Wednesday, August 1, 2012

சத்து மட்டுமல்ல, சக்கையும் முக்கியம்மருத்துவ துறையில் இருக்கின்றவன் என்ற வகையில் உடல் ஆரோக்கியம், எளிய தமிழில் உடலியல் பற்றிய தொடர்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் விரும்புகிறேன். ஆனால்  நேரம் ஒத்துழைப்பதில்லை. ஆகவே எளிமையான விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மேலை நாட்டவர்கள் நம்மை தாழ்வு மனப்பான்மையில் தள்ளும் விதமாக நமது பாரம்பரியத்தை பல விதங்களில் இகழ்வதுண்டு. துரதிருஷ்ட வசமாக நம்மவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு பேசுவதும் உண்டு.
ஆனால்
எப்பொருள் யாரார் வாய்  கேட்பினும் மெய்ப்பொருள் அறிவதல்லவா உகந்தது?

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை புல் தின்பவர்கள் என்று பரிகசிப்பர். நம்மவர்களில் சிலர் ஜால்ரா தட்டுவர்தானே?
அவர்கள் அவ்வாறு கூறுவதற்கு காரணம்  உண்டு.
அவர்களின் உணவு animal based . எங்களுடையது plant based .

இந்த மாற்றத்துக்கு  ஒரே காரணம் காலநிலைதான் . அவர்களை பொறுத்தவரை வெப்பம் பிறப்பிக்க வேண்டிய அதிக கலோரி பெறுமானமுடைய உணவுகள் தேவை. எமக்கு அது தேவை இல்லை. மாறாக நீரிழப்பை ஈடு செயக்கூடிய உணவுகள் தேவை. எனவேதான் எமது பாரம்பரிய உணவுகள் எமக்குப் பொருத்தமாக இருந்தன...

அவர்கள் அவர்களின் பழக்கம் குறித்து பெருமை படுகின்றனர். நாம் எமது பழக்கம் கண்டு வெட்கப் படுகிறோம். இதற்கு ஒரே கரணம் தாழ்வு மனப்பான்மைதான்.

இன்றய திகதிக்கு நாம் மேற்கு  நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நான் கீழ் குறிப்பிடுபவற்றையும்  கருத்தில் கொள்ளுங்கள்.
உணவில் மூன்று வகையான பொருட்கள் உள்ளன.
1. சத்துக்கள் - வளர்ச்சி, சக்தி வழங்குபவை. இவை தாவர , விலங்கு உணவுகள் யாவற்றிலும் உண்டு.
2. நீர்
3. நார்பொருள் ( Fibre ) இது முற்று முழுதாக தாவரத்தில் மட்டுமே உண்டு.

Fast food உணவை நோக்கி செல்லுவதால் எம் உணவில் fibre content குறைவடையும். முடிவு? மலச்சிக்கல். ( Constipation )
முன்பெல்லாம் வெள்ளையருக்கே உரித்தான இந்நோய் இப்போது எம் பக்கம் வரத் துவங்கியுள்ளது.

காரணம்  இதுதான். Fibre என்பது பிரதானமாக செல்லுலோஸ் .(cellulose )
இது மனித உடலில் சமிபாடு அடையாது. எனவே ஒன்று திரண்டு ஒரு bulk இனை உருவாக்கும். இது குடலினூடாக செல்வதை இலகுவாக்கும். இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப் படும். ( புதிய டூத் பெஸ்டினை பிதுக்க இலகுவாக இருக்கும் இல்லையா? அது போலத்தான் குடலில் bulk  ஒன்று உள்ள போது தசை நார்களின் சுமை குறைவு)
 உங்களுக்கு ஒன்று தெரியுமா? வெள்ளையர்கள் உணவுப் பழக்கம் காரணமாக fibre இனை  மாத்திரை வடிவில் வாங்கி உண்கிறார்கள். அவை விலை கூடியவை. ஆனால்  நாம் ?


இந்த நார்பொருள் எமக்கு உபயோகம் இல்லை. ஆனால்  குடல் பாக்டீரியாக்களுக்கு உணவாகும். அவற்றினால் உடைக்கப் படும் நார் சில விளைபொருட்களை உருவாகும். இவை உடலில் கொலஸ்ட்ரோல் அளவை குறைக்கும்.
குடல் புற்று நோய் வாய்ப்பை குறைக்கும்.

எனவே veg  உணவு வகைகள் மட்டமானவை என்ற கருத்து எங்கிருந்தேனும் வந்தால் தயங்காமல் மறுத்து விடுங்கள். உங்கள் உணவுப் பழக்கம் சிறந்ததுதான் என்று விளக்க இவை போதும். நீங்கள் தாவர உண்ணியாக வாழ வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கட்டாயம் உணவில் தாவர உணவுகளை சேர்த்துகொள்ளுங்கள்.
3 comments:

 1. நல்ல பகிர்வு...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நானும் dietetics student என்பதால் உங்கள் கருத்து புரிகிறது. எல்லோரும் புரிந்து கொண்டால் நலமே.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி எழில்... திடீரென காணாமல் போய் விட்டீர்களே என வருந்தினேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி...

   Delete