Friday, September 28, 2012

இந்த முறை உலகக் கிண்ணம் நிச்சயமாக இவர்களுக்கே...

முதலில் நான் ஒன்றை சொல்லி விடவேண்டும் . கிரிக்கெட் பற்றி எழுதும் போது  சில வருடங்கள் முன்னே போக வேண்டி உள்ளது. துணைக் கண்டத்தில் வாழும் சராசரி குடிமகனைப் போலவே நானும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன்... ( வெறியன் என்பது இன்னமும் பொருத்தம்.)

நான் வெறித்தனமாக ரசிக்கும் ( நேசிக்கும்)  விஷயங்கள் சில உண்டு...
திரைப்படங்கள், ஆங்கில நாவல்கள் , வலை பூ, கிரிக்கெட் இப்படி... எக்ஸாம் நேரங்களில் இவற்றை கள்ளத்தனமாக அனுபவித்த அனுபவம் ஏராளமாக உள்ளது.

இலங்கை இந்தியா  பங்கு கொள்ளும் ஐந்து நாள் டொக்கு டெஸ்ட் மாட்சை கூட பந்து விடாமல் பார்த்த அனுபவம் உண்டு...
கிரிக்கெட் ஒரு சோம்பேறி  விளையாட்டு, அதை பார்ப்பதால் எந்த பயனும் இல்லை என்ற என் அம்மாவின் வாதம் வலுப் பெற காரணமும் இதுதான்.

ஆனால் t 20 வந்த பின் ஓரளவு ஆறுதல். விறுவிறுப்பான போட்டிகள், உடனடி முடிவுகள் என கிரிக்கெட் மாறியே போனது போங்கள் ... சரி இந்த முறை உலகக் கிண்ணம் யாருக்கு என்றுதான் வாய்ப்பு பார்த்து விடுவோமே...

தமிழ்நண்பர்கள் பகுதியில் ஓட்டுப் பட்டை வைத்தபொது இந்தியா  தான் நம்பர் 1 . அது பாசம். ஆனால் வரிக்குதிரை நேர்மையானவன் ??? என்பதுதான் உலகமே அறிந்த உண்மை ஆகிற்றே? நான் உண்மைதான் சொல்வேன்.

இந்தியா

சந்தேகமே இல்லாமல் கோப்பையை வெல்ல முந்திக் கொண்டு நிற்பவர்கள் இவர்கள்தான்... இப்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு சுக்கிர தசை... உலகக் கோப்பை, அதற்குப் பின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை என்று வரிசையாக பதக்கங்கள்.. இப்போதைக்கு வெல்லாமல் விட்ட கோப்பைகளே இல்லை.... இந்திய அணியின் அசுரத் துடுப்பாட்ட பலம் எல்லா அணிகளையும் கிலி  கொள்ள வைத்திருப்பது உண்மைதான்..

வலுவான அதிரடி துடுப்பாட்ட வரிசை, தோனியின் தலைமைத்துவம் , இளம் வீரர்கள்,குறைவில்லாத சாதனை துடுப்பாட்டக்காரர்கள் இப்படி பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...

பலவீனம் என்றவுடன் சட்டென ஞாபகம் வருவது பந்துவீச்சு.. மிகப் பலமான பாட்டிங் மூலமே பந்து வீச்சு பாதுகாக்கப் படுகிறது என்பதே உண்மை. மூத்த வீரர்களுக்கு இடையில் அடிக்கடி ஏற்படும் உரசல் ,தெரிவுகளில் காணப் படும் குழப்பம் என்பவற்றைத் தாண்டினால் மிக வலுவான அணி..

பாகிஸ்தான் 

இவர்கள் வலுவான அணியா இல்லை மொக்கை அணியா என்பது யாருக்குமே எப்போதுமே தெரியாத ரகசியம்... அந்தளவு பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள் சில நேரம் நொந்துதான் போவார்கள்... ஆனால் திறமைக்கு பஞ்சமே இருக்காது . உலகுக்கு மிகச் சிறந்த வீரர்களை பாகிஸ்தான் அணி தந்திருக்கிறது..

சூதாட்டம், அணித் தகராறு என்று சர்ச்சைகளுக்கு பஞ்சமே இலாத அணி. 
அஜ்மல்,அப்ரிடி, ஹபீஸ் போன்ற அருமையான வீரர்கள் மட்டும்தான் பலம். எந்த நேரத்திலும் அதிர்ச்சி அவதாரம் எடுக்கும் இவர்களின் திறமை போதும் இவர்கள் மீண்டும்  கிண்ணத்தை சுவீகரிக்க ,... ஆனால் நடக்குமா என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும். 

பலவீனம்? சொதப்பல் பீல்டிங் , சர்ச்சைகள், அணிக்குள்ளே முட்டி மோதல், நிலை இல்லாத அதிகாரம் இலாத அணித்தலைமை என்று அடுக்கலாம்.. 
ஆனால் திறமை அடிபடையில் மிகவும் திறமையான அணி...

இலங்கை 

எவ்வளவு இலகுவான ஆட்டத்தையும் கஷ்ட பட்டு இறுதியாக தான் ஜெயிப்போம் என்பது இவர்களின் தாரக மந்திரம். ஒரு முறை மிகச் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டிக்கு சென்றதும் சென்ற உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிக்கு சென்றதும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அணியின் மிகப் பெரிய பலம் அணி வீரர்களின் ஒற்றுமை. எந்தக் காலத்திலும் கூட்டு முயற்சி காரணமாகவே இலங்கையின் பல வெற்றிகள் பெறப் பட்டன. வீரர்கள் குறித்த தனிப்பட்ட கவனிப்பு, மூத்த வீரர்களின் ஒற்றுமை, டில்ஷான்,மகேள,சங்கா ஆகியோர்தான் மிகப் பெரிய பலம். இது தவிர சகல துறை வீரர்களை கொண்டிருப்பது இந்த முறை வரப்பிரசாதம்.

பலவீனம் என்று பார்த்தால் இளம் வீரர்கள் பற்றாக் குறை, அணி மூத்த வீரர்கள் கையிலேயே தங்கி இருப்பது அதிரடியில் இருக்கும் குறைபாடு முக்கியமாக மத்திய ஓவர்களில் மிகவும் மந்தமான ஓட்ட வீதம்...

சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் இந்த முறை கிண்ண வாய்ப்பு பிரகாசமாகவே உண்டு எனலாம்..

தென் ஆபிரிக்கா 

ஆசிய அணிகள் மீதுள்ள காதலால் அவர்களை முதலில் குறிப்பிட்டேன். ஆனால் இவர்களை தான் முதலில் சொல்லி இருக்க வேண்டும் எமகாதகர்கள். அதுவும் இப்போதைய சூழலில் இந்த அணியை நினைத்தாலே நடுங்குகிறது. இன்னைக்கு தேதிக்கு t 20 நம்பர் 1 இவர்கள்தான் .

வெறும் சமநிலை இல்லை. எல்லா வீரர்களும் உச்சகட்ட போர்மில் இருந்தால் என்ன செய்ய? Ab , ஸ்டைன் ,  அம்லா , மோர்கல் என எல்லாருமே போர்மில்.

பலம் என்றால் எங்கிருந்து தொடங்கி எங்கே முடிப்பது என்று தெரியவில்லை... நீங்களே சொல்லுங்களேன்...

பலவீனம் ??? அப்படி ஒன்னு இல்லை....
ஆங் ,
ஒரே ஒரு விஷயம் . சந்தானம் பாணியில் சொல்லனும்னா...
கப் உக்கும் எனக்கும் ராசியே இல்லப்பா...

இது நான்  சொல்ல வேண்டியதில்லை. இந்த சோகம் இப்போ தொடங்கவில்லை. க்ளுச்னரின் அந்த ஒத்தை ஆள் ஆட்டம் ஞாபகம் இருக்கா? 1999 இல். அந்த உலகக் கிண்ண tie  யாராலும் மறக்க இயலாத சோகம். அதற்குப் பின் 2007 இலங்கை அணியுடன் தோற்றது??? இப்படி நிறையவே சொல்லலாம்.

மற்றபடி அவுஸ்திரேலியாவின் 431 சாதனையை உடைத்து கரி  பூசினவர்கள்  ஆகிற்றே ?
என்னை விட்டால் நான் தென் " ஆபிரிக்க அந்தாதியே " பாடுவேன்.

நான் மட்டும் நேர்மையானவனா இருந்தா ( ஐயையோ உளறிட்டேனே ...) யாருக்கு வாய்ப்பு கூட என்றால் இந்த அணிக்குத்தான் கை நீட்டுவேன். நீங்கள்?

அவுஸ்திரேலியா 

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது இவர்களுக்கு இப்போது பொருந்தும். உலகத்தின் கிரிக்கெட் சர்வாதிகாரிகள் அண்மையில் அடங்கித்தான் இருக்கிறார்கள்,
யார் கண் பட்டதோ தொடர் தோல்விகள், t 20 பின்னடைவு என்பவற்றால் மிக நொந்து உள்ளார்கள். ஆனால் தூங்குற சிங்கம் எப்போ எழும்பும் என சொல்லவா முடியும்? 

தலைமை , பாடிங் பந்துவீச்சு என எல்லாவற்றிலும் கலக்கு வாட்சன் , ஹஸ்ஸி என்பவர்கள், அதிரடிக்கு ஒரு டீம், நிதானத்துக்கு ஒரு டீம் என எல்லா விஷயங்களுக்கும் specialist  நிறைய பேர் உள்ளதுதான் மிகப் பெரிய பலம்.

பலவீனம்? மோசமான சமீப கால போர்ம் . போதாக் குறைக்கு இருபது ஓவர் போட்டிகளில் இந்த அணியின் தரவரிசை மிகப் பின்னாலே..என்னதான் இருந்தாலும் இவர்களுக்கு வாய்ப்பு நிச்சயமாக உண்டு என்பதை மறுக்கவே முடியாது. 

மேற்கிந்திய தீவுகள் 


இந்த முறை வழமைக்கு மாறாக மிகவும் பலமாக   அணி. அணியின் உள்வீட்டு  பிரச்சனைகள் முடிந்தது மிகப் பெரிய ஆறுதல்..

அணியின் மிகப் பெரிய பலம் என்றதும் கய்ல் மீள்வருகை.. அந்த மனுஷர் உள்ளே வந்தது அவர்களின் பலத்தை மிகப் பெரிய பலம் . இது தவிர  நரேன் , அதிரடித் துடுப்பாட்டம் பல சகல துறை வீரர்கள் என புத்துணர்வுடன் களமிறங்குகிறார்கள் .

தலைமை , பந்து வீச்சு கொஞ்சம் வீக் தான்.. 

மிக மிக நீண்ட காலத்துக்கு பிறகு மினி உலகம் வென்று சாதிதார்கள் ...  இம்முறை? பொறுப்போம்...

இங்கிலாந்து 


அடிபட்ட புலிதான் பாயும் என்பார்கள். யூவி கையால் 6 சிக்ஸர் வாங்கின மனிதர் ப்ரோட்  இம்முறை இங்கிலாந்து கேப்டன். கிரிக்கெட் தாயகம் இப்போ கொஞ்சம் பின் தங்கிதான் இருக்கிறது. 

பலம் என்று பார்த்தால் நல்ல வீரர்கள் , மோர்கன், ஸ்வான் , திறமையான துடுப்பாட்டக் காரர்கள் இப்படி நிறைய உண்டு..

பலவீன? 
சும்மா சின்ன தகராறுக்காக அணி பீட்டர்சனை இழந்தது மகா தவறு.. IPL இல் அவர் ஆடிய தாண்டவத்தை மறக்க இயலுமா? அதனால் ரொம்பவே தவிக்கிறது அணி. மேலே சொன்ன நல்ல வீரர்கள் பலரும் அவுட் ஒப் போர்ம்

இந்த முறை வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். 
ஆனால் மர்மதேசத்திலும் கிரிக்கெட்டிலும் " எதுவும் நடக்கலாம்". 

நியூசலாந்து 

இந்த முறையும் பேரு மூச்சோடு காத்திருக்கிறது. t 20 என்றாலே முதலில் மக்கலம் தான். மத்தவங்களாம் பின்னாலதான். ஆனால் என்ன  செய்ய ? இது வரை சாதிக்க முடியவில்லையே?

பலம் என்று பார்த்தால் துடுப்பாட்டம் பந்துவீச்சு களத்தடுப்பு என எல்லாம் சமநிலை பெற்ற அணி. 

பலவீனம் மேலே உள்ள எல்லாவற்றையும் திருப்பி போட்டுக் கொள்ளுங்கள். ஏதாவது ஒன்று சரிவந்தால் மற்றதை சொதப்பி விடுவார்கள். 
அணித்தலைமை? 
என்னத்தை சொல்ல? ம்...
மேலே உள்ள முகத்தை பார்த்துக் கொள்ளுங்கள். 

சரி கோப்பை யாருக்கு? 
அதானே ?
மேலே உள்ள 8 அணிகளில் ஒன்றுக்குத்தான்  ...
சத்தியமா...( ஹீ ஹி.. எதா இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்..)

அப்புறம் நேர இடர் காரணமா ஆய்வுக் கட்டுரை எழுத முடியல .. ஆனால் முடிஞ்சா வரை மத்த ப்ளொக்ஸ் வாசிசுக் கிட்டேதான் இருக்கேன்..
பதிவு ஏதும் போடாமல் இருந்தால் நண்பர்கள் கிட்ட இருந்து அன்னியமாகின மாறி ஆகிடுது...

விட்டத்தை பார்த்து மல்லாந்து படுத்த பொது சற்றே என் எண்ணத்தில் உதித்தது இந்த யோசனை.

சைடு பாரில் கருத்துக் கணிப்பு வைத்திருக்கிறேன். மறக்காம உங்கள் ஓட்டை போடுங்க... உங்கள் ஒட்டு வரிகுதிரைக்கே...


18 comments:

  1. நல்ல அலசல்...

    இன்று முதல் விறுவிறுப்பு மேலும் அதிகமாகி விடும்...

    முடிவில் நல்ல யோசனை... தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் அண்ணா... எப்போதும் போல முந்திக் கொண்டு தட்டிக் கொடுக்கிறீர்கள். மிக்க நன்றி .

      Delete
    2. இன்று முதல் விறுவிறுப்பு மேலும் அதிகமாகி விடும்...//

      நேற்றே ஆரம்பித்து விட்டது... சூப்பர் 8 முதல் ஆட்டமே tie விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை.

      Delete
  2. இந்தியா ஆடும் அனைத்து விளையாட்டுகளையும் பார்க்கும் வெறி கொண்டு இருந்தவள் ஆரம்பத்தில் டீ-20 விளையாட்டும் வெகுவாய்க் கவர்ந்தது .ஆனால் ஏகப்பட்ட ஆட்டங்கள் கிரிக்கெட்டை நீர்த்துப் போகச் செய்து விட்டது .அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிட்டது ,எனக்கு

    ReplyDelete
    Replies
    1. ஏகப்பட்ட ஆட்டங்கள் கிரிக்கெட்டை நீர்த்துப் போகச் செய்து விட்டது//

      உண்மையே ... உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான்.. இப்போது கூட பாருங்கள் உலகக் கிண்ணம் முடிந்த உடனே சாம்பியன் லீக் ... இதனால் சுவாரசியம் குறைந்து போய்விடுவதும் உண்மை. ஐ.பி.எல். கூட முன்னாள் விறுவிறுப்பு இப்போது இல்லை.

      Delete
  3. இந்தியா சூப்பர் -8 குரூப் ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னைக்கு நடக்கிற Ind Vs Aus மேட்ச் வச்சு தெரிஞ்சிடும்.

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு பக்கமுமே கொஞ்சம் கஷ்டம்தான் ராஜ்... இந்த முறை சிறிய அணிகள் எதுவும் உள்ளே வரவில்லை... ஆனால் நம் விருப்ப அணி இருக்கும் குழு விளையாட்டுகளில் இதயம் கொஞ்சம் அதிகமாக துடிப்பது உண்மைதான்...

      Delete
  4. அன்புடன் வரவேற்கிறேன் லிங்கேசன் மணி....

    ReplyDelete
  5. நானும் ரெண்டு மூணு நாள் முன்னாடி இங்கு வந்தேன், புது பதிவு இல்லை. தாங்கள் வந்ததில் மகிழ்ச்சி... அது எப்படி எல்லா டீமும் ஒரே மாதிரின்னு எழுதுனீங்க??? ராஜ தந்திரி ஆகிவிட்டீர்கள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பா... முழுநேர அட்டவணை . அசையக் கூட நேரம் இருக்கவில்லை.. பதிவிடாமல் விட்டால் கொஞ்சம் தூரமான மாதிரி இருந்தது. அதனால்தான் அவசர அவசரமாக எழுதினேன்.. உங்கள் அன்புக்கு நன்றி நண்பா..

      Delete
  6. சொன்னது போலவே திடீர் அதிர்ச்சி கொடுத்தது பாகிஸ்தான் ... ஆனால் தென் ஆபிரிகா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    ReplyDelete

  7. இன்னொரு பக்கம் அவுஸ்திரேலியா இந்திய அணியை துவம்சம் செய்து விட்டதே ராஜ்? நீங்கள் சொன்னது சரி... ஆனால் அவுஸ்திரேலியாவின் மறு எழுச்சியா இது?

    ReplyDelete
  8. பலவீனம் என்றவுடன் சட்டென ஞாபகம் வருவது பந்துவீச்சு.. //
    You are right... Sad about India.
    Satheesh

    ReplyDelete
  9. தென் ஆபிரிக்காவின் துரதிருஷ்டம் தொடர்கிறது... இந்தியாவின் நிலை இன்று தெரிந்து விடும் ... சொன்னது போலவே திடீர் எழுச்சி காட்டி உள்ளது பாகிஸ்தான். தொடர்ந்து அவதானிப்போம்.

    ReplyDelete
  10. எப்படியோ! தாங்கள் கூறியது போன்றே மேற்கிந்தியத் தீவுகள் அணி கோப்பையை வாங்கிவிட்டார்கள் என்பதில் எனக்கு மிக்க நன்றியே...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ... மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது உலக கிரிக்கெட்டுக்கே நல்லது என்கிறார்கள் . பலருக்கும் மகிழ்ச்சி. உண்மைதான் அருமையான வீரர்களைக் கொண்டிருந்தும் கோப்பை கனவாகவே மிக நாள் இருந்தது , இப்போ சாதித்து விட்டார்கள்

      Delete
  11. கலக்கிடீங்க நண்பா..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete