Friday, September 28, 2012

இந்த முறை உலகக் கிண்ணம் நிச்சயமாக இவர்களுக்கே...

முதலில் நான் ஒன்றை சொல்லி விடவேண்டும் . கிரிக்கெட் பற்றி எழுதும் போது  சில வருடங்கள் முன்னே போக வேண்டி உள்ளது. துணைக் கண்டத்தில் வாழும் சராசரி குடிமகனைப் போலவே நானும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன்... ( வெறியன் என்பது இன்னமும் பொருத்தம்.)

நான் வெறித்தனமாக ரசிக்கும் ( நேசிக்கும்)  விஷயங்கள் சில உண்டு...
திரைப்படங்கள், ஆங்கில நாவல்கள் , வலை பூ, கிரிக்கெட் இப்படி... எக்ஸாம் நேரங்களில் இவற்றை கள்ளத்தனமாக அனுபவித்த அனுபவம் ஏராளமாக உள்ளது.

இலங்கை இந்தியா  பங்கு கொள்ளும் ஐந்து நாள் டொக்கு டெஸ்ட் மாட்சை கூட பந்து விடாமல் பார்த்த அனுபவம் உண்டு...
கிரிக்கெட் ஒரு சோம்பேறி  விளையாட்டு, அதை பார்ப்பதால் எந்த பயனும் இல்லை என்ற என் அம்மாவின் வாதம் வலுப் பெற காரணமும் இதுதான்.

ஆனால் t 20 வந்த பின் ஓரளவு ஆறுதல். விறுவிறுப்பான போட்டிகள், உடனடி முடிவுகள் என கிரிக்கெட் மாறியே போனது போங்கள் ... சரி இந்த முறை உலகக் கிண்ணம் யாருக்கு என்றுதான் வாய்ப்பு பார்த்து விடுவோமே...

தமிழ்நண்பர்கள் பகுதியில் ஓட்டுப் பட்டை வைத்தபொது இந்தியா  தான் நம்பர் 1 . அது பாசம். ஆனால் வரிக்குதிரை நேர்மையானவன் ??? என்பதுதான் உலகமே அறிந்த உண்மை ஆகிற்றே? நான் உண்மைதான் சொல்வேன்.

இந்தியா

சந்தேகமே இல்லாமல் கோப்பையை வெல்ல முந்திக் கொண்டு நிற்பவர்கள் இவர்கள்தான்... இப்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு சுக்கிர தசை... உலகக் கோப்பை, அதற்குப் பின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை என்று வரிசையாக பதக்கங்கள்.. இப்போதைக்கு வெல்லாமல் விட்ட கோப்பைகளே இல்லை.... இந்திய அணியின் அசுரத் துடுப்பாட்ட பலம் எல்லா அணிகளையும் கிலி  கொள்ள வைத்திருப்பது உண்மைதான்..

வலுவான அதிரடி துடுப்பாட்ட வரிசை, தோனியின் தலைமைத்துவம் , இளம் வீரர்கள்,குறைவில்லாத சாதனை துடுப்பாட்டக்காரர்கள் இப்படி பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...

பலவீனம் என்றவுடன் சட்டென ஞாபகம் வருவது பந்துவீச்சு.. மிகப் பலமான பாட்டிங் மூலமே பந்து வீச்சு பாதுகாக்கப் படுகிறது என்பதே உண்மை. மூத்த வீரர்களுக்கு இடையில் அடிக்கடி ஏற்படும் உரசல் ,தெரிவுகளில் காணப் படும் குழப்பம் என்பவற்றைத் தாண்டினால் மிக வலுவான அணி..

பாகிஸ்தான் 

இவர்கள் வலுவான அணியா இல்லை மொக்கை அணியா என்பது யாருக்குமே எப்போதுமே தெரியாத ரகசியம்... அந்தளவு பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள் சில நேரம் நொந்துதான் போவார்கள்... ஆனால் திறமைக்கு பஞ்சமே இருக்காது . உலகுக்கு மிகச் சிறந்த வீரர்களை பாகிஸ்தான் அணி தந்திருக்கிறது..

சூதாட்டம், அணித் தகராறு என்று சர்ச்சைகளுக்கு பஞ்சமே இலாத அணி. 
அஜ்மல்,அப்ரிடி, ஹபீஸ் போன்ற அருமையான வீரர்கள் மட்டும்தான் பலம். எந்த நேரத்திலும் அதிர்ச்சி அவதாரம் எடுக்கும் இவர்களின் திறமை போதும் இவர்கள் மீண்டும்  கிண்ணத்தை சுவீகரிக்க ,... ஆனால் நடக்குமா என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும். 

பலவீனம்? சொதப்பல் பீல்டிங் , சர்ச்சைகள், அணிக்குள்ளே முட்டி மோதல், நிலை இல்லாத அதிகாரம் இலாத அணித்தலைமை என்று அடுக்கலாம்.. 
ஆனால் திறமை அடிபடையில் மிகவும் திறமையான அணி...

இலங்கை 

எவ்வளவு இலகுவான ஆட்டத்தையும் கஷ்ட பட்டு இறுதியாக தான் ஜெயிப்போம் என்பது இவர்களின் தாரக மந்திரம். ஒரு முறை மிகச் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டிக்கு சென்றதும் சென்ற உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிக்கு சென்றதும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அணியின் மிகப் பெரிய பலம் அணி வீரர்களின் ஒற்றுமை. எந்தக் காலத்திலும் கூட்டு முயற்சி காரணமாகவே இலங்கையின் பல வெற்றிகள் பெறப் பட்டன. வீரர்கள் குறித்த தனிப்பட்ட கவனிப்பு, மூத்த வீரர்களின் ஒற்றுமை, டில்ஷான்,மகேள,சங்கா ஆகியோர்தான் மிகப் பெரிய பலம். இது தவிர சகல துறை வீரர்களை கொண்டிருப்பது இந்த முறை வரப்பிரசாதம்.

பலவீனம் என்று பார்த்தால் இளம் வீரர்கள் பற்றாக் குறை, அணி மூத்த வீரர்கள் கையிலேயே தங்கி இருப்பது அதிரடியில் இருக்கும் குறைபாடு முக்கியமாக மத்திய ஓவர்களில் மிகவும் மந்தமான ஓட்ட வீதம்...

சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் இந்த முறை கிண்ண வாய்ப்பு பிரகாசமாகவே உண்டு எனலாம்..

தென் ஆபிரிக்கா 

ஆசிய அணிகள் மீதுள்ள காதலால் அவர்களை முதலில் குறிப்பிட்டேன். ஆனால் இவர்களை தான் முதலில் சொல்லி இருக்க வேண்டும் எமகாதகர்கள். அதுவும் இப்போதைய சூழலில் இந்த அணியை நினைத்தாலே நடுங்குகிறது. இன்னைக்கு தேதிக்கு t 20 நம்பர் 1 இவர்கள்தான் .

வெறும் சமநிலை இல்லை. எல்லா வீரர்களும் உச்சகட்ட போர்மில் இருந்தால் என்ன செய்ய? Ab , ஸ்டைன் ,  அம்லா , மோர்கல் என எல்லாருமே போர்மில்.

பலம் என்றால் எங்கிருந்து தொடங்கி எங்கே முடிப்பது என்று தெரியவில்லை... நீங்களே சொல்லுங்களேன்...

பலவீனம் ??? அப்படி ஒன்னு இல்லை....
ஆங் ,
ஒரே ஒரு விஷயம் . சந்தானம் பாணியில் சொல்லனும்னா...
கப் உக்கும் எனக்கும் ராசியே இல்லப்பா...

இது நான்  சொல்ல வேண்டியதில்லை. இந்த சோகம் இப்போ தொடங்கவில்லை. க்ளுச்னரின் அந்த ஒத்தை ஆள் ஆட்டம் ஞாபகம் இருக்கா? 1999 இல். அந்த உலகக் கிண்ண tie  யாராலும் மறக்க இயலாத சோகம். அதற்குப் பின் 2007 இலங்கை அணியுடன் தோற்றது??? இப்படி நிறையவே சொல்லலாம்.

மற்றபடி அவுஸ்திரேலியாவின் 431 சாதனையை உடைத்து கரி  பூசினவர்கள்  ஆகிற்றே ?
என்னை விட்டால் நான் தென் " ஆபிரிக்க அந்தாதியே " பாடுவேன்.

நான் மட்டும் நேர்மையானவனா இருந்தா ( ஐயையோ உளறிட்டேனே ...) யாருக்கு வாய்ப்பு கூட என்றால் இந்த அணிக்குத்தான் கை நீட்டுவேன். நீங்கள்?

அவுஸ்திரேலியா 

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது இவர்களுக்கு இப்போது பொருந்தும். உலகத்தின் கிரிக்கெட் சர்வாதிகாரிகள் அண்மையில் அடங்கித்தான் இருக்கிறார்கள்,
யார் கண் பட்டதோ தொடர் தோல்விகள், t 20 பின்னடைவு என்பவற்றால் மிக நொந்து உள்ளார்கள். ஆனால் தூங்குற சிங்கம் எப்போ எழும்பும் என சொல்லவா முடியும்? 

தலைமை , பாடிங் பந்துவீச்சு என எல்லாவற்றிலும் கலக்கு வாட்சன் , ஹஸ்ஸி என்பவர்கள், அதிரடிக்கு ஒரு டீம், நிதானத்துக்கு ஒரு டீம் என எல்லா விஷயங்களுக்கும் specialist  நிறைய பேர் உள்ளதுதான் மிகப் பெரிய பலம்.

பலவீனம்? மோசமான சமீப கால போர்ம் . போதாக் குறைக்கு இருபது ஓவர் போட்டிகளில் இந்த அணியின் தரவரிசை மிகப் பின்னாலே..என்னதான் இருந்தாலும் இவர்களுக்கு வாய்ப்பு நிச்சயமாக உண்டு என்பதை மறுக்கவே முடியாது. 

மேற்கிந்திய தீவுகள் 


இந்த முறை வழமைக்கு மாறாக மிகவும் பலமாக   அணி. அணியின் உள்வீட்டு  பிரச்சனைகள் முடிந்தது மிகப் பெரிய ஆறுதல்..

அணியின் மிகப் பெரிய பலம் என்றதும் கய்ல் மீள்வருகை.. அந்த மனுஷர் உள்ளே வந்தது அவர்களின் பலத்தை மிகப் பெரிய பலம் . இது தவிர  நரேன் , அதிரடித் துடுப்பாட்டம் பல சகல துறை வீரர்கள் என புத்துணர்வுடன் களமிறங்குகிறார்கள் .

தலைமை , பந்து வீச்சு கொஞ்சம் வீக் தான்.. 

மிக மிக நீண்ட காலத்துக்கு பிறகு மினி உலகம் வென்று சாதிதார்கள் ...  இம்முறை? பொறுப்போம்...

இங்கிலாந்து 


அடிபட்ட புலிதான் பாயும் என்பார்கள். யூவி கையால் 6 சிக்ஸர் வாங்கின மனிதர் ப்ரோட்  இம்முறை இங்கிலாந்து கேப்டன். கிரிக்கெட் தாயகம் இப்போ கொஞ்சம் பின் தங்கிதான் இருக்கிறது. 

பலம் என்று பார்த்தால் நல்ல வீரர்கள் , மோர்கன், ஸ்வான் , திறமையான துடுப்பாட்டக் காரர்கள் இப்படி நிறைய உண்டு..

பலவீன? 
சும்மா சின்ன தகராறுக்காக அணி பீட்டர்சனை இழந்தது மகா தவறு.. IPL இல் அவர் ஆடிய தாண்டவத்தை மறக்க இயலுமா? அதனால் ரொம்பவே தவிக்கிறது அணி. மேலே சொன்ன நல்ல வீரர்கள் பலரும் அவுட் ஒப் போர்ம்

இந்த முறை வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். 
ஆனால் மர்மதேசத்திலும் கிரிக்கெட்டிலும் " எதுவும் நடக்கலாம்". 

நியூசலாந்து 

இந்த முறையும் பேரு மூச்சோடு காத்திருக்கிறது. t 20 என்றாலே முதலில் மக்கலம் தான். மத்தவங்களாம் பின்னாலதான். ஆனால் என்ன  செய்ய ? இது வரை சாதிக்க முடியவில்லையே?

பலம் என்று பார்த்தால் துடுப்பாட்டம் பந்துவீச்சு களத்தடுப்பு என எல்லாம் சமநிலை பெற்ற அணி. 

பலவீனம் மேலே உள்ள எல்லாவற்றையும் திருப்பி போட்டுக் கொள்ளுங்கள். ஏதாவது ஒன்று சரிவந்தால் மற்றதை சொதப்பி விடுவார்கள். 
அணித்தலைமை? 
என்னத்தை சொல்ல? ம்...
மேலே உள்ள முகத்தை பார்த்துக் கொள்ளுங்கள். 

சரி கோப்பை யாருக்கு? 
அதானே ?
மேலே உள்ள 8 அணிகளில் ஒன்றுக்குத்தான்  ...
சத்தியமா...( ஹீ ஹி.. எதா இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்..)

அப்புறம் நேர இடர் காரணமா ஆய்வுக் கட்டுரை எழுத முடியல .. ஆனால் முடிஞ்சா வரை மத்த ப்ளொக்ஸ் வாசிசுக் கிட்டேதான் இருக்கேன்..
பதிவு ஏதும் போடாமல் இருந்தால் நண்பர்கள் கிட்ட இருந்து அன்னியமாகின மாறி ஆகிடுது...

விட்டத்தை பார்த்து மல்லாந்து படுத்த பொது சற்றே என் எண்ணத்தில் உதித்தது இந்த யோசனை.

சைடு பாரில் கருத்துக் கணிப்பு வைத்திருக்கிறேன். மறக்காம உங்கள் ஓட்டை போடுங்க... உங்கள் ஒட்டு வரிகுதிரைக்கே...


Saturday, September 15, 2012

இலங்கையை அதிர வைத்த முக்கொலைகள்

பதிவுலகச் சகோதரர்கள் யாராவது பகிர்ந்து கொள்வார்கள் என்று நினைத்தேன்... ஆனால் நான் தேடிய வரையில் அவ்வாறான பகிர்வு ஒன்றை காணவில்லை. கவர் ஸ்டோரி எழுதும் ஆர்வம் எப்போதுமே எனக்கு இல்லை.. ஆனால் இலங்கையில் அதுவும் தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சமகால நிகழ்வை பகிர்ந்து கொள்ளாமல் விட்டால் அது நல்லதல்ல என்றே நினைக்கிறேன்..

அதுவும் இந்த சம்பவம் இலங்கை முழுவதும் ஒரு அதிரவலையை ஏற்படுத்தி விட்டது.
முதலில் இந்த சம்பவம் பற்றி அறிந்திராத அன்பர்களுக்கு ஒரு அறிமுகம் தந்து விடுகிறேன்.

இந்த சுட்டியையும் பாருங்கள். 
*********

கொழும்பு.
இலங்கையின் வர்த்தகத் தலைநகர்...
வெள்ளவத்தை... கொழும்பின் ஒரு சிறு பகுதி. தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழும் ஒரு பகுதி...
தொடர் மாடிக் கட்டிடப் பகுதி ஒன்றின் குறிப்பிட்ட ஒரு வீட்டிலிருந்து பிணவாடை கிளம்புகிறது.. சந்தேகமுற்ற அயலவர்கள் போலிசுக்கு அறிவிக்கின்றனர்..

அந்த இடத்துக்கு விரையும் போலீசார் அதிர்ச்சி அடைகின்றனர். தந்தை, தாய், ஒரு இளம் மகள் ஆகியோர் உயிரற்றுக் கிடக்கின்றனர். மகனைக் காணவில்லை. கடத்தப் பட்டிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்..

பிரஷான் .
அவன் ஒரு மெடிக்கல் ரெப் .... மிக சாந்தமான நல்ல ஒரு பையனாக அறியப் படுகிறான். அவன் மேல் சந்தேகம் கொண்டாலும் அது ஒருபுறம் இருக்க விசாரணை கட்டவிழ்த்து விடப் படுகிறது.  மத்திய மலைநாட்டில் உள்ள அவனது சொந்த ஊரில் விசாரிக்கப் படுகிறது. திருப்பமாக கொலை நடந்த அன்று அவன் ஊருக்கு வந்ததாக அயலவர்கள் கூறுகின்றனர்.

சில நாட்கள் கழித்து அவனது உறவினர் ஒருவருக்கு மின்மடல் ஒன்று வருகிறது. அதில் பிரசான் தான் தனது பெற்றோரையும் தங்கையையும் கடன்  தொல்லையால்  கொன்று விட்டதாகவும் அவர்கள் உயிரோடு இருந்தால் இன்னும் வேதனை அடைந்து இருப்பார்கள் என்றும் கூறி   உள்ளான்.

விசாரணை மீண்டும் திசை திரும்புகிறது. தான் கெட்டவன்  அல்ல எனவும் தானும் இன்னும் சில நாட்களில் உருக்குலைந்த சடலமாக மீட்கப் படுவேன் எனவும் அவன் மின்மடல் அனுப்பி உள்ளான்.
*******


ஒரு வார இடைவெளியில் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு வேறு ஒரு பகுதிக்கு தப்பிக்க பேருந்தில் செல்லும் பொது அவனது பழைய ரூம் மேட் ஒருவனால் இனங்காணப் பட்டு கையும் களவுமாக பிடிக்கப் பட்டான்.

போலிஸ் விசாரணையில் பிரசான் எந்த சிரமமும் வைக்கவில்லை. அவனது வாக்கு மூலமாகவே வெளிவந்த விபரங்களை பாருங்கள்.

பிரசான் மலையகத்தில் பத்தனைக்கு அண்மித்த ராணியப்பு எனும் தோட்டத்தில் வசித்தவன். தந்தை தோட்ட வாகன சாரதி. கொழும்பில் நல்ல வேலையில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளான். சொந்தமாக கார் கூட வாங்கி உள்ளான்..

ஆடம்பர செலவுகள் அதிகரிக்க கடனும் அதிகரித்து உள்ளது. மொத்தக் கடன் 80 லட்சம் . ( நம்ப முடிகிறதா? அதுவும் 25 வயதில்) ஒரே நபரிடம் இருந்து 42 லட்சம் பெற்று உள்ளான்.

கடனை அடைக்க தந்தையின் ஓய்வூதியப் பணத்தைக் கேட்டு உள்ளான். ( மிகச் சிறு தொகை, அவனது கடனுடன் ஒப்பிடும் பொது.) தந்தை மறுக்க , ஆத்திரம் அடைந்துள்ளான்.

பின்பு எதோ முடிவெடுத்தவன் மறு நாள், அவர்களின் பானம் ஒன்றில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொன்று விட்டான். பின்பு தனது வீட்டுக்கு சென்று பணம் தேடி உள்ளான். கிடைக்காத ஆத்திரத்தோடு திரும்பி வந்துள்ளான்.

தனது தாயின் கழுத்து சங்கிலியை அடகு வைத்து 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கி விட்டு மறுநாள் தனது காதலியுடன் சுற்றி விட்டு அவளுக்கு 17000 ருபாய் கையடக்க தொலைபேசி ஒன்றை பரிசளித்து விட்டு திரும்பி பின்பு தலை மறைவாகி விட்டான்.

இப்படியே நீளுகிறது வாக்குமூலம்..( பத்திரிகைகளில் பந்திக் கணக்கில் எழுதிய விடயம். ஆனால் அந்த அளவு எழுத எனக்கு பிடிக்கவில்லை. )
*********
இனி நான் சொல்ல வந்ததை சொல்கிறேன்.
முழு நாட்டிலும் இது மிகப் பெரிய சலசலப்பை உண்டாக்கி விட்டது உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் அவன் ஒரு காட்டு மிராண்டி... கொலைகாரன்... என அடக்கிக் கொண்டே போக முடியும் அந்த வேலையே இன்று வரை பலர் பார்ப்பதால் நமக்கு அந்த வேலை வேண்டாம். நான் அதன் விளைவுகளை மட்டும் சொல்கிறேன்.

ஒரு பக்கம் இந்த விஷயத்தை பத்திரிக்கைகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன ஒவ்வொரு நாளும் விசாரணை வாக்கு மூலம் என விதமாக எழுத நல்ல கதை கிடைத்து விட்டது.

மறுபுறம் மக்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை உண்டுபண்ணி விட்டது. ஏனெனில்  பணத்துக்காக அவன் கடத்தப் பட்டு வேறு யாரும் கொலை செய்து இருந்தால். அந்த மூன்று உறவுகளை எமது உறவுகளாக எண்ணி கண்ணீர் வடிப்பதோடு அந்த சம்பவம் கரைந்து போயிருக்கும்... ஆனால் மகன் ஒருவன் தனது பெற்றோரை?

இது வரை செய்திகள் மூலமாக கேள்விப்பட்ட விடயத்தை எமது சமூகம் நேரடியாக சந்தித்த பொது ஆடித்தான் போனது.
வெறுமனே மேலோட்டமாக பார்க்காமல் அதன் பின்னணியில் எழும் கேள்விகளை கேட்கிறேன், பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.....

ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் பட்டான்,.. அவன் ஊதாரியாக இருக்கட்டும். ஆனால் தன கடன் சுமைக்கு அவன் தற்கொலை செய்து கொள்ள மனநிலை தூண்டி இருக்கக் கூடும்... ஆனால் அவன் தனது பெற்றோரைக் கொலை செய்து அதுவும் அவர்களின் நன்மைக்கே என எந்த யோசனையில் சொல்லி இருக்கக் கூடும்.? அது பொய்யா? அல்லது அதன் பின்னணியில் எதுவும் உண்டா?

மின்மடல் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக திசை திருப்ப முயன்றுள்ளான் . ( ஏனெனில் அவன் அளித்த சில விபரங்கள் பொய்.) என தைரியத்தில் அவன் அவ்வாறு தப்பித்து விட முடியும் என நம்பி இருப்பான்? அல்லது உண்மையில் மன நிலை பிரல்ந்தவனாக இருக்கக் கூடுமா?

ஒரே நபர்  என்ன நம்பிக்கையில் ஒருவனுக்கு 42 லட்சம் கடன் கொடுக்க முடியும்? என்ன உத்தரவாதத்தில் அவ்வாறு கொடுக்க முடியும்? அதன் பின்னணி ஏன் வெளிவரவில்லை....?

தனது தங்கை குடித்த பானம் வாந்தி எடுத்து விட , அவளுக்கு பலவந்தமாக புகட்டி உள்ளான். என்ன குரூர மனதுடன் அதை செய்திருப்பான்?

உங்களால் முடிவெடுக்க முடிகிறதா? அவன் கொடூரக் கொலைகாரனா, மன நோயாளியா அல்லது சூழ்நிலைக் கைதியா? 

தான்   கெட்டவன் அல்ல என மின்மடலில் எழுதி இருக்கிறான்...

இந்த விடயத்தை எழுதி விட வேண்டும் என என்னைத் தூண்டிய ஒரு விடயத்தை சொல்லி விடுகிறேன்....
" நம்ம ஆக்கள் தோட்டத்தை விட்டு வெளிய போய் காசு பாத்துட்டா அவ்வளவுதான்... இதான் பண்றான்.." இது ஒரு அனுபவஸ்தர் சொன்னது.. மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரிந்தாலும் அதன் விளைவு பாரதூரமானது.

மலையகத்தில் இருந்து வெளியே உழைக்க செல்லும் இளைஞர்கள் சும்மா செல்லவில்லை... கடும் உழைப்புக்கு போதிய வருமானம் இல்லாமல் சமீப காலமாகத்தான் வெளியே சென்ற உழைக்கிறார்கள்..

இந்த திமிர்ப் பிடித்த ஊதாரிக்காக ( மன்னிக்கவும்... என்னையும் மீறி வரும் தார்மீகக் கோபம் இது) அந்த இளைஞர்களின் உழைப்பை கொச்சைப் படுத்த முடியுமா?

தனது தேவைக்காக இந்த அளவு சுயநலமாக செயல்பட்ட இளைஞனை உருவாக்கிய சமூகம் மீது ( நான் உட்பட) தவறு இல்லையா? எங்கள் கலாசாரம், ஒழுக்க நெறி எங்கே செல்கிறது?
விடை தெரியாத கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். விடை தெரிந்தால் சொல்லுங்கள்...

 குறிப்பு:
தெளிவாக எழுத விடாமல் மனம் தடுக்கிற படியால் சுருக்கமாக வினா வடிவில் பலவற்றை முன்வைத்துள்ளேன்.... ஆனால் விளக்கம் கிடைக்கவில்லை என்று நினைத்தால் மறுமொழியில் சொல்லுங்கள்... தாரளமாக விரிவாக விவாதிப்போம்.




Wednesday, September 5, 2012

தி பியானிஸ்ட் திரைப்படம்- ஒரு கண்ணோட்டம்


தி பியானிஸ்ட் திரைப்படம் பார்த்து விட்டீர்களா? பார்க்காவிட்டால் நிச்சயம் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்வேன். உலக சினிமா பற்றிய எனது புரிதலை மாற்றி என்னை ஓரளவு தேர்ந்த ரசிகனாக மாற்றிய திரைப்படம். நான் முதன்முதலாக இரண்டாவது முறை உபதலைப்புகளை தேடி ரசித்த திரைப்படம். 
பெரும்பாலான நண்பர்கள் பார்த்திருப்பீர்கள்.. 

எனினும் பார்க்காத தோழர்களுக்கு ஒரு அறிமுகமாகவும் பார்த்தவர்களுக்கு ஒரு சுகமான மீட்பாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் பகிர்ந்து கொள்கிறேன்..

உலக சினிமாவை ருசிக்க நினைக்கும் கற்றுக் குட்டி யாருக்குமே பொதுவாக பரிந்துரைக்கப்படும் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று இது... ( நானும் கற்றுக் குட்டி என்ற முறையில் பல்வேறு நல்ல விமர்சனங்கள் மூலமாகவே இந்த திரைப்படம் நோக்கி உந்தப் பட்டேன். )

இந்த திரைப் படம் உண்மை சம்பவம் ஒன்றை மையப் படுத்தி எடுக்கப் பட்ட பீரியட் பிலிம்.. பொதுவாகவே உலக சினிமாவில் வரலாற்றுக் கதைகள் நன்றாக இருக்கும். அதிலும் இது முதல் தரம். 
"இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப் பட்ட போலந்து யூத பியானிஸ்ட் ஒருவனின் கதை...ஒரு நகரத்தின் சாவு " என்ற தலைப்பில் அந்த யூதரால் எழுதப் பட்ட சுய சரிதையை மயமாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப் பட்டது. 

திரைக்கதை 
1939.
இரண்டாம் உலக யுத்தம் .
ஜெர்மானியப் படைகள் வெற்றிக்கனியை ருசித்துக் கொண்டிருக்கின்றன. அமைதியாக ஒதுங்கி நிற்கும் போலந்து மீதும் தாக்குதல் நடத்தப் படுகிறது. அந்த நாட்டின் ரேடியோ கட்டுப்பாட்டகம் குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. அதில் பியானிஸ்ட்ஆக தொழில் புரியும் ஒருவன்தான் ஸ்பில்மான். ( Szpilman ) 


யூதர்கள் தங்கள் உடைமைகளை  விட்டுவிட்டு வெளியேறுவதற்கு சிறு அவகாசம் கிடைக்கிறது. தங்களால் முடிந்த அளவு பொருட்களை எடுத்துக் கொண்டு குடும்பம் வெளியேறுகிறது. யூதர்களின் மரணக் கிடங்கு ஒன்றுக்கு பலியிடப் படவே அவர்கள் அழைத்து செல்லப் படுகிறார்கள். பயணத்தின் வழியில் இந்த இசைக் கலைஞன் யூதன் அல்லாத   நண்பன்  ஒருவனால் காப்பாற்றப் படுகிறான். 

உறவுகள் அனைத்தும் அறுந்து விட்ட நிலையில் சபிக்கப் பட்ட வாழ்வை அடைகிறான். அடிமைத் தொழிலாளியாக ஒரு இடத்தில் வேலை செய்கிறான். அதே நேரத்தில் யூதப் புரட்சிக் குழு ஒன்று உருவாவதை அறிந்து சில ஆயுத கடத்தலிலும் உதவுகிறான். அதுவும் தோல்வி அடைகிறது. 

மீண்டும் ஒரு முறையும் யமனின் கருணை அவனுக்கு கிடைக்காமலே போகிறது. அவனின் பழைய தோழி, அவளது கணவன் மூலமாக யூதரல்லாத மக்கள் வாழும் பகுதிக்கு அழைத்து செல்லப் பட்டு தலைமறைவாக தங்க வைக்கப் படுகிறான்.


பயங்கரமான தனிமையில் வாடும் அவனுக்கு தனக்குள் ஒளிந்திருக்கும் கலைஞனின் வேதனை புரிகிறது. அவனது விரல்கள் துடிக்கின்றன. போதாக் குறைக்கு ஜான்டிஸ் வந்து விடுகிறது. 

வெகுவிரைவில் அந்த பகுதியும் யுத்தத்தால் அழிகிறது. சிதைவுகளுக்கு நடுவே உணவை தேடி ஓடுகிறான், பதுங்குகிறான். 
ஒரு முறை உணவைப் பிரித்தவாறு நிமிர்ந்தவன் நடுங்கிப் போகிறான். ஒரு ஜெர்மன் அதிகாரி நிற்கிறான். " நீ யார்?' என விசாரிக்கிறான். 
" நான் ஒரு பியானோ கலைஞன்" 

அந்த அதிகாரி அவனை நம்பாமல் ஒரு பியானோ அருகே அழைத்து செல்கிறான் . அதன் முன்னால் அமரும் அவன் தன்னை மறக்கிறான். நடுங்கிய அவன் கைகளுக்கு தீனி கிடைக்கிறது... தன்னை மறந்து வாசிக்கிறான். அந்த அதிகாரியையும் மெய்மறக்க வைக்கிறான். மாலையில் மீண்டும் வரும் அதிகாரி ப்ரெடும் , ஜாமும் தருகிறான். சில நாட்களுக்கு இது தொடர்கிறது. 

ஒரு நாள் மீண்டும் வரும் அதிகாரி தான் மாற்றலாகி செல்வதாக சொல்கிறான். 
" யுத்தம் முடிந்ததும் நீ என்ன செய்வாய்?" 
" எங்கள் நாட்டு ரேடியோவில் வாசிப்பேன்" 
" நான் அதைக் கேட்பேன்."
அந்த வாக்குறுதியையும் குளிருக்கு பாதுகாப்பாக தனது இராணுவ மேலங்கியையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறான். 

1945.
காட்சி மாறுகிறது. 
ஜெர்மன் போரில் தோற்கிறது. மீட்புப் படைகள் இவன் தங்கி இருக்கும் கட்டடங்களை அழிக்கிறது . ஜெர்மானிய மேலங்கியோடு இவன் வெளியே வருவதால் துப்பாக்கிகள் இவனை நோக்கி திரும்புகிறது. சிலையாகி நிற்கிறான். 
************************************************

விருதுகள் 
இத்திரைப்படம் 3 அகாடமி விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகர்: பியானிஸ்ட் - அட்ரியன் ப்ரோடி 
சிறந்த இயக்குனர்: ரோமன் போலன்ஸ்கி 
சிறந்த தருவிக்கப் பட்ட திரைக்கதை.. : ரோனலடு ஹாவார்ட் 

இது தவிர கேன்ஸ், பப்டா , கெய்சர் விருதுகளையும் அள்ளிக் குவித்தது. 

வசூல்.
35 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப் பட்ட இத்திரைப்படம் 120 மில்லியன் டாலர்களை குவித்தது. 

விமர்சனங்கள் 
விமர்சன ரீதியில் இத்திரைப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக ப்ரோட்யின் நடிப்பு... இசையும், இயக்கமும் பற்றி நல்ல கருத்துகள் வழங்கப் பட்டன.
இவர்தான் உண்மையான ஸ்பில்மான்
தனது சுய சரிதையில் அந்த அதிகாரி பற்றி நன்றியோடு கூறுகிறார்.... 
கவனிக்கத் தக்கவை...
படம் முழுவதும் வருவது ப்ரோடி..  ஒரு போதும் சலித்துப் போகவில்லை...  கண்களின் பின்னணியில் எப்போதும் நீர் நிறைந்திருக்க இவரின் நடிப்பு மிக அருமை. இன்னும் பல படங்களில் இவர் முத்திரை பதித்து உள்ளார். 

அதிகாரி தரும் ஜாமை கை நிறைய அள்ளி விரலை சூப்பி விட்டு கண்ணை மூடும்போது நமக்குள்ளும் அந்த அகோரப் பசியை உணர்த்தி விடுகிறார். எந்த இடத்திலும் மிகை நடிப்பை காட்டவில்லை. 
குடும்பத்தையே இழந்து நிக்கும் சோகம், கண்முன்னே இறந்து போகும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போகும் அவலம், நன்றியுணர்வு... எல்லாம். 
உண்மையான பியானோ கலைஞனை போலவே அசத்தி விட்டார்... அவரது நடிப்பில் பல  இடங்களை குறிப்பிட்டு சொல்லத் தோன்றுகிறது. ஆனால் பதிவின் நீளத்துக்கு அது வேண்டாம்.

இரண்டாவது இயக்குனர்..
தனது உணர்வை அப்படியே வெளிப்படுத்தும் நடிகர்கள் கிடைத்து விட்டதால் அசத்தி விட்டார்.  காட்சியமைப்புகள் பாத்திரப் படைப்புகள் அனைத்தும் மிக நேர்த்தியாக இருந்தது .எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளவில்லை... ஸ்பில்மான் கதாநாயகனோ அல்லது விடுதலை வீரனோ அல்ல... அவன் ஒரு அதிருஷ்டசாலி அவ்வளவே. 

படம் மனித நேயத்தை வலியுறுத்துகிறது. கொடூரங்களுக்கு நடுவே சில நல்ல உள்ளங்கள்.... நட்புக்காக தனது நண்பனைக் காப்பாற்றும் ஒரு போலிஸ்... அவனை தலை மறைவாக பாதுகாக்கும் அவனது இசையை நேசிக்கும் தோழி... இசைக்காக எதிரிக்கு உதவும் ஒரு இராணுவ அதிகாரி. 

ஜெர்மன் அதிகாரி அவனை விளிக்கும் பொது " ஏய்... யூதா.." என்றே அழைக்கிறான். சிறிதளவே வந்தாலும் அக்கதாப்பாத்திரம்  நிறைந்து விடுகிறது..  
இறுதியாக அந்த அதிகாரி யுத்தக் கைதியாக ஒரு முகாமில் கிடக்கிறான். அவர்களை நோக்கி  செய்யப் படுகின்றன... 
அவர்களில் ஒருவனிடம் தான் ஒரு  யூதனுக்கு உதவியதாக சொல்கிறான்.. 

சொல்லியே ஆக வேண்டிய இன்னொரு விஷயம் இசை... 
இசைக் கலைஞன் பற்றிய படம் என்பதால் படம் முழுக்க நிறைந்து மனதை வருடுகிறது.
பல புகழ் பெற்ற கலைஞர்களின் இசை பயன்படுத்தப் பட்டது. 

அந்த உடைந்த சிதைவுகளுக்கு மத்தியில் அவன் மனதில் ஒலிக்கும் இசை மாமேதை பீத்தோவன் உடையது...

ஆகா மொத்தத்தில் நல்ல நடிப்பு, இயக்கம், திரைக்கதை, இசை...
இந்த நான்கிற்காக ஒரு முறை கட்டாயம் பார்த்து விடுங்களேன்.....

கொசுறு 
அந்த ஜெர்மன் அதிகாரி  ஹோசன்பெல்ட்.
1952 இல் ஒரு கைதியாக இறந்து போனார்...
உண்மையில் அந்த அதிகரி ஒரு பியானிஸ்ட்... இது பின்னாளில் தெரிய வந்தது. இசை எப்படி மனிதனை மாற்றி இருக்கிறது பார்த்தீர்களா ? 

பியாநிச்டின் கைகள் வாசிப்பது ப்ரோடி அல்ல... அந்த க்ளோஸ் அப் ஒரு உண்மையான போலந்து பியானிஸ்ட் உடையது.  உண்மைத் தன்மைக்காக இயக்குனர் எவ்வளவு உழைத்து இருக்கிறார் பார்த்தீர்களா? 

நாம் அனைவருமே வரலாறு கற்றுக் கொடுப்பதை மறந்து விடுகிறோம். அவ்வளவு அடிபட்ட யூத இனம் இன்று இன்னொரு இனத்தினரை வதைக்கின்றனர் அல்லவா ?அங்குதான் மனது உறுத்துகிறது. 

நன்றி.....


தி பியானிஸ்ட் திரைப்படம்-  ஒரு கண்ணோட்டம் 

........................
........................
........................
அருண்பிரசாத் வரிக்குதிரை   Rating: 4.5/5