Monday, August 13, 2012

நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்....


என்னுடைய முந்தய சூடான இடுகை இங்கே........


25 இடுகைகளை கடந்து வந்து விட்டேன். அந்த பெருமையில் இந்த இடுகையை இடவில்லை... அதற்குக் காரணமான உங்களை நோக்கி நன்றிப் பெருக்குடன் எழுதுகிறேன். 

தமிழ் பதிவுகள், எனக்கு அறிமுகமானது 2009 இல். வாசிக்கத் தொடங்கி இருந்தாலும் பதிவுலகம் பற்றி அதிகம் தெரியாது. திரட்டிகளுக்கு சென்று பல்வேறு பதிவுகளைப் பார்வையிடுவேன். கருத்துரைகள் இடுவது பற்றி அதிகம் தெரியாது. ஒரு பார்வையாளனாக மட்டுமே எனது பயணத்தைத் தொடர்ந்தேன். 

ஆனால் 2010 இல் எனக்கு வலைப் பதிவுகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக உருவாக்கலாம் என எனக்கு அறிமுகப் படுத்தியவன் எனது அன்பு நண்பன் " அருண் பிரசாத் " ( ஆம், அவனும் எனது பெயரையே உடையவன்.) முதலாவதாக நான் பதிவுலகில் நன்றி கூற விரும்புவது அவனுக்குதான். அவன் எனக்கு முன்னதாகவே பதிவுகளை இட்டுக் கொண்டிருந்தான். என்ன காரணத்தாலோ இப்போது பதிவுகள் எழுதுவதை நிறுத்திவிட்டு வாசகனாகத் தொடர்கிறான்.

ஆரம்பத்தில் ஒரு சாதாரண பதிவனாக தொடங்கினேன். திரட்டிகளில் இணைவது, பதிவுகளை இணைப்பது போன்ற விடயங்கள் அந்தளவுக்கு எனக்கு பரிச்சயமாக இருக்கவில்லை. எனது ஆரம்ப கால பதிவுகளுக்கு வருகைகள் அதிகமாகவும் இருக்கவில்லை. ஒரு சில தளங்களில் எனது கருத்துகளைப் பதிவு செய்த போது அத்தளத்தின் பதிவர்கள் சிலர் எனது பதிவுகளை பார்வையிட்டு கருத்தும் வழங்கிச் சென்றனர். பல்கலைகழகம் சென்ற பின் பதிவிடுவதட்கு  நேரம் இருக்கவில்லை. எனவே பதிவுகளை விட்டு விலகி வாசகனை வலம் வந்தேன். 

மீண்டும்  பதிவுகளை இட வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் ஆறாமல் இருந்தது. 
மீண்டும் ஒரு பதிவினை இட்டு பதிவுகளுக்குள் நுழைந்தேன். இம்முறை வாசகர் வட்டம் இன்னும் விசாலமாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். குறுகிய காலத்தில் நல்ல மறுமொழிகள் வரத் தொடங்கின. என் எழுத்துகளை ரசிக்கும் நண்பர்கள் இருப்பதை உணர்ந்து கொண்டேன். 

என் வலைத்தளத்துக்கு பல அன்பர்கள் உறவுகளாக இணைந்து கொண்டார்கள். கூகிள் மூலமாக புதிய நண்பர்களைப் பெற்றேன். அதிலிருந்து இதுவரை புதிய விடயங்கள் பலவற்றையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். 

எனது தளத்துக்கு தனது தளத்தில் தனியாக ஆதரவு திரட்டி தந்த என் அன்பு நண்பன் சிகரம் பாரதிக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும். 

மேலும் வருகை தந்த பின் தமது கருத்துரைகளால் எனக்கு நீங்காத ஆதரவு அளித்து வரும் திண்டுக்கல் தனபாலன், அதிசயா, ஹாரி, இன்னும் பெயர் குறிப்பிடாத இன்னும் பல அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது நன்றி... மேலும் எனது தளத்தில் என்னைப் பின் தொடர்வதன் மூலமாக எனக்கு பலம் சேர்த்துக் கொண்டிருக்கும் உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.... 

எனது பதிவுகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் அமைந்து விடுவதை என்றும் நான் விரும்பியதில்லை. பல்வேறு பட்ட வாசகர்களையும் கவர வேண்டும் என்பது எனது நோக்கம். 
ஆரம்பத்தில் " என் மேல் உங்களின் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள் " என்ற சிறுகதை வெளியிட்டேன். அந்த சந்தர்ப்பத்தில் எனது வாசகர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம், ஆனாலும் அதற்க்கு நல்ல கருத்துரைகள் கிடைத்தன...
அந்த சிறுகதை இங்கு காணுங்கள்......

அதற்குப் பின் என் திருப்திக்கமைய ஓரிரு பதிவுகளை வெளியிட்டு வந்தேன். ஆனால் குறைந்த மறுமொழிகளையே பெற்றேன். அதற்குக் காரணம் திரட்டிகளில் நான் இடுகைகளை சரியாகக் கொண்டு சேர்க்கமையே என்பதை நீண்ட இடைவெளிக்குப் பின்னர்தான் அறிந்து கொண்டேன். 

பின்னர் திடீரென்று ஒருமுறை நான் அதிக வரவுகளைப் பெற்ற பதிவு
" த்ரீ இடியோத்ஸ் " பதிவு மூலம்.. அப்பதிவை இங்கு காணுங்கள்.
அப்பதிவு ஒரு கிண்டல் பதிவு. விஜய் தனது ஒரே மாதிரியான படங்களால் ரசிகர்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்த கட்டம் அது. அதனைக் கிண்டல் பண்ணி அப்பதிவை வெளியிட்டேன். நானே எதிர் பார்க்காத அளவு ஹிட்சுகளை அள்ளியது. பிறகுதான் புரிந்தது விஜய் பற்றிய பதிவுக்கு ஏன் அதனை மவுசு என்று... 

அதனைத் தொடர்ந்து அதே போன்ற பதிவுகளை வெளியிட ஆசை இல்லை. எனவே வெவ்வேறு பிரிவுகளில் எழுதி வந்தேன் திடீரென்று ஒரு பிரேக்.... அதற்குப் பின் அண்மையில்தான் மீண்டும் நுழைய முடிந்தது.... அதற்குப் பின் திரட்டிகளில் சென்று முறையாக பதிவுகளை இணைத்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.


என்னைப் பொறுத்தவரை நான் சாதித்து விட்டேன் என்ற எண்ணம் எனக்கு இல்லை.. ஆனால் பதிவுலகில் இனி நிறைய சாதிப்பேன் என்ற நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது. அதற்கு தேவை உங்கள் அன்பும் ஆதரவும்தான். என் ஆக்கங்கள் நிச்சயமாக தரம் மிக்கவையாக இருக்கும். அதற்கு நான் நிச்சயம் பொறுப்பேற்கிறேன். 

எனக்கு நிச்சயமாக இன்னும் பெரிய வாசகர் வட்டம் வேண்டும். அதற்காக நான் எப்போதும் கேட்பது போல என் வலைத்தளத்தில் நண்பராக இணைந்து கொள்ளுங்கள். எனது பதிவுகளை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் எனக்கு வாக்களிப்பதன் மூலமாக எனது ஆக்கங்கள் இன்னும் பலரை சென்றடைவதற்கு ஒத்தாசை செயுங்கள்.

என்னுடைய ஆரம்ப பதிவுகள் கூட தரமானவையே என நம்புகிறேன், எனவே இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன். சிரமம் பார்க்காமல் தயவு செய்து அவற்றைப் பார்வையிட்டு உங்கள் மேலான கருத்துகளைத் தந்துதவுங்கள். 


நீங்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி கூறும் அதேவேளை தொடர்ந்தும் உங்கள் ஆதரவு எனக்கு இருக்கவேண்டும் என வேண்டுகிறேன். உங்கள் வருகையாலும், கருத்துரைகளாலும் என் மனம் பெருமகிழ்ச்சி அடைகிறது. 

நீங்கள் வாசிக்காத எந்த இடுகையானாலும் வாசித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். நான் எப்போதும் அதனைக் கண்டு மகிழ்வேன். என்னோடு வலையில் இணைந்து கொள்ளும் அடுத்த நண்பராக/ நண்பியாக நீங்கள் கூட இருக்கலாம். 
எனவே எல்லாவற்றுக்கும் மேலாக 
உங்களுக்கு நன்றிகள் கோடி.................  

என்னுடைய முந்தய சூடான இடுகை இங்கே........

மண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 37 comments:

 1. மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  தொடருங்கள்... நன்றி...


  அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

  ReplyDelete
  Replies
  1. எனது எல்லாப் பதிவுகளுக்கும் உங்கள் கருத்துரைகளால் வலுசேர்க்கும் உங்களுக்கு மிக்க நன்றி அன்பரே......

   Delete
 2. பதிவுகளில் வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பா அதில் என்னை போன்றவர்களையும் இணைத்ததற்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஹாரி... நிச்சயமாக .. உங்களை மட்டுமல்ல என் தளத்தில் இணைந்து கொண்ட, கருத்து சொன்ன ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்... வாழ்த்துகளுக்கு நன்றி ஹாரி...

   Delete
 3. நல்ல வளர்ச்சி, தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ... என் வளர்ச்சிக்கு நீங்கள் தொடர்ந்தும் துணை நிற்க வேண்டும்....

   Delete
  2. கண்டிப்பாக நண்பா, எந்தன் ஆதரவும் துணையும் எப்போது உண்டு சகோ...

   Delete