கடந்துவந்த பாதை...


அன்பு உறவுகளே ......
வணக்கம். 

2009 ஆம் ஆண்டு என் நண்பன் ஒருவனின் அறிமுகத்தின் பின் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன். வலைப்பூவில் நாம் நினைக்கும் எந்த விடயத்தையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை மட்டுமே நான் அறிந்திருந்தேன்.. 

இந்த வலைப்பூவினை ஆரம்பிக்கும் போது திட்டமிட்டு ஆரம்பிக்கவில்லை... 
வலையுலகத்தில் நுழைந்து ஒரு வாசகனாக உலவ வேண்டும், அவ்வப்போது எனது சிறு சிறு கருத்துகளை மட்டும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது....

ஓரிரு பதிவுகளை இட்டேன். அதனை நான் வாசிக்கும் தளங்களில் எனது மறுமொழியுடன் சேர்த்து பகிர்வேன்... அதில் சில அன்பர்கள் மட்டும் வந்து என் ஆக்கங்களை பார்வையிட்டு மறுமொழிகளையும் இட்டனர்... திரட்டிகள் பற்றிய தெளிவு அப்போது எனக்கு இருக்கவும் இல்லை. அதற்குப் பின்னர் ஒரு பதிவின் மூலம் இன்ட்லி பற்றி அறிந்து அதில் மட்டும் எனது ஆக்கங்களைப் பகிர்ந்து கொண்டேன்...

அதற்குப் பின் சில உறவுகள் எனது தளத்தில் இணைந்தனர்... ஆனால் வலையுலகில் ஆழக்  கால் பாதிக்கும் முன்னரே என்னுடைய பல்கலைகழக நுழைவு.....
நேர இடர்பாடு காரணமாக ஒன்றரை வருடம் ஒதுங்கி விட்டேன்.. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகளை வாசகனாக ருசித்து மகிழ்ந்தேன்.... ஆனால் பதிவுலகின் அபார வளர்ச்சி என் தாகத்தை அதிகரித்தது. 

மீண்டும் நுழைந்தேன்... கடும் சிரமத்துக்கு மத்தியில் எழுதுகிறேன். எனவே எனது ஆக்கங்கள் ஒவ்வொன்றும் தரமாக இருக்க வேண்டும் என்பதில் மிக்க கவனம் எடுக்கிறேன்..

நான் வருத்தப் படுவது ஒரே விடயத்துக்குதான்... இடைப்பட்ட காலத்தில் ஒதுங்கி இருந்ததால் திரட்டிகள் மூலமாக என்னுடன் இணைந்திருந்த அனேக ஆரம்ப வாசகர்களை இழந்து விட்டேன்... அவர்களை எவ்வாறாவது என் எழுத்துகளால் கவர்ந்து மீண்டும் இணைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை உள்ளது..

நான் வேண்டுவதெல்லாம் ஒன்றுதான்.. 
என் எழுத்துகளுக்கு துணை இருக்கவும் என் ஆக்கங்களை செதுக்கவும் எனக்கு உதவி செய்யுங்கள் ... முடிந்த வரை என் தளத்துடன் இணைந்து கொள்ளுங்கள்...


அன்புடன்...
அருண்பிரசாத்  1 comment:

  1. தங்கள் எழுத்தும், தங்கள் இடுகையும் சிறக்க வாழ்த்துகள். நான் பாதை மாறிக்கொண்டே போய்க்கொண்டு இருக்கிறேன்... தாங்கள் உங்கள் பாதையில் பயணிக்க வேண்டும், எங்கு சென்றாலும் நானும் கூட வருவேன். மறந்துடாதிங்க...

    ReplyDelete