Thursday, October 7, 2010

த்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்

ஒருவாறாக  த்ரீ இடியட்ஸ் படம் முடிவாகி இருக்கிறது. ( தலை முழுகுதல் அல்லது நேர்ந்து விடல் என்று சொல்லலாம். ) 
அனைவரின் விருப்பத்துக்கமைய (??). விஜய் நாயகனாக நடிக்கிறார். எல்லாம் நன்மைக்கே என விதியை நொந்து கொள்வோம். படம் எப்படி இருக்கலாம் என ஒரு முன்னோட்டம் பார்க்கலாம். 

படத்தின் தலைப்பே கதையை சொல்லும். தளபதியை முட்டாள் என்று சொல்ல எந்த கொம்பனுக்கும் அருகதை இல்லை என்பதால் இந்த பெயர் என்பதை கருத்தில் கொள்ளவும். தமிழ் வளர்க்கும் செம்மலின் ஆலோசனை, வரிவிலக்கு என்பவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் பெயர். தமிழுக்கேற்ற ( தளபதிக்கேற்ற?) மாற்றங்களும் உண்டு என்பதை கருத்திட் கொள்க. 

தலைவர்  get -up  மாறாமல் வந்து திரையில் நின்றாலும் அவரை இருபது வயது கல்லூரி மாணவன் என நம்ப வேண்டிய கடமை ரசிகர்களாகிய எமக்கு உண்டு என்பதை ஒரு காலும் மறக்க வேண்டாம். (இதை வாசிக்க முன்பு ஹிந்தி படத்தை மறவாமல் ஞாபகப் படுத்திக் கொள்ளவும். ஏனெனில் தமிழில் பார்க்கும் போது படத்தையே வெறுத்து விடலாம்.) 

பட   போஸ்டரில் விஜய் ஆஜானுபாகுவாய் நிற்க பக்கத்தில் ரெண்டு பாவப் பட்டவர்கள் பரிதாபமாய் நிற்கிறார்கள். படம் முழுக்க தளபதியே வருவதால் அவர்களை விட்டு விடலாம், பாவம். 

அமீர் கான் போலவே ராக்கிங் நேரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் விஜய். ஆனால் அந்த கணத்தில் ஐந்து பேர் தோன்றி ஒன்னாக இணைகிறார்கள். அங்குதான்பா தலைவர் நிற்கிறார். ராக்கிங் தொல்லையால் கஷ்டப் படும் எல்லோரும் " இதுகெல்லாம் முடிவு கட்ட யாரும் இல்லையா என அலறும் காட்சி இருப்பதாக ஒரு கொசுறுத் தகவல். 

அந்த  நேரத்தில் சீனியர் முகத்தில் கரி பூசி விட்டு அவர்களோடவே ஒரு opening சாங் பாடி ஆடுகிறார். அதில் வழக்கம் போலவே எமக்கெல்லாம் அறிவுரை மழை உண்டு. அப்படியே தலைக்கு " மிரட்டல் மெசேஜ் உண்டு. தன்னோடு நடிக்க வராத ஒருத்தருக்கு விடுறாரு பாருங்க டோஸ்! அதற்குப் பின் அடுத்த படத்துக்கு அவரே சான்ஸ் கேட்டு கெஞ்சுவார் பாருங்க. 


 பேப்பர் திருடி அகப் பட்ட பின்பு professor அடிக்க வாரார். " மேல கை வைக்க முன்ன ஒரு தடவைக்கு ......" பேசுறாரு பாருங்க . விசில் மழை.. 


நிச்சயம் பண்ணப் பட்ட தமிழ் கரீனா கபூர் இற்கு பொண்ணுன்னா எப்படி இருக்கணும்னு lecture அடிக்கிறார். ( ஏற்கனவே பல படங்களில் நிச்சயம் பண்ணப் பட்ட பெண்களை கவர் பண்ணிய அனுபவம் இருப்பதால் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. ) 


ஒரு    தனி டூயட் சாங், ஒரு குத்து உண்டு. மிகுதி ஒரு பாட்டில் விஜய் காலை வளைத்து வளைத்து ஆடுவதை வியப்புடன் பார்க்க மற்ற இருவருக்கும் சான்ஸ் வழங்கப் படும். 


நண்பன் அடி பட்டவுடன் ஆம்புலன்ஸ் மக்கர் பண்ண highway இல் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். முடிந்தால் சிகிச்சையும் பண்ணுகிறார். படத்தில் ஏராளமான நல்ல கருத்துகள் தெளித்து விடப் படும். நண்பனின் வறுமை கட்டும் இடத்தில அரசியலும் உண்டு. ( மேலிடத்துக்கு கோபம் ஏற்படாத வகையில்!)


படத்தில்   ஒரே குறை. சண்டைக் காட்சி இல்லையே. ஆனால் கரீனாவை ரௌடி  கும்பலை விட்டு கிண்டல் பண்ண விடலாம். ஆனால் அதில் ஒரு பெரிய ரிஸ்க் உண்டு. கதை மாறி விஜய் 
ரௌடி  கும்பலை வதம் செய்ய புறப் பட்டு விடலாம். சோ அந்த ஐடியா கான்செல். ஆகவே காமெடிக்கு கொடுப்பது போல தனி track கொடுக்கலாம்.


 காமெடி பற்றி கவலையே இல்ல. அவரின் நடிப்பைப் பாத்தாவே போதும். 


சொன்னது கொஞ்சம் தான். திரையில் பாருங்க அசந்து போய்டுவிங்க. முடிந்தால் உங்கள் சீன் களையும் அனுப்பி விடுங்கள். புண்ணியமாய்ப்  போகும்.  


பி.கு. 
என்னைத் திட்டும் நண்பர்களே! 
இந்த கட்டுரையின் ஒரே நோக்கம் தளபதியை உசுபேற்றியாவது நடிக்க சொல்லத் தான். அவரின் திறமை பழைய படி வெளிக் காட்டப் படத் தான். நல்லா வந்த சந்தோஷமாப் பாக்கப் போறது நானும்தான்.  



12 comments:

  1. 3 idiots tamil remake s gonna direct by shankar sir,so i thng ths nonsense won't happen.

    ReplyDelete
  2. 3 idiots tamil remake s gonna direct by shankar sir,so i thng ths nonsense won't happen.//

    அதே தாங்க நானும் வேண்டிக்கிறேன்!

    ReplyDelete
  3. உங்கள மாதிரி ஆட்களெல்லாம் வலைப்பதிவு எழுதிக்கொண்டிருப்பது மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. பின்ன என்ன, தமிழ்த் திரையுலகத்தின் இன்றைய 'தலை சிறந்த' கதாசிரியர் இப்படி வலைப்பதிவோட முடங்கிப் போறதப் பார்த்துட்டு எப்படி சந்தோஷப் பட முடியும்? சிரிக்க வைத்த இந்த வலைப்பதிவு எல்லோரையும் சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்பதே என் அவா.

    ReplyDelete
  4. நல்ல எழுதிருக்கீங்க. அந்த அறிவு ஜீவிய பற்றி நான் மனசுக்குள்ள நொந்தது எல்லாம் அப்படியே கொட்டிருக்கீங்க. என்ன.. நான் கொஞ்சம் bad words யூஸ் பண்ணேன். நீங்க நல்லவர் போலிருக்கு.. :P. Personally, I luv the hindi movie a lot. Should have seen it atleast 10 times by now. பட் எனக்கு ஜீவா, சித்தார்த் ரெண்டு பேரையும் பிடிக்காது. ஸோ, இவர் கூட அவங்க நடிப்பதுனால, அவங்கள பழி வாங்கின ஒரு சந்தோசம். ஆனா சங்கர நெனச்சா தான் மனசு கஷ்டமா இருக்கு.

    ReplyDelete
  5. அவரின் திறமை பழைய படி வெளிக் காட்டப் படத் தான். ....
    Ithu eppo nadanthuchu?
    i was born in 1989.
    so far i didn't c his acting..
    avaru nadicharu nu solra mathiri ethachu pada DVD iruntha anuppungoooo....

    ReplyDelete
  6. dai theva illa ma pesatha ne antha kundan fan aha poi 3 ido first paru appuram vanthu pesu vaitheruchal mama fans

    ReplyDelete
  7. MASS: HAI VIJAY YA NAMBI RAJINIYA VACHI PADAM EDUTHA DIRECTER SUMMA VA DA VIDUVARU AVARUKKE TERIYUDHU NEXT SUPER STAR THALAPATHI NU OK

    ReplyDelete
  8. //dai theva illa ma pesatha ne antha kundan fan aha poi 3 ido first paru appuram vanthu pesu vaitheruchal mama fans//
    nalla vaasichutu pesunga sir! Na nalla padangaloda fan. Puthumai, Challenge nu Vijay nadicha kattayam whistle adikura Rasigan naan.

    ReplyDelete
  9. Vijay Vijay endureega!!! Yaarappa Anda Aalu?????

    ReplyDelete
  10. tamil cinema la vijay i pathi pesaama irukka mudiumaa? mudinjaa athai seinga. athu varai vijay than no 1..

    ReplyDelete
  11. இதனை எழுதியதற்கு நிறைய திட்டு போல்.

    படம் பார்ப்பதற்கு முன்னால் படித்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். ஆனால் நிறைய தாங்கள் கூறியது போல் தான் இருந்தது நண்பா...

    தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. திட்டோ, ஹிட்டோ முக்கியம் இல்லை நண்பா.. நம்ம மெசேஜ் மக்களுக்கு போயிருக்கு பாருங்க.

      Delete