உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளது. வழமை போலவே வாக்களிக்கும் ஆர்வம் மக்களிடம் மந்தமாகவே இருந்தது. ராமன் ஆண்டாலும் ? ........
மலை என உயர்ந்து நிற்கும் விலை வாசிக்கு நடுவில் வேற்று நாடகமாகவே நடந்தேறியிருக்கிறது. நாட்டின் சகல மக்களையும் ஆடி வைத்துக் கொண்டிருக்கும் பொருளாதாரம் குறிப்பாக தாக்குவது மலையகத் தோட்டத் தமிழர்களை தான்.
இந்தவிடத்தில் ஒன்றை கட்டாயம் சொல்லியாக வேண்டும். மலையகத் தமிழர்கள் என்றொரு இனம் இருப்பதை தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய துர் பாக்கியமும் இருக்கவே செய்கிறது.
அண்மையில் செம்மொழி ( குடும்ப) மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற மலை நாட்டு தமிழ் கவிஞர் ஒருவர் மனவருத்தத்தோடு தெரிவித்த விடயத்தையும் இங்கு சொல்லி ஆக வேண்டும்.
தனை விழாவில் மலை நாட்டு தமிழ் கவிஞர் என அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
" அப்படி என்றால்...?"
" மலை சாதி மக்களா?"
அந்த தமிழர் நொந்து போய் இங்கு கலாசாலை ஒன்றில் உரையாற்றிய போது குறிப்பிட்ட விடயங்கள் இவை. பாவம். தன தொப்புள் கோடி உணர்வு அறுந்த செய்தி அறியாமலே சென்றிருக்கிறார். இங்குள்ள பல மலை நாட்டு தமிழ் மக்களைப் போலவே...
இத்தனைக்கும் சமீப காலம் வரை "இந்திய வம்சாவளி " என அறியப் பட்ட ஒரே இனத்தவர்கள் அவர்கள் தான். இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி ஆடும் போது அவர்களுக்கு கைத்தட்டி பாரட்டும் மக்கள். இன்றும் தன உறவினர்களோடு தமிழ் நாட்டில் தொடர்பு வைத்திருக்கும் மக்கள். இந்திய வம்சாவளி என்ற ஒரே காரணத்துக்காக திட்டமிட்டு பிரஜாவுரிமை பறிக்கப் பட்டவர்கள்.
கடும் வறுமைக்கு மத்தியில் போராடி இப்போதைக்கு முன்னேற துடித்து ஓரளவு வெற்றி பெற்ற மக்களை பற்றி பேசியே ஆக வேண்டும்.
அண்மையில் தமிழ் பத்திரிகை ஒன்றில் மலையக தமிழர்களுக்கான சிறுபான்மை அங்கீகாரம் பற்றி வாசித்தேன். காலத்தின் தேவையினை விளக்கி இருந்த அந்த கருப் பொருளை பற்றி விவாதிக்க வேண்டி இருக்கிறது.
சமூக ரீதியில் சிறுபான்மை இனத்தவர்களுக்கான சகல தகுதிகளை கொண்டிருந்தும் இன்னும் அந்த சலுகைகள் கிடைக்கதவர்களாகவே இருப்பதைக் கண்கூடாகப் பார்கிறேன். மலையக தமிழர்களுக்கான சிறுபான்மை அங்கீகாரம் கட்டாயம் தேவை என்ற சர்ச்சையான முடிவை காரணம்,, நியாயங்களோடு விளக்குகிறேன்.
பயனுள்ள விமர்சனங்கள் , கருத்துகளை எதிர் பார்க்கிறேன்.
இன்னொரு பதிவில் விரிவான விமர்சனங்களுடன் சந்திப்பேன்.
.
மலையக மக்கள் இன்றும் தமக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மலையகத்தில் எதிர்க் கட்சியில் களம் இறங்கிய "ஸ்ரீரங்கா" என்பவர் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் அரசுத் தரப்பில் வடக்கில் தனது கட்சியைக் களம் இறக்கி இறக்கினார். மலையகத்தை பிரதி நிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பலர் இருந்தாலும் மக்களுக்கு எதுவித நன்மையையும் கிடைக்க வில்லை. எனவே இனி மக்கள் தான் தமக்கான அடுத்த கட்ட நகர்வைப் பற்றி யோசிக்க வேண்டும்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅவர்களின் வாழ்க்கைத்தரமும் உயர வேண்டும்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
அன்பின் செழியன்... தங்களின் அன்புக்கு நன்றி... நிச்சயம் உங்கள் தளத்துக்கு வருகிறேன்..... தமிழர் என்று கூறினாலே மெய் சிலிர்த்துப் போகும் ஒருவன் நான்......ஏன் ஆரம்ப காலப் பதிவைப் புரட்டிப் பார்த்தமைக்கு நன்றி அன்பரே......
ReplyDelete