Saturday, October 13, 2012

தமிழர் எண்முறை

தமிழில் எண்கள் பற்றிய அறிவு மிகத் தாராளமாக இருந்தது. இன்று உலகத்துக்கே வழங்கும் இந்து ( இந்திய) எண் முறையை வழங்கியவர்கள் நம் இந்தியர்கள்தான்.

மற்ற மொழிகளை விட சற்று மாறுபட்ட வளமான எண்  கணித முறைமை நம்மிடம் இருந்தது. மற்ற இந்திய மொழிகளினின்றும் சற்று வேறுபட்ட முறை.
இன்று நாம் பாவிக்கும் எண்மானம் 10 ஐ அடியாகக் கொண்ட நடைமுறைமை. நம்முடைய தமிழர் முறைமையும் அவ்வாறானதே. ( சீனர் 6 ஐ அடியாகக் கொண்ட எண்முறை பயன்படுத்தினர்)

123456789101001000
பார்த்தீர்களா ? நாம் எவ்வளவு வளமான முறையை கொண்டிருக்கிறோம்? இங்கும் சிறப்பாக 10, 100,1000 என்பவற்றை  குறிக்க நாம் சிறப்பு குறியீடுகளை  கொண்டுள்ளோம். மற்ற எந்த இந்திய மொழிகளிலும் இது இல்லை.

தமிழுக்கு இருந்த குறை தமிழில் சுழியம் (0) இருக்கவில்லை என்பதுதான். ஆனால் அதற்க்கு குறியீடு இருந்ததாக சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .
ஆனால் 1825 இல் கணித தீபிகை என்ற நூல் மூலம் தமிழுக்கு 0 அறிமுகப் படுத்தப பட்டது.

வெறும் எழுத்துகள் மட்டுமல்ல .  எண்முறை சார்ந்த  நடைமுறைகளுக்கும் நம்மிடம் இருந்தன,
daymonthyeardebitcreditas aboverupeenumeral

ஆங்கிலத்தில் சுருக்கக் குறியீடுகள் போலவே இவையும் பயன் படுத்தப் பட்டன . நாம் at என்பதை @ என குறிப்போம் அல்லவா? அதற்கு சற்றும் குறையாத குறியீடுகள் தாம் இவை..துரதிருஷ்டவசமாக இவற்றை நாம் பயன்படுத்தத் தவறிவிட்டோம்.

பாருங்கள் ரூபாய்க்கு இந்தியாவில் குறியீடு அறிமுகப் படுத்த முன்னமே நாம் குறியீட்டைப் பயன் படுத்த தொடங்கி விட்டோம். ஆனால் தமிழர் ஒருவர் அமைத்த அந்த வடிவம் ஹிந்தி எழுது போல தமிழ் சாடை கொஞ்சமும் இல்லாது போனமை மிக்க வருத்தம்தான். ( அது ஹிந்தி போல இருந்தமையால்தான் இந்தியாவில் தெரிந்தெடுக்கப் பட்டது என்பது உண்மைதான். )


Rank1/41/23/41/51/81/101/161/201/401/80
Characterகால்அரைமுக்கால்நாலுமாஅரைக்கால்இருமாமாகாணி, வீசம்ஒருமாஅரைமாகாணி


முழு ,எண்கள் பற்றிய அறிவு மட்டுமல்லாது பின்ன எங்களுக்கும் நம்மிடம் பெயரீடு இருந்துள்ளது. தமழர்களின் எண் அளவை முறை என்று தனியாக நாம் கற்க வேண்டிய அம்சங்களும் உள்ளன.

தமிழ் எண்களை பயன்படுத்துமாறு நான் இங்கு கேட்க காரணமும் உள்ளது. பொது  வழக்கில் நம்முடைய முறையை பயன்படுத்துவது சாத்தியப் படாது. ஆனால் தமிழ் பற்றிய தமிழர் ஆக்கங்களில் இதனை பயன்படுத்துவோமானால் நமது தமிழ் ஆர்வம் பெருகும் . இன்று தமிழ் படிக்கும் பலருக்கு இந்த குறியீடு முறைமை தெரியாது. நாமே அதனை தெரிந்து கொள்ளாவிட்டால் யார் தெரிந்து கொள்வது?

ஒரு மொழியில் அளவை முறை காணப் பட்டது, எண் முறை தனித்துவமானது என்று இருப்பது அம்மொழியின் வழமையை ஆய்வாளர்களுக்கு புலப் படுத்தும். எனவே பயன்படுத்தாவிடினும் நமது முன்னோரின் சில விழுமியங்களை அறிந்தாவது வைத்திருப்போம்...


நன்றி விக்கி

Update:

பதிவின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லி விட்டேன். இதோ தனித்தனியாக கூறுகிறேன். 

இது உங்களுக்கு பரிச்சயமான பிள்ளையார் சுழி. இந்தக் குறியீடு நாளைக் குறிக்க பயன்பட்டது. 

௳ 

மாதம் -   

வருடம் - 

பணம் - 

ரூபாய் - 

மேற்கூறியவாறு - 

இலக்கம் - 

இவ்வாறு நிறைய குறியீடுகள் பயன்பட்டுள்ளன. அனைத்தும் தமிழ் மொழியின் எழுத்துகளை அடிப்படையாக கொண்டு கட்டி எழுப்பப் பட்டுள்ளன . எங்கும் கடன் வாங்கப் படவில்லை. 

உதாரணமாக NO என்பது ஆங்கிலத்தில் number என்பதை குறிக்கும். இது Numero  என்ற சொல்லில் இருந்தது வந்தது .இது ஆங்கிலமே அல்ல . மாறாக நம் அணைத்து குறியீடுகளும் நமக்கே உரிய சொற்கள் இதனை தொடர்ந்து பயன் படுத்தி இருந்தால் சுருக்கத்துக்கு   மிக உபயோகமாக இருந்திருக்கும் . மேலும் பலவற்றை நாமே உருவாக்கி இருக்கலாம் ... மாறாக நாம் இன்று பிற மொழிகளில் கடன் வாங்க வேண்டியிருக்காது. 
 ...

Update 2


நண்பர் கலாகுமரன் அளித்த முகப் புத்தக படத்தை பாருங்கள் ... தமிழரின் பெருமையையும் உணருங்கள்... 

நன்றி... 

http://www.facebook.com/photo.php?fbid=478097962224610&set=a.433127040055036.101038.433124750055265&type=1&theater


40 comments:

 1. பல சிறந்த அம்சங்கள் இருந்தும் அதை அறிந்தோர் அக்காலத்தில் அதை பரப்ப முற்படவில்லை. ரகசியமாக வைத்த்ருப்பது வழக்கமாக இருந்ததுபோலும்.
  நல்ல தகவல்கள் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே... எமது அறிவை நாம் பலருக்கும் வழங்கி இருக்க வேண்டும் . இன்று நம் அறிவை நாமே புரிந்து கொள்ளாத பொது யார் தெரிந்து கொள்வர்? வெற்றிவேல் முதலிய பதிவர்கள் தமிழ் பற்றி நிறையவே எழுதுகின்றனர். நானும் தெரிந்து கொள்கிறேன். பதிவுகள் மூலமாக நமது மொழியையும் விருத்தி செய்து கொள்ள வேண்டும் . அதற்கு சிறு முயற்சி என்னுடையது.

   Delete
 2. padhivu arumai aanaal
  day month year debit credit as above rupee numeral
  ௳ ௴ ௵ ௶ ௷ ௸ ௹ ௺
  en kaniniyil ivvaaru therigiradhu enna idhu idhan vilakkathtahi ennudaiya minnanjalukku anuppivaikkumaaru kettukolgiren nandri
  surendranath1973@gmail.com

  ReplyDelete
  Replies
  1. ௶ - இக்குறியீட்டுக்கான பொருள் “பற்று”

   Delete
  2. உங்களுடைய மறுமொழிக்கு பதிவில் மாற்றம் செய்து விட்டேன் நண்பா.

   Delete
 3. என்னங்க எல்லாம் கட்டம் கட்டமா இருக்கு ??? பூச்சியம் கூட தமிழ் எழுதில் இருந்துதான் உருவாக்கி இருக்கிறார்கள். பத்துக்கு எழுத்து ய இதில் சரி பாதியா வெட்டினால் (மே-கீ) 1 அப்புரம் U கிடைக்கும் இந்த எழுத்து வளைவாக மூடியது போல் இருக்கும் அது பூச்சியம்.

  ReplyDelete
  Replies
  1. இதையே நண்பர் சுரேந்திரனும் சொன்னார். ஆனால் என்னுடைய கணனியில் சரியாகத் தெரிவதால் சரி செய்ய முடியவில்லை. நான் chrome ப்ரௌசெர் பாவிக்கிறேன். விண்டோஸ் 7 இல். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஆனால் அப்டேட் என்று தனியாக அதனை விளக்கி விட்டேன் நண்பா..

   Delete
  2. ஃபாண்ட் பிரச்சினையாக இருக்கும். ஜெபெக் வடிவில் போடலாம்.

   Delete
 4. தமிழ் எழுத்துக்களை உற்று நோக்கினால் அதில் கட்டிங் பேஸ்டிங் செய்தே இப்போது பயன் படுத்தும் எண்களின் வடிவங்களை உருவாக்கியது புரியும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்ன அந்த விஷயம் நானும் அறிவேன். தமிழ் எழுத்துகளில் இருந்து அத்தனை இலக்கங்களையும் பெறலாம். ஆனால் அதனை வெளியிட்டால் மிகைப் படுத்தி சொல்கிறேனோ என யாரும் நினைத்து விடக் கூடாது. ஆதாரத்துக்கு காத்திருக்கிறேன் உங்களிடம் இருந்தால் உடனே வெளிப் படுத்துங்கள் தமிழன்னைக்கு செய்யும் சிறு கடனாக இருக்கும் ..

   Delete
  2. http://www.facebook.com/eniyavaikooral
   இந்த பக்கத்திற்கு வாங்க இதற்கான தகவல் இருக்கு.

   Delete
  3. அருமையான விளக்கப் படம். அந்த படத்தை இங்கு பயன்படுத்தவா? உங்கள் அனுமதி தேவை என நினைக்கிறேன் ,.. என்னிடம் அது போன்றே ஒரு நல்ல அட்டவணை இருந்தது. ippo இல்லை. மிக்க நன்றி நண்பரே...

   Delete
  4. அனுமதி தேவை இல்லை தாராளமாக பயன் படுத்தலாம்.

   Delete
  5. மிக்க நன்றி நண்பரே

   Delete
  6. உங்கள் விளக்கப் படத்தை எடுத்தாண்டுள்ளேன் நண்பரே...

   Delete
 5. அதிஅற்புதமான தகவலைத் தந்து இருக்கிறீர்கள்.தங்களுடைய உழைப்பும் இதில் தெரிகிறது.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக நண்பா... தமிழ் வளர்த்து வளமுடன் வாழ்வோம் .

   Delete
 6. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றிகள். நான் ஒருமுறை எங்கள் பற்றிய அறிவு தங்களுக்கு குறைவாக கூறியது நினைவு வருகிறது. அதற்க்கான பதில் பதிவாகவே நான் இதனைப் பார்க்கிறேன். நல்ல தேடல், மேலும் இதுபோன்று மறைந்து போன தகவல்களை மீட்டுத் தர முனைய வேண்டும், மேலும் நாம் இனி வரும் காலங்களில் மேற்கண்ட தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தவும் முயற்ச்சிக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பா... நிச்சயம் மேலும் முயற்சிப்போம்.

   Delete
 7. நல்ல பல தகவல்கள்... இது போல் தொடரவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே

   Delete
 8. day month year debit credit as above rupee numeral
  ௳ ௴ ௵ ௶ ௷ ௸ ௹ ௺ எமது கணிணியிலும் இவ்வாறு தான் தெரிகின்றது!

  சரி செய்யுங்கள் சகோ!
  அற்புதமானதொரு பகிர்வு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies

  1. மிக்க நன்றி நண்பரே

   Delete
 9. தொடர்ந்து தமிழ் பரப்புங்கள்,,

  மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது,,

  வாழ்த்துகள் சகோ

  தொடருங்கள்!!1

  ReplyDelete
 10. வருடம்,மாதம்,ரூபாய்,மேற்படி,தேதி, இவற்றை கிராமபுரங்களில்பயன்படுத்திக் கொண்டுதான்இருக்கிறார்கள்.[பழைய பத்திரங்களில் பார்க்கலாம்]நல்லபதிவு.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? நான் அறியாத தகவல் ... மிக்க நன்றி ஐயா...

   Delete
 11. தமிழ் இலக்கணங்கள் சங்கம்,தாமரை, பதுமம் போன்ற சொற்கள் பெருந்தொகையைக் குறிக்கின்றன். திருநாவுக்கரசு பெருமான் (கடலூர்) கோடிகோடியாகக் கொடுத்துஉலகையே கொடுத்தாலும்அதை மதிக்கமாட்டோம் என்கிறார்.இங்குக் கோடிகோடி என்பதைச் சங்கம், பதுமம் என்ற சொற்களால் குறிக்கின்றார்.உங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. அருமையான மறுமொழி.... உங்கள் முதல் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா... உங்கள் மறுமொழி நண்பர் வெற்றிவேலுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இந்த சுந்தரர் பாடலை நானும் அறிந்துள்ளேன் .அருமையான கவி அது ... முழுமையாக ஞாபகம் இல்லை..

   Delete
 12. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..

   Delete
 13. Nadri ungalukkum urithaagattu nanbaa... varavukkum karuththukkum, ANBUKKUM...

  ReplyDelete
 14. Replies
  1. மிக்க நன்றி நண்பரே

   Delete
 15. அருமை நண்பரே,
  பாராட்டுக்கள்.பதிவின் படிக்கும்போது தொடக்கத்தில் ஏற்பட்ட வியப்பு,முடிக்கும் போது எல்லை அற்ற மகிழ்ச்சியாக மாறிவிட்டது.தொடரட்டும் தமிழ்ப்பணி!!!
  நன்று நன்றி!!!

  ReplyDelete
 16. மேற்கூறியவாறு - ௸; இதை எப்படி உச்சர்ப்பீர்கள்?
  இது கிரந்த எழுத்து மாதிரி இருக்கே?
  இதையும் பார்க்கவும்...

  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D
  key words: wiki + தமிழ்

  ReplyDelete
  Replies
  1. உண்மைஎனக்கும் ஆராயாமல் எதையும் சொல்ல ஆர்வம் இல்லை . அந்த எழுத்து பற்றி தெரியவில்லை நண்பா.. தேடித் பார்க்கிறேன் . உங்கள் சுட்டி வேலை செயவில்லை. நான் நமது தமிழர்களிடம் இந்த மொழி ஆளுமை இருந்தது என்பதற்கு ஒரு சிறு விளக்கம் தந்தேன் . மேலும் பயனுள்ள தகவல்களை அளிக்க முயற்சிக்கிறேன் நண்பா..

   Delete
 17. வணக்கம்
  அருண்குமார்

  அறியாத பல விடயங்களை உங்கள் படைப்பின் மூலம் அறிந்தேன் அருமையான படைப்பு 9,3,2013 இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/03/blog-post_9.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete