Monday, January 16, 2012

நூற்றெண்பது

நெடு நாட்களாகி விட்டது. இப்படி ஒரு ஆரவாரமில்லாத படம் பார்த்து.
காசியில் இறந்து போன தன தாயின் இறுதிச் சடங்கில் கவலையே இல்லாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறான் ஒரு சிறுவன். அவனை போலவே தானும் இருக்க ஆசை கொள்கிறான் நாயகன்.

சிதார்துக்கு மிக நல்ல ஒரு ரே- என்ட்ரி. மிக நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். படத்தின் இயக்குனர் ஒரு விளம்பர இயக்குனராம். ஒன்று பிரேம்களை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு உற்ற துணையாக இருக்கிறது. படம் முழுதும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

இசை படத்தின் காட்சிகளோடு ஒடி போயிருப்பது அருமை. இசை, சரத். இரண்டு கதாநாயகிகள். ஆனால் கொஞ்சம் நடிக்கவும் வாய்ப்பு. well done director.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.
படம் படு மந்தமாக போகிறது. சில நேரம் நாடகம் பார்க்கிற உணர்வு எட்டிப் பார்க்காமல் இல்லை. பெரும்பாலான காட்சிகளை இலகுவாக ஊகித்து விட முடிகிறது.

ஆறு மாதம் வாடகை கொடுக்கும் போதே 6 இண்டு 30 நாள்தான் சித்தார்த் வாழப் போகிறார் என்பதை எந்த தமிழ் பட ரசிகனும் சட்டென்று உணர்ந்து விடுவான்.

சித்தார்த் ஏகத்துக்கும் நல்லது பண்றார். பிள்ளைகளை படிக்க பண்ணுகிறார், சுண்டல் விற்கிறார், இஸ்திரி போடுறார் . அதெல்லாம் சரி வேலையும் விட்டார் , ஆனா ஏகத்துக்கும் செலவு பண்றார். ( சொத்தையும்தன் எழுதி குடுத்துடாரே?) கிரெடிட் கார்டு இருக்கலாம் ஆனா அதை வைச்சு சித்தார்த் எங்க இருக்கார்னு லேசா கண்டு பிடிச்சு இருக்கலாமே? Now the technology is so improvedu u no?

அந்த negro எமன் அமெரிக்கா தாண்டி வர மாட்டாரா? இந்திய வந்தோன விட்டார். ஆனா...

இப்படி சாவு பயம் இல்லாம தன மனைவியோட சந்தோஷமா மீதி வாழ்கைய வாழலாமே? சும்மா அந்த அம்மணியும் பாவம்தானே?

இப்படி காரணம் எல்லாம் சொன்னாலும் மறக்காம ஒரு முறை பாருங்க.
ஒளிப்பதிவு, இசை, கதை... இதுகளுக்காக...

இந்த சீசன்ல இது எவளவோ நல்லம்... Comparing with others......




No comments: