Sunday, October 14, 2012

தமிழில் " ஒன்பது " என்ற சொல்லின் விதிவிலக்குதமிழின் குறியீடுகள் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை மட்டும் பார்த்தோம் . இப்போது ஒரு சிறு தகவலை மட்டும் விட்டுச் செல்கிறேன் .

தமிழில் இலக்கங்களுக்கான பெயர்கள் தனித்துவமானவை.
பாருங்கள்:
ஒன்று - ஒரு
இரண்டு - இரு
மூன்று - மு
நான்கு - நா ....

இவ்வாறு தொடரும் பெயர்களுக்கு தனித்துவமான ஒழுங்கும் அடிச் சொற்களும் உள்ளன. ஆனால் இந்த வரிசையில் சற்று வேறு பட்டு நிற்பது ஒன்பது மட்டும்தான். எப்படி?

' பது ' என்பது பத்தின் பெருக்கத்தை குறிக்கும் விகுதி. உதாரணமாக
இரு- பது = இரண்டு * பத்து
இவ்வாறே முப்பது , நாற்பது எல்லாமே...

எனவே ஒன்பது என்பது ஏதாவது ஒரு எண்ணின் 10 பெருக்கமாக அல்லவா இருக்க வேண்டும்?

இது தற்செயலாக இருப்பினும் தொடரும் இலக்கங்களை பாருங்கள் .
தொண்ணூறு 90,
தொள்ளாயிரம் 900

என் இந்த மாற்றம் அல்லது  முரண்பாடு ?
ஆய்வாளர்கள் அதற்கு இப்படி விடை தருகிறார்கள்.
ஏழு, எட்டு என்ற வரிசையில் 9 ஐக் குறித்த உண்மையான பெயர்

" தொன் " என்பதாம். ( சிலர் தொள் என்று கூறுகிறார்கள். )
இதன்படி 90= தொன்பது , 900 தொண்ணூறு, 9000 தொள்ளாயிரம் என வழங்கியதாம் .

காலப் போக்கில் எதோ ஒரு காரணத்தால் இது மருவி இன்றைய பெயர்கள் வந்து விட்டனவாம். என்ன ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறதா?

எது எப்படியோ உங்கள் குழந்தைகள் இனி இந்த கேள்வியை கேட்டால் இந்த விளக்கத்தை சொல்லுங்கள் . மேலும் தமிழில் இந்த தகவலும் எனக்குத் தெரியும் என மார் தட்டிக் கொள்ளலாம் அல்லவா? இந்த விஷயத்தை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

33 comments:

 1. அருமையான விளக்கம்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies

  1. மிக்க நன்றி நண்பரே .
   நிச்சயமாக எனது பணியைத் தொடர்வேன்.

   Delete

  2. எனது வலைத்தளத்தில் இணைந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி மீண்டும் ஒரு முறை.

   Delete
 2. அருமையானத் தகவல் நண்பா... நான் புதிதாக அறிந்துகொண்டேன் இந்தத் தகவலை... மிக்க நன்றி. மேலும் நானே எண்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வெளியிடலாம் என நினைத்திருந்தேன், அந்த வேலையை எனக்கு மிச்சப்படுத்தி விட்டீர்கள், மிக்கக நன்றி, மேலும் பல தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தமிழில் கூறு பெரும் இலக்கங்களான சமுத்திரம், இன்னும் பல. ஆகிய எண் சொற்கள் வடமொழி என்று என்னிடம் முகப்புத்தகத்தில் ஒரு ஆசிரியர் வாதிட்டார். அது பற்றி தேடி விரிவான விளக்கம் அளிக்க இயலுமா???

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக முயற்சி செய்கிறேன் நண்பா. .. பெரிய இலக்கங்களுக்கு தமிழில் அழகான சொற்கள் உண்டு நண்பா... அருண்மொழி என்பவர் மற்ற பதிவில் இட்ட மறுமொழியில் உங்களுக்கான விடை உண்டு. சுந்தரர் இத்தனை சங்க பொன் கொடுப்பினும் அது வேண்டா என சொல்கிறார். நமது தேவாரங்களை, திருவாசகத்தை பாருங்கள் . நமக்கு அழகுத் தமிழ் சொல்லித் தரும். சமுத்திரம் என்பது தமிழ் சொல்லா, என்பதில் எனக்கு ஐயமுண்டு . வாசித்து சொல்கிறேன்

   Delete
  2. விரைவில் கூறுங்கள்... நன்றி, வணக்கம்....

   Delete
  3. நிச்சயமாக நண்பா,... காத்திருங்கள் . இன்னும் என்னை மெருகேற்றி நல்ல படைப்புகளை வெளியிடுகிறேன்.

   Delete
  4. நண்பரே எனக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் சில தகவல்கள் தருகிறேன்.

   Delete
 3. தமிழ் எண்கள் எல்லாம் குற்றியலுகரமாகும். அந்த வழியில் தொண் என்பது தொண்டு+பத்து;தொண்டு+நூறு; தொண்டு+ஆயிரம்;தொண்டு+பத்து+ஆயிரம் என்பன முறையே தொண்டு (9), தொண்பது(90);தொண்ணூறு (900)தொண்டாயிரம் (9000)என் வந்து பின் மருவி இருக்க வேண்டும். அருமையானத் தகவல் தந்தீர்கள். மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா.... சிலர் அடிச்சொல் தொன் ( தொன்மை) என்கின்றனர், சிலர் தொண்டு என்கின்றனர். ஆனால் இந்த விகாரம் சாத்தியமான ஒன்றாகவே தெரிகிறது அருமையான மறுமொழி தந்தீர்கள். நன்றி ஐயா.. .

   Delete
 4. நல்ல விளக்கம் நண்பரே...

  நன்றி...

  ReplyDelete
 5. திரு யுவராஜாவை என் தளத்துக்கு அன்புடன் வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. புதிதாக வந்துள்ள நண்பர் பிரின்ஸ் அல்வினுக்கு என் வணக்கங்கள்

   Delete
 6. வித்தியாசமான தகவல் கட்டுரை . நன்றி.தொடருங்கள் இது போன்ற தேடலை

  ReplyDelete
 7. நீங்கள் சொல்வது சரியே. ஏனெனில் கன்னடத்தில் 90 ஐ தொம்பத்து என்றுதான் சொல்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. ஒன்பது கன்னடத்தில் ஒம்பத்து என்றும் தெலுங்கில் தொம்மிதி.

   தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, தோத(Thoda), கொத(Khotha), படக(Badaga),கோலமி(Kolami), பார்ஜி(Bargi), நைகி(Naiki), கோந்தி(Gondi), குவி(Kuvi), கோண்டா(Konda) , மால்டா(Malda), கட்பா(Gadba) போன்றவை
   திராவிட மொழிக் குடும்பங்களே.

   Delete
  2. நீங்கள் சொல்வது சரியே. ஏனெனில் கன்னடத்தில் 90 ஐ தொம்பத்து என்றுதான் சொல்கிறார்கள்//
   திராவிட மொழி என்பதால் இதனை நல்ல உதாரணமாக கொள்ளலாம் . பகிர்வுக்கு நன்றி ஐயா...

   Delete
 8. ஒன்பா னொடுபத்தும் நூறும் ஒன்றின்
  முன்னதின் ஏனைய முரணி, ஒவ்வொடு
  தகரம் நிறீஇ, பஃது அகற்றி, னவ்வை
  நிரலே ண, ளவாத் திரிப்பது நெறியே
  (நன்னூல், 194)

  இங்கு ஒன்பான் = ஒன்பது என பொருள் கொள்ளப்படுகிறது
  இலக்கணத்தில் தொன்பதை " தொண் + நூறு (னகரத்தை ணகரமாகத் திரித்தல்)
  = தொண்ணூறு" என விளக்கப்படுகிறது.
  அதே போல தொள் + ஆயிரம் (னகரத்தை ளகரமாகத் திரித்தல்)
  = தொள்ளாயிரம் இப்படி விளக்கம் உண்டு

  ஆங்கில டன் எனும் அளவை தமிழில் தொன் என எழுதுகிறார்கள்.

  ReplyDelete
 9. // 9000 தொள்ளாயிரம் என வழங்கியதாம்//
  ஒன்பது + ஆயிரம் > ஒன்பது + இன் + ஆயிரம் = ஒன்பதினாயிரம்
  கவனிக்க தொள்ளாயிரம் அல்ல.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே... ஆனால் கவனியுங்கள் ... 10000 ஐ பதினாயிரம் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு அல்லவா? ஆகவே நீங்கள் சொல்லும் ஒன்பதினாயிரம் ஒன * பதினாயிரம் 90000 ஆக இருக்கவும் வாய்ப்புண்டே? நான் குறிப்பிட்டது போல் "சில' ஆய்வாளர்களின் கருத்தே இது. இது பிழையாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பதால் உங்கள் ஆழமான மறுமொழியை வரவேற்கிறேன்.

   Delete
 10. புதிய தகவல்..விளக்கம் அருமை நண்பா..நன்றி.தொடருங்கள்.

  ReplyDelete
 11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
  Replies
  1. வேலைப் பளு காரணமாக எழுத முடியவில்லை ... ஆனால என் மேல் அன்புடன் வாழ்த்து கூறும் அன்புக்கு நன்றி நண்பா ..

   Delete
 12. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...நண்பா... உங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய நல்வாழ்த்துகள்...

  மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும்....

  ReplyDelete

 13. வணக்கம்!

  இன்று உங்களுக்குத் தெளிவின்றி எழுந்துள்ள ஐயங்களுக்கான விடை
  12 நுாற்றாண்டில் வாழ்ந்த பவணந்தி முனிவா் எழுதிய நன்னுாலில் உள்ளன!

  தமிழ் எண்களின் பெயா்ப்புணா்ச்சி ஒன்று முதல் ஆயிரம்வரை தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

  படித்து மகிழ்க! பயன் பெறுக!

  நன்னுால் இலக்கணத்தை நன்றே பயின்றிடுக!
  பொன்னுால் படைக்கும் புலமையுறும்! - என்தமிழா!
  பன்னுால் படிப்பறிவு பற்றிப் படருமெனில்
  உன்னுள் பெருகும் ஒளி!

  ReplyDelete