது மட்டுமல்ல. அவர்களை ஆமோதித்து சிரிக்கும் நாங்களும் தான் குற்றவாளிகள்.
பள்ளித் தோழிகளின் நமுட்டு சிரிப்புக்கு பயந்து நாகரிகமாக two rupees இணை விட்டு விடும் இளைஞர்களும் பெற்றவனின் ரெண்டு ருபாய் வேதனை பற்றிப் புரிந்து கொள்வதில்லை.
படித்தவர் முலாம் பூசிய நாம் போலி கௌரவத்தை உதறித் தட்டிக் கேட்டால் மட்டும் தான் தினக் கூலிகளின் முகத்தில் சேறு பூசும் இவர்கள் திருந்துவார்கள்.
உங்க உணர்வு மிக நேர்மையானது... உங்க ஆதங்கம் தான் என் நிலையும்... ஆனா அதை அந்த இடத்தில் பேசையலாமல் போய் விகிறது .
ReplyDeleteஅது அவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது.
Word verification இதை எடுத்துவிடுங்க கருத்துரையிட சிரமமாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி திரு . கருணாகரசு ! நான் அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டேன்.
ReplyDelete