குப்பைகளுக்கு மத்தியில் டிவியில் ஒரு சில நல்ல முயற்சிகளும் நடப்பதுண்டு. நான் அப்படி விரும்பிப் பார்க்கும் நல்ல நிகழ்சிகளில் ஒன்று, ஜேம்ஸ் வசந்தின் ஒரு வார்த்தை ஒரு லட்சம்.
விஜய் டிவி யும் பல குப்பைகளை அள்ளி தந்தாலும் அதன் நிலைக்கு ஓரளவு துணை போவது அதன் வித்யாசமான முயற்சிகள் தான் . சில நிகழ்ச்சிகள் வேற்று மொழி நிகழ்சிகளின் அட்டக் காப்பிதான் என்றாலும் தமிழுக்கு கொஞ்சம் புதுசுதான்.
நிகழ்ச்சி ஜோடிகளுக்கானது . ஒருவர் உதவிக் குறிப்புகள் அளிக்க மற்றவர் அதனை யூகிக்க வேண்டும்.
என்னை பொறுத்த வரை இது ஒரு ஆரோக்கியமான முயற்சி. விஜய் தன் rating இனை கூட்டுவதற்கு பல ஆட்டங்களை ஆடுவது யாவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இது கொஞ்சம் அருமையான ஆட்டம். வசந்துக்கு தமிழர்கள் சார்பில் நன்றிகள் .
இப்போது இது பற்றி நான் சொல்ல வந்த விஷயங்களை கூறி விடுகிறேன். நிச்சயமாக நிகழ்ச்சி பற்றி அன்று. என் அருமை தமிழர்கள் பற்றியது.
பார்க்கும் போது மனதை உறுத்தும் விடயம் என் தமிழர்களின் தமிழ் புலமைதான். சாதாரண போட்டியாளர்களை விட்டு விடுகிறேன்.
நம் தமிழ் டிவி களில் கொடி கட்டி பறக்கும் நடிகர்களும் ( முக்கியமாக விஜயில் ) இதில் பங்கேற்பதுண்டு.
பலவற்றை கூற நினைத்தாலும் ஒரு சிலவற்றை மட்டும் கோடிட்டுக் காட்டுகிறேன்.
சரவணா மீனாட்சி புகழ் செந்தில் , ராஜசேகர் விளையாடினர். பெரிதாக
பிழை விடவில்லை. ஆனால் செந்திலுக்கு ஒரு கட்டத்தில் 'தனயன்" என்ற சொல் மகனா , தம்பியா என்பதே தெரியாமல் தவிக்கிறார். இதில் இவர் ஒரு வானொலி அறிவிப்பாளர் என்று நினைக்கிறேன்
இன்னொரு தடவை இளைய தலை முறை.
கனா காணும் காலங்கள் அணி வந்திருந்தது. ஆண்கள் அணி அருமையாகவே ஆடியது. ( பாவம் தமிழ் மீடியம் போலும்)
அப்பப்பா... இந்த மகளிர் அணி?
குறில் , நெடில் தெரியாதவர்கள் எதற்கு தமிழ் கலை துறைக்கு வரணும்? கோட்டை , கொட்டை இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத இந்த வெள்ளைக் காரிகளை.....
இதில்வேறு நாங்கள் இங்கிலீஷ் மீடியம் , இப்போதுதான் தமிழ் படிக்க ட்ரை பண்ணுறோம் என்று அசிங்கமாய் ஒரு விளக்கம் வேறு!
உதாரணத்துக்காக தான் இரண்டு உதாரணங்கள் சொன்னேன் . இது போல மனம் துடித்த சந்தர்ப்பங்கள் பல.
திறமையை வளர்க்க சந்தர்ப்பங்கள் இல்லை , தொழில்நுட்பம் குறைவு, வாய்ப்புகளில் தமிழர்க்கு ஓர வஞ்சனை இப்படி பல காரணங்களுக்காக தானே இலங்கையில் கூட தென்னிந்திய கலைஞர்களை தங்கியுள்ளோம் ?
தயவு செய்து உங்கள் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் . காயம் கொண்ட எம் மனங்களை நல்ல தமிழ் மூலம் குணப்படுத்துங்கள்.
இந்த சொல் விளையாட்டு கடினம்தான். ஆனால் தமிழ் கடினம் அல்லவே....
இந்த பிறழ்வுக்கு பல காரணங்கள் இருக்கலாம் . விஜய் டிவி யில் மலையாளிகள் என்று பதிவுகள் வாசித்திருக்கிறேன். ஒரு வேலை அது காரணமோ தெரியாது. வேற்று மொழி காரர்களாகவே இருக்கட்டும் . அவர்களும் தமிழை முறையை பேசினால் மட்டுமே அனுமதி கொடுங்கள்.
S .P .B . தமிழர் அல்லவே... ஆனால் அவர்களின் பாடல்கள் தமிழ் மணக்குமே?
மனதை வருத்திய , கோபம் கொள்ள வைத்த விடயத்தை பதிவை இட்டு உள்ளேன் . யாரும் மனம் வருந்த செய்திருந்தால் மன்னிக்கவும் . இங்கு எமக்கு சரியான இடம் இன்றி அலட்சியப் படுத்த போது எமக்கு ஏழு கோடி சகோதரர்கள் இருப்பதை எண்ணி ஆறுதல் அடைவதுண்டு. ஆனால் அந்த சகோதரரில் பல டமிலரும் சில தமிழரும் இருப்பது இப்போதான் தெரிகிறது.
தமிழுக்கு விலை இல்லை. ஆனால் அது இந்த பாடுபடுதலை தடுக்க ஒரு லட்சத்தை பல லட்சமாய் மாற்றினாலும் பரவாயில்லை .
பி .கு.
இந்த நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரும் கலந்து கொண்டார். அவர் நன்றாகவே விளையாடியதாய் ஞாபகம்,
நல்ல அலசல்.
ReplyDeleteஒரு வார்த்தை ஒரு லட்சம் - நல்ல நிகழ்ச்சி.
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்
நல்ல பதிவு. ஆனால் நம் தமிழரின் நிலை பற்றி சுட்டிக் காட்ட விஜய் டிவி யின் நிகழ்ச்சி தான் கிடைத்ததா? மேலும் சில எழுத்துப் பிழைகள் உள்ளன. திருத்திக் கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் வலைப்பதிவுக்கு உன்னை வரவேற்கிறேன் தோழா!
ReplyDeleteசிகரம்,
ReplyDeleteஉண்மைதான் நண்பா.. அடிக்கடி வர முடியாமல் போகிறது , வலைப்பூவுக்கு .... நேரம் கிடைப்பதில்லை பதிவிடுவதற்கு .. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசகனாய் மாறி விடுகிறேன். இனிமேல் அவ்வப்போது மனதில் படுவதெல்லாம் குறித்து வைக்க எண்ணியுள்ளேன். நான் விஜய் டிவி என்று குறிப்பிட்டு பேசவில்லை. தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் தமிழர்கள் நிலை கண்டு வந்த கோபத்தை சற்று தணித்துக் கொண்டேன்.
வணக்கம்.சொந்தம் பாரதி மூலமாய் தங்கள் தளம் வரக்கிடைத்தது மகிழ்ச்சி.தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.:)
ReplyDeleteஅதிசயா....
ReplyDeleteஉங்கள் வரவுக்கு நன்றி.. உங்கள் தளத்துக்கு செல்ல முடிந்ததில் மகிழ்ச்சி. அருமையான வலைப் பதிவுகள். அவ்வபோது எனக்கு ஆலோசனை தந்து உதவுங்கள்