Thursday, December 30, 2010

ஒரு தேசமும் தேசிய கீதமும்....

          சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தர மாட்டார் என்பார்கள். இலங்கையின் நிலைமை அந்த நிலையில்தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது . முப்பது வருட கால யுத்தம் தமிழர்களை சொல்லொண்ணாத் துயரத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. யுத்தம் முடிந்து விட்டது, இனி யாவரும் ஒரு தாய் மக்கள் என அரசும் ஓயாமல் பாடிக் கொண்டிருக்கிறது.  


         தமிழர்களுக்கு மூச்சு விடக் கூட அவகாசம் தரப் படவில்லை. மாறாக அவர்களை மேலும் நோகடிக்கும் நிகழ்ச்சிகளே அரங்கேறுகின்றன.  மனிதாபிமான நடவடிக்கை என்று நடந்து முடிந்த யுத்ததிற்கு பெயரும் சூட்டப் பட்டுள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து  நாட்டை காப்பாற்றியதை மார்தட்டும் அதே வேலை, இது தமிழர்களை வெற்றி கொண்டு தங்கள் காலடியில் போடு விட்டதை  மார்தட்டும் சிலரும் இல்லை என கூற முடியுமா? அதுவும் அரசு தரப்பினரே இந்த கூச்சலை போடும் போதும் அதனை கண்டிக்கவும் நாதி இல்லை. 


          இனி நடக்கப் போவது ஜனநாயக ஆட்சி இல்லை. பக்கச் சார்பான ஆட்சிதான் என கோடிட்டுக் காட்டும் பல நிகழ்வுகள் இலங்கையில் நடந்தேறுகின்றன. தமிழ் பேசும் மக்களையும் அவர்களின் உணர்வுகளையும் மிதிக்கத்தான் போகிறார்கள். அதைத் தட்டிக் கேட்பது நடக்கப் போவதுமில்லை. 


         தமிழர்களின் உணர்வுகளை நசுக்கும் பல நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்ட முடிந்தாலும் இப்போது அதற்கு மகுடம் வைத்தாட் போல் பேசும் விஷயம்தான் இந்த தேசிய கீதப் பிரச்சனை. 


         தெளிவாக சில விஷயங்களை சுட்டிக் காட்டி விடுகிறேன். 
இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடை பெற்றது. அதில் இனி இலங்கையில் தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என ஒரு யோசனை முன்வைக்கப் பட்டது. இந்த யோசனைக்கு ஏதாவது பயன் உண்டா? நாட்டில் தலை விரித்து ஆடும் விலைவாசி பற்றி,தறி கேட்டு போன பொருளாதாரம் பற்றி எந்த யோசனையும் ஏன் முன்வைக்கப் படுவதில்லை? 


        தவிர மிக்க மரியாதை தரப் படும் கீதத்தில் இருந்து கூட தமிழர்களை அன்னியப் படுத்த வேண்டுமா? நாட்டின் ஒருமைப் பாட்டை குலைக்கும் இந்த யோசனை எதற்கு? தமிழர்களை அடக்க நினைக்கும் இனவாதத்தின் துடிப்பே இது! 


        பௌத்த பிக்கு ஒருவர் ஒரு படி மேலே போய் இது வரை தமிழில் தேசியகீதம் பாடியது தேசத்துரோகம்  என்று பேசி இருக்கிறார். எந்த நாட்டிலும் பெரும்பான்மை மொழியில்தான் , ஒரு மொழியில்தான்  தேசியகீதம் பாட வேண்டும் என விளக்கம் கூறி உள்ளார். அமைச்சர் விமல் வீரவன்ச காட்டியுள்ள உதாரணம் இந்திய. அவரின் போது அறிவு அவ்வளவுதான். இந்தியாவின் பெரும்பான்மை மொழி ஹிந்தி. தேசியகீதம் பாடப் படும் மொழியோ வங்காளம். ஆனால் இந்த விடயம் அப்பாவி சிங்கள மக்களுக்கு விளங்கப் போவதில்லை. மாறாக தொடர்ந்தும் நச்சு விதை அவர்கள் மத்தியில் விதைக்கப் படும். இந்த நியாத்தை விளக்கி தமிழில் மட்டுமே பாடச் சொனனால் என்ன என்று கேள்வி கேட்கப் பட்டால் அது தேசத்துரோகம், பிரிவினைவாதம். 


        யோசனைக்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தமிழ் நாட்டிற்கு  மட்டும் முதல்வர் என்று கோபம் கொப்பளிக்க கூறி உள்ளார் பிக்கு. பாவம் ஒரு சில வாக்குகளிட்காக தமிழின் காவலனாக நடிக்கும் பெருந்தலைவரின் பெருந்தன்மை பற்றி அவருக்கென்ன தெரியும்? 


        நல்லவேளையாக இந்த யோசனை நிராகரிக்கப் படு விட்டது. ஆனால் கட்டாயமாக எதிர் காலத்திலும் இவ்வாறான இனவாத சிந்தனைகள் முன்வைக்கப் படும். அதற்கு நாட்டுப்பற்று என்று சாயம் பூசப் படும். சில முறியடிக்கப் படும். சில நிறைவேற்றப் பட்டு சிறுபான்மை இனத்தினரை காயப்  படுத்தும். என்ன செய்வது? தவறுகளை மறைக்கத் தான் பௌத்தம் என்றொரு கவசம் இருக்கிறதே? 
2 comments:

  1. யோசனை நிராகரிக்கப்பட்டதாய் கூறுவது சர்வதேச சமூகத்திற்கு முன்பான வெறும் கண்துடைப்பே,காரணம் யாழில் நடைபெற்ற விழாவொன்றில் மாணவ, மாணவிகளை சிங்களத்தில் தேசிய கீதம் பாட சொல்லி அங்குள்ள ஜெனரல் கூறியிருந்தார்.அது மட்டுமன்றி நாமல் ராஜபக்சே சிங்களத்தில் தேசிய கீதத்தை பயிற்றுவிக்க சொல்லியிருக்கிறாராம்.

    ReplyDelete
  2. என்னத்த சொல்ல... தமிழ் அதுவாக அழியாவிட்டாலும், அழித்தே விடுவது அப்படின்னுதேன் முடிவு பண்ணியிருக்காங்க. !!

    ReplyDelete