" தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் " திரை படத்தைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். உலகின் மிகப் புகழ் பெற்ற சைகொலாஜிகல் த்ரில்லர்களில் இதுவும் ஒன்று. அத்திரைப்படத்தைப் பற்றிய கண்ணோட்டம்தான் இது.
1991 இன் ஒரு காதலர் தினத்தில் வெளிவந்த திரைப்படம் " தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் ". காதலர் தினத்தில் வெளிவந்ததே ஒழிய காதலின் மறு உருவமான வன்முறை தொடர்பான கதைக்களத்தைக் கொண்டிருந்தது. வெறும் த்ரில்லர்தானே என நினைக்க வேண்டாம். 1991 இன் சிறந்த படத்துக்கான விருது இதற்குதான் கிடைத்தது.
இப்படம் பற்றிய எனக்கான அறிமுகம் மதன் எழுதிய " மனிதனுக்குள் ஒரு மிருகம் " என்ற புத்தகத்தின் வாயிலாகக் கிடைத்தது. அந்நூலின் ஊடாக இப்படம் ஒரு புகழ் பெற்ற திரைப்படம் என அறிந்துகொண்டேன். நெடுநாட்களாக இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அண்மையில்தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.
திரைக்கதை:
" சீரியல் கில்லர்கள்" பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ( சீரியல்களில் தோன்றி எம் உயிரை எடுப்பவர்கள் அல்ல)
இந்த மனநோயாளிகள் தங்களுக்கு எதோ ஒரு காரணத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் கொலைகாரர்களாக மாறி விடுவார்கள். அதுவும் கொலை செய்வது அவர்களுக்கு ஒரு தாகமாக மாறிவிடும். அவர்களைப் பற்றிய ஒரு திரைப்படம். மனோ தத்துவவியல் டாக்டர்களைப் பொறுத்தவரை ஒரு ஆய்வு ரீதியிலான திரைப்படம்.
அமெரிக்காவில் " buffalo bill " என்ற கொடூரமான கொலையாளி வலம்வருகிறான். மனிதர்களை கொலை செய்து அவர்களின் தோலை தைத்து ஆடையாக அணியக் கூடிய கொடூரன் அவன். அவனைக் கண்டு பிடிப்பதற்காக FBI இல் பயிலும் நிலை மாணவியான ஒரு இளம் பெண் நியமிக்கப் படுகிறாள். ( ஸ்டார்லிங்) எந்தவொரு தடயமும் இல்லாத நிலையில் அவள் உதவிக்கு நாடுவது, டாக்டர் . லெக்டர்.
டாக்டர். லெக்டர் ஒரு முன்னால் மனநோய் மருத்துவர்... இந்நாளில்?
ஒரு தொடர் கொலையாளி, மனநோயாளி...
கடும் காவலுக்கு மத்தியில் உள்ள லெக்டரை , ஸ்டார்லிங் சந்தித்து உரையாடுகிறாள். அவனின் வன்மம் கொண்ட மன நிலையினூடாக கொலையாளியைக் கண்டு பிடிக்க முயல்கிறாள். அதற்கு லேக்டரின் நம்பிக்கையை அவள் பெறவேண்டும். அதற்காக அவள் அவனை விடுவிப்பதாக வாக்களிக்கிறாள்.
இதற்கிடையில் அமெரிக்க செனட்டரின் மகள் அடுத்து கடத்தப் படுகிறாள். அவளை உடனடியாகக் கண்டுபிடிக்க லேக்டரிடம் உதவி செய்யுமாறு கெஞ்சுகிறாள் ஸ்டார்லிங். ஆனால் பதிலுக்கு லெக்டர் கேட்பது ஸ்டார்லிங் இன் கசப்பான கடந்த காலத்தை....
லெக்டர் கொலையாளியின் மனநிலை, இடம், பெயர் யாவற்றையும் ஒவ்வொன்றாக சொல்கிறான்.... ஆனால் அனக்ராம் ( Anagram ) வடிவில். ( எழுத்துகளைக் குழப்பிய வடிவில்)
ஸ்டார்லிங் அனைத்து புதிர்களுக்கும் விடை தேடி கொண்டு புறப்படுகிறாள்.. இதற்கிடையில் சிறையிலிருந்து கொடூரமாகவும், மிக புத்திசாலித்தனமாகவும் தப்பிக்கிறான் லெக்டர். இதன் பிறகு என்ன நடக்கிறது? கொலையாளி பிடிபட்டனா, லெக்டர் என்ன ஆனான் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த திரைப்படம்.
படம் முழுவதும் சுவாரசியம், விறுவிறுப்பு என்பவற்றுக்கு பஞ்சமே இல்லை.
டாக்டர் லெக்டர் , கடும் காவலைத் தாண்டி தப்பிக்கும் காட்சி.... அப்பப்பா! அபாரமாக இருக்கும். பல ஹிந்தி, தமிழ் படங்களில் காப்பி அடித்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
டாக்டர் லெக்டர் , கடும் காவலைத் தாண்டி தப்பிக்கும் காட்சி.... அப்பப்பா! அபாரமாக இருக்கும். பல ஹிந்தி, தமிழ் படங்களில் காப்பி அடித்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஸ்டார்லிங் லேக்டரின் பழைய அறைக்குள் போய் ஆய்வு செய்யும் போது ஒண்ணுமே இல்லாத சீனில் சும்மா மிரட்டி இருப்பார்கள். அறைக்குள் செல்லும் போது ஆணி ஒன்று அவளின் காலைப் பதம் பார்க்கும் போது நமக்குள் எதோ செய்கிறது. அப்படிக் காட்சி அமைத்து இருப்பார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக லேக்டரின் அனக்ராம். வார்த்தைகளை சுழற்றி, படிப் படியாக பொடி வைத்து ..... அப்பாடா! எவ்வளவு கஷ்டம்?
ஸ்டார்லிங் இன் கடந்த காலத்தை தனியாக காட்டி கடுப்பேற்றவில்லை. மாறாக காட்சிகளோடு நகர்த்துகிறார்கள்.
மகளை இழந்த தாயின் பரிதவிப்பு, டாக்டரின் திமிர், எல்லாவற்றையும் அசலாகக் காட்டி உள்ளார்கள்.
ஸ்டார்லிங் ஏன் இந்த வழக்கில் இவ்வளவு அக்கறை காட்டுகிறாள்? அவள் மனத்தைக் காயப் படுத்தியது என்ன?
எல்லாவற்றுக்கும் விடை பிணைந்து உள்ளது.
விருதுகள்
அடிப்படை விருதுகள் ஐந்திலும் அகாடமி விருது பெற்ற திரைப்படம் இதுதான்.
1 . சிறந்த திரைப்படம் 1991
2 . சிறந்த நடிகை : ஸ்டார்லிங் ஆக நடித்த Jodie Foster
ஒரு இளம் அதிகாரியாக மிரட்டுகிறார். துணிச்சல் நிறைந்த பெண்ணாக, மனிதாபினம் மிக்க பெண்ணாக என பல உணர்சிகளையும் கைவசம் வைத்துக் கொண்டிருக்கும் இவருக்கு இவ்விருது கிடைத்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது.
3 . சிறந்த நடிகர் : டாக்டர் ஹனிபல் லெக்டர் ஆகா நடித்த Anthony Hopkins
படத்தில் மொத்தம் 16 நிமிடங்கள்தான் வருகிறார். ஆனால் மனநோய் கொண்ட டாக்டராக இவர் மிரட்டுவதைக் கண்டால் வியக்காமல் இருக்க முடியாது.
4 . சிறந்த இயக்குனர்: Jonathan Demme
படத்தின் முக்கியமான பலமே திரைக்கதைதான், ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு வார்த்தையிலும் விறுவிறுப்புடன் நகர்கிறது.
காட்சியமைப்பு ஒவ்வொன்றும் தனித்துவமானவை. கதையில் சொற்ப களங்களே காணப்படுகின்றன.பிரதானமாக pittsburgh , பென்சில்வானியா , மேற்கு வர்ஜீனியா போன்ற இடங்களில் படமாக்கப் பட்டுள்ளது.
இக்கதை 1988 இல் வெளிவந்த இதே
தலைப்பிலான நாவலை தழுவி எழுதப் பட்டது. எழுதியவர் தாமஸ் ஹாரிஸ் .
1973 இல் வெளிவந்த The Exorcist திரைப்படத்துக்கு பின்னர் ஹாரர் திரைப்படங்களில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட ஒரே திரைப்படம் இதுதான்.
சிறந்த ஒலியமைப்புகும், எடிட்டிங் இற்கும் பரிந்துரைக்கப் பட்டது.
போதாக் குறைக்கு கோல்டன் க்ளோப் விருதுகளையும் அள்ளிச் சென்றது.
போதாக் குறைக்கு கோல்டன் க்ளோப் விருதுகளையும் அள்ளிச் சென்றது.
வசூல்:
வசூல் விஷயத்திலும் சளைக்கவில்லை..
படத்தின் தயாரிப்பு செலவு 19 மில்லியன் அமெரிக்க டாலர்.
வசூல் 272 மில்லியன் அமெரிக்க டோலர்களை அள்ளிக் குவித்தது.
விமர்சனங்கள் :
விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. காட்சியமைப்பில் காணப் பட்ட வன்முறை காரணமாக சில எதிர்ப்புகளையும் சம்பாதித்தது,.
IMDB rating : 8 .7 /10
இவ்வளவும் சொல்லியாயிற்று ஒரு முறை கட்டாயம் பார்த்து விடுங்கள். ஏனென்றால் போன நூற்றாண்டின் சிறந்த படங்களுள் ஒன்று என அமெரிக்க பிலிம் அகாடமி ஆல் தேர்ந்தெடுக்கப் பட்ட படம்.
இன்னொன்றையும் சொல்ல மாறந்து விட்டேன்.
இது கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான திரைப்படம். பாலியல் வக்கிர உணர்வு கொண்ட காட்சிகள் திரைப் படத்தில் இல்லை ; ஆனால் சொல் பாவனை, வன்முறை, போன்ற காட்சிகள் நிச்சயம் சிறுவர்களுக்கு உகந்ததல்ல.
ஆனால் வன்முறையை கொப்பளிக்கக் காட்டவேண்டும் என்ற நோக்கம் படம் முழுக்க இல்லை. (I Saw the Devil , Saw ...) சில காட்சிகள் படத்துக்கு நிச்சயம் தேவைப் பட்டவைதான்.
உதாரணத்துக்கு ஸ்டார்லிங் முதன்முதலில் மனநோயாளிகளின் இடத்துக்கு செல்லும் போது ஏற்படும் அவமானம், கொலைகாரன் இறந்த பெண்ணின் முதுகிலிருந்து தோலை உரித்தெடுத்த காட்சிகள், பிரேத பரிசோதனை முதலிய காட்சிகளைக் காண சகிக்காது. இளகிய மனம் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால் வன்முறையை கொப்பளிக்கக் காட்டவேண்டும் என்ற நோக்கம் படம் முழுக்க இல்லை. (I Saw the Devil , Saw ...) சில காட்சிகள் படத்துக்கு நிச்சயம் தேவைப் பட்டவைதான்.
உதாரணத்துக்கு ஸ்டார்லிங் முதன்முதலில் மனநோயாளிகளின் இடத்துக்கு செல்லும் போது ஏற்படும் அவமானம், கொலைகாரன் இறந்த பெண்ணின் முதுகிலிருந்து தோலை உரித்தெடுத்த காட்சிகள், பிரேத பரிசோதனை முதலிய காட்சிகளைக் காண சகிக்காது. இளகிய மனம் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கவனிக்கத் தக்கவை:
ஒரு த்ரில்லர் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கான அத்தனை விடயங்களும் இருக்கும். ( நன்றாக கவனித்துப் பாருங்கள் வேட்டையாடு விளையாடு " திரைப் படத்தில் இப்படத்தின் பாதிப்பை காணலாம். அதே கௌதம் மேனன் " நடுநிசி நாய்கள்" மூலம் காமெடி பண்ணினார்)
நடிகர்கள் அத்தனை பெரும் தமது காட்சிகளை சரிவரப் பொருந்தி நடித்திருப்பார்கள்.
ஹோப்கின்சின் நடிப்பு பெரிதும் புகழப் பட்டது. ஒரு தொடர் கொலையாளியின் மன நிலையை பிரதிபளிப்பதட்காக கடும் முயற்சி, பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அவரது மட்டுமல்ல, இந்த திரைப் படத்தின் பல வேடங்களும் முன்னணி நடிகர்களால் நிராகரிக்கப் பட்டது. அதற்காக நிச்சயம் வருந்தியிருப்பார்கள்.
மனதை ஒரு வித படபடப்போடு கதையுடன்
ஒன்றச் செய்யும் இசை....
பின்னணியில் ஓடும் மெல்லிய இசை எப்போதும் மனதுக்குள் அந்த பய உணர்வை மாற்றாமல் பார்த்துக் கொள்கிறது. சிறந்த இசைக்கான விருதுக்கும் பரிந்துரை செயப்பட்டது. ஆனால் டேர்மினட்டர் பாகம் 2 அந்த விருதை அவ்வாண்டில் பெற்றுக் கொண்டது.
psycho பற்றிய படங்களில் இன்றளவும் பேசப் படும் இரண்டு படங்களுள் ஒன்று.
ஒன்று கருப்பு வெள்ளையில் வெளிவந்த " psycho " . மற்றது இது.
எனது முதல் திரை விமர்சனம் .. பிடிச்சிருக்கா?
பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்... அப்படியே உங்கள் கருத்துகளையும் சொல்லிவிட்டு போங்களேன்.
நன்றி....
மண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3
காயத்துக்கு மருந்து போடும் " சோபாலபுரம்"
தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் " - திரைப்படம் ஒரு கண்ணோட்டம்
........................
........................
........................
அருண்பிரசாத் வரிக்குதிரை Rating: 4.5/5
படத்தைப் பற்றிய சுருக்கமான விமர்சனம் என்றாலும் அருமை...
ReplyDeleteஆனால், திரைக்கதை, சிறந்த நடிகை, நடிகர், இயக்குனர், வசூல், விருதுகள் என நல்லதொரு தொகுப்பு.... பாராட்டுக்கள்... நன்றி...
நன்றி தனபாலன் அவர்களே... நிச்சயமாக சுருக்கமாக சொல்லி விட வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் காட்சியமைப்பு, கதை என்பவற்றை இன்னும் கொஞ்சம் கூறினால் கூட த்ரில் போய்விடும். அப்படிப் பட்ட த்ரில்லர் இது. கட்டாயம் ஒரு முறை பாருங்கள்.
Deleteமுதல் விமர்சனம் திரில் எடுத்துளீர்கள்.. வாழ்த்துக்கள்.. எனக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும்..
ReplyDeleteநீங்க எழுதுனத தவிர படத்தில நிறைய விஷயங்கள் இருக்கு.. நீங்க சொல்லாம விட்டதே ஒரு வகையில் நல்லம் தான்.. நண்பா விருதுகள் பற்றி சிறிய நோட் போடுங்க.. அதிகம் எழுத அவசியம் இல்லை... அல்லது ஒரு லிங்க் போட்டுடுங்க.. காரணம் விமர்சன அடர்த்தி குறைந்த போல இருந்துச்சு.. வாழ்த்துக்கள்
நிச்சயமாக நண்பா... படத்தில் இன்னும் எவ்வளவோ இருக்கு ... ஆனால் நான் ஏன் சொல்லாம விட்டேன்னு படம் பார்த்த உங்களுக்கு தெரியாமலிருக்காது.... அந்தப் புலன்விசாரணை, ஸ்டார்லிங் அந்த கோப்புகளைத் தேடுவது இது போன்ற காட்சிகளை கொஞ்சம் விளக்கினாலும் படத்தின் சுவாரசியம் குறைந்து போய்விடும். விருதுகள், கதை பற்றி கொஞ்சமாக சொன்னது எல்லாம் வாசகர்களுக்கு பார்க்கும் ஆர்வத்தைக் கூட்டுவதட்காகத்தான்.
Deleteசெம த்ரில்லர் படம், ரொம்ப அழகா படத்தை பத்தி விமர்சனம் பண்ணி இருக்கேங்க. Hannibal Lecter சீரீஸ் கூட வந்திச்சு. அதுல இந்த படம் தான் பெஸ்ட்.
ReplyDeleteதமிழ்ல கமல் Lecter பண்ணுனா ரொம்ப நல்லா இருக்கும்...
ரொம்ப நன்றி ராஜ்.. அந்த சீரீஸ் பத்தி உங்க மூலமா தெரிஞ்சுகிட்டேன் . கண்டிப்பா பாத்துட்டு உங்க கூட பகிர்ந்துக்கறேன். என் வலைபதிவில் இணைந்து கொள்ளுங்கள் ராஜ்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
Deleteகண்டிப்பா நண்பா, இனைந்து விட்டேன், இனி அடிக்கடி சந்திப்போம்... :)
ReplyDeleteநிச்சயமாக நண்பா... நம் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்போம்...
DeleteNice boss
ReplyDeleteThanks Thambi..... என்ன பாரதி? கருத்துரை சுருங்கிடுச்சு?
DeleteThank uou so much Krish! Thanks for your first visit. Come and join my website
ReplyDeleteஇந்த படம் இன்னும் பாக்கலை, அறிமுகத்துக்கு நன்றி, நல்லா சொல்லியிருக்கிங்க..தகவல்களின் தொகுப்பும் அருமை. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே... தொடர்ந்தும் உங்களின் கருத்துகளை எதிர் பார்க்கிறேன்...
Deleteநல்ல விமர்சனம்.
ReplyDeleteதொடருங்கள் ...
நன்றி அண்ணா....
Deleteஎனக்கு படம் பார்க்க பிடிக்காது எனினும் தங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை எழுப்புகிறது அருமை தொடருங்கள். வாழ்த்துக்கள்.
Deleteமிக்க நன்றி சசிகலா... உங்களின் பாராட்டு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... தொடர்ந்தும் என் பதிவுகளை வாசியுங்கள்..
Deleteஇதுவரை வந்த சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்று. ஹானிபல் லெக்டர் சீரிஸிலும் சிறந்த படம் இது. பார்க்காவிட்டால் முழுவதும் எடுத்துப் பாருங்கள் (Man Hunter எனக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை)
ReplyDeleteஆரம்பமே நல்ல படமாக விமர்சனம் பண்ணியிருக்கீங்க. தொடருங்க. :)
நன்றி ஹாலிவூட் ரசிகன். நான் உங்கள் விமர்சனகளுக்கு ரசிகன். உங்களின் பின்னூட்டம் மிகத் தன்னம்பிக்கையைத் தருகிறது... எனது பதிவுகளோடு இணைந்து கொள்ள வரவேற்கிறேன்.
Deleteவிமர்சனத்தை தெள்ளத் தெளிவாக பல்வேறு தகவல்களுடன் எழுதி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் தொடருங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி முரளிதரன் அவர்களே... உங்கள் பின்னூட்டத்துடன் நீங்கள் என் தளத்துடன் இணைவது மனதுக்கு பெரும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
Deleteபடம் பார்க்க கிடைக்கவில்லை,விமர்சனம் பார்க்கத்தூண்டுகிறது நண்பரே.....தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteநன்றி தோழா... தொடர்ந்தும் என் பதிவுகளோடு இணைந்திருங்கள்...
Deleteஉங்கள் அறிமுகப் பக்கத்தில் எனது பதிவுக்கு அறிமுகம் தந்து பெரிய கௌரவத்தை அளித்துள்ளீர்கள். என் தன்னம்பிக்கைக்கு ஒரு மருந்தாக ஏற்றுக் கொள்கிறேன். மேலும் பல வாசகர்களை எனக்குப் பெற்றுத் தரும் என நம்புகிறேன். நன்றி நண்பரே....
ReplyDeleteநல்ல விமர்சனம் கொடுத்திருக்கீங்க...
ReplyDeleteநன்றி நண்பரே....
Deleteசிறப்பானதொரு படத்தோட உங்கள் விமர்சனங்களுக்கு அடிக்கல் நநாட்டியிருக்கிறீர்கள்.. தெளிவாகவும், ரசிக்கும் படியும் எழுதுகிறீர்கள்..
ReplyDeleteஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. அடுத்து விமர்சனம்/திரைக் கண்டோட்டங்கள் எழுதும்போது, திரைப்படத்துடன் தொடர்புடைய படங்கள் சிலவற்றை பதிவில் சேர்க்கலாமே.. அப்போது கொஞ்சம் interactive ஆக ஃபீல் பண்ண முடியும்!
அருமையான யோசனை நண்பா... இதுக்குதான் உங்கள மாறி மேல்மாடி நிறஞ்சவங்க நாலு பேரைக் கூட வச்சுருக்கனுங்கறது .... அடுத்த பதிவிலிருந்து செய்றேன் நண்பா... உள்ளடக்கத்தைப் பத்தி யோசிச்சேன். இது தோணவே இல்லை.... என் வலைத்தளத்தில் இணைந்ததற்கும் நன்றி நண்பா...
DeleteThank yo Buddy....
ReplyDeleteThanks Krishna... Thanks again for joining my Blog...
ReplyDelete:)
ReplyDeleteஅதானே! எங்க வெற்றிய காணமேன்னு பாத்தேன். நன்றி நண்பா... சிகரம் கதை போடாம ஏமாத்திட்டான் போல ?
Deleteஆமாம் அவர் மழையில் மாற்றிக் கொண்டு திண்டாடிக் கொண்டு இருக்கிறேன் என்று காரணங்கள் கூறுகிறார்.
Deleteநான் இந்த பதிவிற்கு நிறைய எழுதலாம் என்று தட்டினேன். என்ன நினைத்தேனோ தெரியவில்லை அனைத்தையும் அழித்துவிட்டு சிரிப்பை மட்டும் தழுவச் செய்து செய்து விட்டேன்...
ஏனோ தெரியவில்லை நண்பா, நானும் பல இடங்களில் பார்த்து விட்டேன், சினிமா செய்திகள், விமர்சனங்கள் என்றாள் ஒரு கூட்டம் கூடி விடுகிறது, தாங்களே இதனை அவதானிக்கலாம், தாங்கள் நிறைய எதிர்பார்ப்புகளுடன் எழுதிய பதிவுகளை விட இந்த சினிமா விமர்சனம் அதிகம் கவனிக்கப் பட்டிருக்கும் என நான் நினைக்கிறேன், அது சரியா என்பது உங்களுக்குத் தான் தெரியும் நண்பரே!!!
ஏனோ எனக்கு இந்த பழக்கம் பிடிக்க வில்லை. நானும் சினிமா ரசிகன் தான். எனது பழக்கம் படம் பார்ப்பதோடு சரி. அதற்க்கு மேல் ஏதும் இல்லை. சினிமா என்றாலே ஓர் தனி விளம்பரம் கிடைத்து விடுகிறது, பலர் சில பதிவுகளுக்கு இடையில் சினிமா செய்திகள் செருகுவது 'வாரப் பத்திரிக்கை இடையில் கவர்ச்சி படங்களை சொருகுவதர்க்கு ஒப்பாகும்' என தோன்றுகிறது. தற்போது இணைய வசதிகள் பெரியதாக பெருகி விட்டது. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் பார்த்தால் அதனை பார்க்கவே ஓர் கூட்டம் தனியாக இருக்கும். அப்படி தான் இதனை என்னால் பார்க்க இயலுகிறது, என்னடா இரவின் புன்னகை இப்படி கூறுகிறான் என்று தாங்கள் தவறாக நினைக்க வேண்டாம். இது எனது சொந்தக் கருத்து மட்டுமே தோழா, நான் இதனை திணிக்கவில்லை.
நான் சில காலம் பத்திரிக்கையாளனாக இருந்த போது இப்படித்தான் செயவார்கள். ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது...
தாங்கள் நிறைய எதிர்பார்ப்புகளுடன் எழுதிய பதிவுகளை விட இந்த சினிமா விமர்சனம் அதிகம் கவனிக்கப் பட்டிருக்கும் என நான் நினைக்கிறேன்//
Deleteநூறு சதவீதம் உண்மை நண்பா...
சில பதிவுகளுக்கு இடையில் சினிமா செய்திகள் செருகுவது 'வாரப் பத்திரிக்கை இடையில் கவர்ச்சி படங்களை சொருகுவதர்க்கு ஒப்பாகும்' என தோன்றுகிறது.//
Deleteநிச்சயமாக இல்லை தோழா.. நான் ஒரு சினிமா ரசிகன்... இந்த பதிவை நெடுநாள் ட்ராப்டில் போட்டு வைத்திருந்தேன். போட்டால் வரவேற்பு கிடைக்குமா என்று பயந்தேன். ஆனால் இதனை அப்படி ஒரு கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. என் விமரிசனம் முழுவதும் பாருங்கள். நான் விமர்சனப் பார்வையில் துளியளவு விலகி இருக்கிறேனா? சும்மா பக்கப் பார்வை வேணும் என நினைத்து குப்பைகளை எழுதினால் தாராளமாக இதைவிடக் கடுமையாக இன்னும் உரிமையோடு திட்டுங்கள். அப்படி ஒரு பதிவு நான் போட மாட்டேன்.
நல்ல சினிமா என்று நான் சொன்னால் நாலு பேர் பார்ப்பார்கள்... அதற்காக எழுதுகிறேன்.
Deleteவிஜய் பற்றிய பதிவை வெளியிட்டேன். இப்போது அல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னால். அவரின் மோசமான படங்களைப் பார்த்த கோபத்தில்... அப்போது எனக்கு பெரிதாக அறிமுகம் இல்லை. பதிவு சக்கை போது போட்டது. இந்த லிங்க் பாருங்கள்.
http://varikudhirai.blogspot.com/2010/10/2.html
நான் நினைத்திருந்தால் அதே போல பதிவுகள் போட்டிருக்கலாமே? நான் தனிப்பட்டு யாரையும் தாக்குவதில்லை. ஆனால் போது வாழ்வில் உள்ளவர்கள் தவறு செய்து அதில் வெளியார் பதிக்கப் பட்டாள் அதனை எதிர்ப்பேன்.
என் எல்லாப் பதிவுகளுக்கும் அன்பர்கள் நிச்சயம் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள் நண்பா... ஆனால் எல்லாப் பதிவுகளுக்கும் அதிக மறுமொழி இல்லையே,.. என்றாதங்கம் நிச்சயமாக எனக்கு உள்ளது...
Deleteஉங்கள் ஆதங்கம் எனக்கு நன்றாக புரிகிறது நண்பா. கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. நல்ல மாடு சந்தையில் நல்ல விலை போகாது, நல்ல கொல்லை என்று விளைந்துள்ளது. அது போல் தான் வலையுலகமும் நண்பா. நாம் நமது பணியை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செவ்வனே செய்வோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல். எதிர்பார்ப்பு இருந்தால் நமக்கு ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும்.
Deleteஉங்கள் முழு விமர்சனத்தையும் பார்த்தேன் நண்பா, அதில் உங்கள் உழைப்பு நன்றாக தெரிகிறது. வலைசரத்தின் அங்கீகாரம் கிடைத்தபோதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இன்னும் தொடருங்கள். நானும் உலக சினிமாவின் ரசிகன். படம் பார்ப்பதோடு மட்டுமே. தங்கள் அளவிற்கு இல்லை நண்பா. தொடருங்கள். தாங்கள் ஒரு நல்ல சினிமா விமர்சகராவதர்க்குரிய தகுதிகள் நிறைய உள்ளது. அதற்க்கேன புது தளம் உருவாக்கினாலும் எனது ஆதரவு தங்களுக்கு நிச்சயம் உண்டு நண்பா...
நன்றி நண்பா ... உங்கள் கருத்துக்கு மறுமொழி தந்தேன்... அவ்வளவுதான். நிச்சயமாக நான் நோக்கம் இல்லாமல் எழுதவில்லை எனப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். தொடர்ந்தும் நம் பணியை செவ்வனே செய்வேன். ஆதரவுக்கு நன்றி நண்பா...
Deleteவணக்கம்.அப்பாடா ஒரு மாதிரி நம்ம வரிக்குதிரை பதிவுக்கு வந்தாச்சு.நச்தோசம்.அதிலயம் என்ன ஒரு சோகம் இந்தப்படம் இன்னும் பாக்கல.கட்டாயம் பார்க்கிறேன்ஃவிமர்சனம சிறப்பாக வருகிறது.விமர்சன கிங் நம்ம ஹரி இருக்காரு.அவர் பாத்துப்பாரு....வாழ்த்துக்கள் நண்பா.தாமதத்திற்கு மன்னிக்கவும் .நிச்சயம் சந்திப்போம தொடர்ந்தும்.
ReplyDeleteநன்றி அதிசயா.. விமர்சனம் போட்டு விட்டு பயத்தோடு காத்திருந்தேன். பல சிங்கங்கள் இருக்கின்றனர் ... நான் கொஞ்சம் வித்தியாசமாக எழுத வேண்டும். அதன் சாயலில் எழுதிவிடக் கூடாது என்று நினைத்தேன். உங்கள் மதிப்புரைகள் எனக்கு புதுத் தெம்பை அளிக்கின்றன... தாமதமாக வந்தால் பரவாயில்லை. ஆனால் கட்டாயம் வந்துவிடுங்கள். நான் காத்திருப்பேன்.
Deleteவலைச்சரத்தில் இடம் பிடித்த நண்பருக்கு மிகுந்த பாராட்டுகள்... உழைப்பிற்கேற்ற ஊதியம் காட்டாயம் கிடைக்கும்...
ReplyDeleteஉண்மை நண்பா... நான் பதிவுலகை விரும்பக் காரணமே அதுதான். இங்கு நன்றாக ஏதும் எழுதினால் தட்டும், தப்பாக ஏதும் எழுதினால் குட்டும் கிடைக்கும். மற்ற துறைகளைப் போல் இங்கு போட்டிகள் உண்டு ஆனால் பொறாமைக்கு இடம் இல்லை... வலைச்சரத்தில் அங்கீகாரம் கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். நாடோடி அவர்களுக்கு நன்றி...
Deleteமேல் உள்ள எனது கருத்துக்கு பதில் இன்னும் வரவில்லையே நண்பா...
Deleteநேரம் கிடைக்கவில்லை நண்பா... வேறொன்றும் இல்லை ... என் வலைப்பூவில் கருத்துகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு..
Deleteநண்பா, எனது பதிவும் வலைதளத்தில் அறிமுகமாகயுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... சிகரம் பாரதி எப்படி உள்ளார்? அவரது இயற்பெயர் என்னவென்று அறிந்துகொள்ள இயலுமா? கடும் மழை என்று கூறினார்? எப்படி உள்ளார், அவரை விசாரித்தேன் என்று கூறுங்கள்...
ReplyDeleteஒரு விண்ணப்பம்:
இடப்புறம் கீழே உள்ள Share பொத்தான் மிகவும் தொந்தராவாக உள்ளது. கருத்துரை இடும் போதும் மற்ற நேரங்களிலும். விஜய் பற்றிய பதிவை படித்து விட்டு கருத்து வழங்குகிறேன்....
அப்படியே எந்தன் இரவினுள்ளும் வந்து களித்துவிட்டுச் செல்லுங்கள்
நானும் மதனின் மனிதனுக்குள் ஒரு மிருகம் புத்தகம் படித்துள்ளேன் .படிக்க கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. உளவியலில் ஆர்வம் காரணமாக கடின மனத்துடன் தான் படித்து முடித்தேன்.வாழ்வியலுக்கும் பயன்படும் எனவும் எண்ணினேன். பல தொடர் கொலைகளுக்குக் காரணம் இளவயதில் மனதில் ஏற்பட்ட பாதிப்பு என்ற ரீதியில் கொண்டு சென்றிருந்தார். நீங்கள் படம் குறித்து கூறியுள்ள விவரங்கள் படம் பார்க்கும் ஆவலை(பயத்துடன் கூடிய) தூண்டியது நிஜம். தகவலுக்கு நன்றி.
ReplyDeleteஉண்மையிலேயே மனோவியல் பற்றிய படங்கள் நன்றாகவே இருக்கும். உண்மையிலேயே அது ஒரு நல்ல புத்தகம் இது ஒரு நல்ல திரை படம், மறக்காமல் ஒருமுறை பாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி....
Delete