Monday, November 26, 2012

மரணம் என்பது என்ன?

என்ன இது வரிக்குதிரை கொஞ்சம் நாள் காணாமல் போய் திரும்பி வந்திருக்கிறானே ... ஆன்மீகப் பணிக்கு போய் விட்டானா? மதம் பரப்பும் கும்பலில் சேர்ந்து விட்டானா?
( இந்த உலக அழிவுக்கு பயந்து?????)

இப்படி எல்லாம் தலைப்பை பார்த்தவுடன் சந்தேக வந்தால் தப்பே இல்லை..... ஆனால் நான் இங்கு பயனுள்ள ஒரு அறிவியல் தகவலை சொல்லத் தான் வந்துள்ளேன்...

அறிவியலும் சரி , ஆன்மீகமும் சரி ,... இன்னும் விடை தெரியாமல் மண்டையை சொறியும் முக்கியமான ஒரு புதிர் மரணம்.
ஆமாம்... உண்மையில் மரணம் என்பதை மருத்துவம் எப்படி தீர்மானிகிறது?

நம்ம ராமசாமி அவுட் ஆ? அப்டின்னு தீர்மானிப்பது எப்படி?
அது கொஞ்சம் சிக்கல் தான். ஏன் ?
மரணம் என்பதற்கு மருத்துவத்தில் வரைவிலக்கணம் இல்லை... அதான்.

" சுவாசம் மற்றும் உணர்வுகளின் மீள முடியாத நிரந்தர இழப்பு மரணம் என்று ஐக்கிய ராச்சியத்தில் மொட்டையாக ஒரு கூற்று உண்டு. ஆனால் பூரண விளக்கம் கிடையாது....
'The irreversible loss of the capacity for consciousness, combined with irreversible loss of the capacity to breathe'. 

ஒரு தேர்ந்த அனுபவம் மிக்க மருத்துவர் அதனை தீர்மானிப்பார்.
உடல் தன செயற்பாடு இழப்பது மரணம்... அதனை சில அறிகுறிகளை வைத்து அறிகின்றனர்.
அவை எவை எனத் தெரியுமா?

வெளிறல் ..
ஆங்கிலத்தில் இதை Pallor என்பார்கள். உடம்பில் வழமையாக ரத்த ஓட்டம் கூடிய பகுதிகள் சிவப்பாக இருக்கும் . இறந்த பின்பு நமது இரத்த ஓட்டம் செயலிழந்து விடுவதால் அந்த இடங்கள் வெளிறிப் போய்  விடும்.
நமது உடலில் வெப்பம் பரவ குருதியே காரணமாக இருப்பதால் உடல் சில்லிட்டுப் போய்  விடும்.  

அசைவற்ற தன்மை...
இது கொஞ்சம் நிச்சயம் இல்லாத விஷயம். இதை நம்பி அடக்கம் பண்ணப் பார்த்து  பல கல்லறைகளில்  உயிர்த்தெழுந்து ஓடினவர்கள் உண்டு.
ஆனால் ஒருவரின் மரணத்தை தீர்மானிக்க கட்டாயம் அவரின் அசைவற்ற தன்மை நிரூபிக்கப் படவேண்டும்... 
குறிப்பாக சுவாச அசைவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். 
ஒரு சிலருக்கு அந்த அசைவு சில நிமிஷம் இல்லாது போகலாம்.

திறந்த கண்கள்....
இது நமக்கு பரிச்சயமான ஒன்று... நம் தமிழ்ப் படங்களில் சாகும் நபர் இப்படிதான் சாவார்,... ஆனால் இறந்த ஒருவர் கண்களை திறந்த படியே சாவார் என்று கட்டாயம் இல்லை.
இந்நிலையில் கண்ணின் சுற்றயல் பகுதி கண்ணீர் முகிலால் சூழ்ந்து காணப் படலாம்..

நாடித் துடிப்பு ( Pulse )  இல்லாமல் போகும்... வழமையாக கையில் பார்ப்பது நமக்கு பரிச்சயம். ஆனால் மருத்துவ ரீதியாக கழுத்தில் ( Carotid ) , அதுவும் ஒரு நிமிடம் வரை பார்க்க வேண்டும். இது இல்லை என்றால்,,,
அன்னாரின் பூதவுடல்...

இதயத் துடிப்பும் அதே ஒரு நிமிடம் சோதிக்கப் படும்...
சுவாச அசைவுகள் கிட்டத் தட்ட 3 நிமிடங்கள் அவதானிக்கப் படும். 

கண்ணின் மணி சோதிக்கப் படும்... உங்கள் கண்ணை கண்ணாடி முன்பாக சென்று உன்னிப்பாக அவதானியுங்கள் . ஒரு டோர்ச் ஒளி உங்கள் கண்ணில் படட்டும் . கண்மணி சுருங்கும் . இது Corneal Reflex எனப்படும். இறந்த மனிதற்கு இதுவும் சோதிக்கப் படும்...

இவ்வளவும் பார்த்து முடிந்த பின்புதான் மரணத்தை முடிவு செய்வார்கள். ( எவ்வளவு கஷ்டம்? )
இம்புட்டும் இல்லை என நூறு வீதம் முடிவு பண்ணி விட்டுதான் டாக்டர் கண்ணாடியை கழற்றுவார்...
" சாரிங்க ... நாங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணினோம்....எல்லாத்துக்கும் சொல்லி அனுப்பிடுங்க..."

அப்படியும் ஏதாவது ஒரு விஷயம் நம்பிக்கை  தருகிற பட்சம் ,
" கோட் இஸ் கிரேட்... நம்பிக்கை வைங்க..." இதெல்லாம் சொல்கிறார்கள்... நீங்கள் அடிக்கும் டாக்டர் ஜோக் மாதிரி இல்லையாக்கும்....

குறிப்பு:
நேரம் இல்லாத கொடுமை... அன்பு நண்பர்களிடம் எதையும் பகிர்ந்து கொண்டு பல நாளாகி விட்டது... வரிக்குதிரை பூட்டானோ?? என்கிற சந்தேகமே வந்து விடக் கூடாது என்று தான் இப்படி ஒரு பதிவு. பயனுள்ளதாக இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...

என்னுடைய வழமையான பதிவுகளைப் போல இது அமையாமல் இருக்கலாம். ஆனால் பதிவுகளை விட்டு விலகாமல் இருந்து விட வேண்டும் . கூடிய விரைவில் அதே உத்வேகத்தோடு பதிவுகளை அளிக்கிறேன்... 
16 comments:

 1. நீண்ட நாட்கள் பிறகு வந்து இப்படி பயமுறுத்திட்டீங்களே... (தலைப்பு)

  விளக்கங்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன். இவ்வளவு நாளுக்கு பின்பும் உடனே வந்தமைக்கு.... என்னுடைய கூகிள் பிளஸ் செயலிழந்து விட்டது. அதில் பகிர முடியவில்லை.

   Delete
 2. Yarume illadha kadaiku yaruku sir tea aatharinga? Yen indha over billtap. Neenga padhivu podla nu yar inga azhudha? Ennamo ulagam ungala appadiye rasichu edhiparkudhu nu yen veen karpanai panringa?
  Oruthare oruthar dhan feedback pottu irukaru.
  Neengal innum prabala padhivar aagala sir.

  ReplyDelete
  Replies
  1. ஹா .. ஹா... இப்படியும் வாசகர்களா? மிக்க நன்றி நண்பரே... நான் பிரபல பதிவர் என்று சொல்லவே இல்லையே... எனக்கென்று ஒரு நல்ல வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளேன். ( உங்களைப் போன்றவர்களை அல்ல) அவர்களிடம்தான் எதையும் பகிர முடியவில்லை என்று ஆதங்கப் பட்டேன். என்னுடைய பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து வாசித்து வந்திருந்தாள் உங்களுக்கு அது புரிந்திருக்கும். நீங்கள் மேம்போக்காக பதிவருக்காக வாசிப்பவர் போலும். அனால் வரவுக்கு நன்றி ஹரி...

   Delete
 3. Yarume illadha kadaiku yaruku sir tea aatharinga? Yen indha over billtap. Neenga padhivu podla nu yar inga azhudha? Ennamo ulagam ungala appadiye rasichu edhiparkudhu nu yen veen karpanai panringa?
  Oruthare oruthar dhan feedback pottu irukaru.
  Neengal innum prabala padhivar aagala sir.

  ReplyDelete
  Replies
  1. பாருங்கள் என்னை மட்டம் தட்ட நினைத்து எனக்காக நீங்கள் இரண்டு மறுமொழிகளை பரிசாகத் தந்துள்ளீர்கள். நீங்கள் பதிவர் இல்லையா நண்பா.. ஏதாவது பதிவுகள் போடுங்கள். அப்போதுதான் பதிவுகள் இடுவதன் சுமை தெரியும்.

   அப்புறம் எனக்கு இந்த பிரபல பதிவர்கள் என்ற பதத்தில் ஐயம் உண்டு. மத உணர்வுகளை புண்படுத்தி , மத வெறியோடு அல்லது ஆபாசமாக எழுதி முன்னணிக்கு வந்து விட முடியும். ஆனால் உண்மையான பிரபல பதிவனாக கடும் உழைப்பு தேவை . அந்த அளவுக்கு நான் இன்னும் சாதிக்கவில்லை. உங்கள் உந்துசக்திக்கு நன்றி நண்பா...

   ஆனால் நல்ல பதிவு ஹிட்ஸ் கொடுப்பது அல்ல. நல்ல நண்பர்களைப் பெற்றுத் தருவது என் பதிவுகள் எனக்கு அவர்களை தந்துள்ளது.

   Delete
 4. என்னப்பா லேட்டா வந்தாலும் (லேட்) ஆகிற செய்தி கொடுத்து பயமுறுத்தறீங்க. வாழும் வரை மகிழ்வோடு நட்போடு வாழ்வோம் எதுக்கு அநாவசியமா இறப்பைப் பற்றி யோசிப்பது ? அப்பப்போ எட்டிப்பார்ப்பது நல்லதுதான் . It is important to keep moving even if u have to crawl. என்ன நேரமாகலாம் ஆனால் கண்டிப்பாக சிகரம் தொடலாம்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரி... இந்திய வம்சாவளி மக்கள் பற்றிய தொடரை தொடர முடியாமல் இருக்கிறது. உங்கள் மறுமொழிகளை தருவதாக சொல்லி இருந்தீர்கள் தொடர்ந்து இணைந்திருங்கள். நிச்சயமாக தோழி. சிகரம் தொட தொடர்ந்து முயற்சிப்பேன்.

   Delete
 5. Padhivu potte theeranamnu yaravadhu unga veetu vasal la vandhu porattam nadatthurangala enna? Illa government dhan blogger vechurukaravanga kandipa edhavadhu padhivu podanum nu rules pottu irukangala? Edhayavadhu vettithanama ezhadha vendiyadhu. Apparam romba kashtamana vela nu peetthika vendiyadhu. Adha sonna nan nallavangalukaga padhivu podren nu sappa katta vendiyadhu. Edhellam oru polappa boss

  ReplyDelete
 6. மீண்டும் ஒரு முறை நண்பரே...
  நான் நல்லவங்களுக்கு எழுதவில்லை. என் நல்ல நண்பர்களுக்காக எழுதுகிறேன்.

  ஆம் நண்பரே... நான் எழுதாத போது அவர்கள் நிறைய விசாரித்தார்கள். அதனால்தான் அவ்வா குறிப்பிட்டேன்.
  இறுதியாக உங்குக்கு என் எழுத்து பிடிக்கவில்லை என்றால் விட்டு விட்டு போக வேண்டியதுதானே? ஏன் இவ்வாறு உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?

  ஒரு வேளை எனக்கு மாறாக உங்களுக்கு ஏராளமாக வெட்டிப் பொழுது இருக்கிறது போலும் நண்பா...

  நான் ஒரு போதும் பயனற்ற விஷயங்களை எழுதியதில்லை நண்பரே... என் முழு ப்ளாக் இணையும் பாருங்கள். நான் வீண் பொழுது போக்கவில்லை.

  ReplyDelete
 7. நீண்ட நாள் கழித்து வ்ச்ந்துல்ல்ஸ் ப்ச்திவு. இடைவெளி எப்போதுமே அழகு தான்.. மீண்டும் தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துகள்.

  ReplyDelete

 8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
 9. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

  ReplyDelete
 10. வலிப்பு, வாதநோய், வாந்தி
  வலிப்பு
  அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.
  வாதநோய்
  மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாதநோய்கள் தீரும்.
  முடக்கத்தான் கீரைச் சாறில்,
  http://www.tamilkadal.com/?p=1481

  ReplyDelete
 11. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
  அனைத்தும் ஒரே இணையத்தில்....
  www.tamilkadal.com

  ReplyDelete
 12. தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_9.html ) வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். காண்க.

  ReplyDelete