Monday, August 20, 2012

அரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....


இணைய உலகத்தில் டிராபிக் என்பது ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நம்முடைய வலைத் தளத்தின் நிலை, எமக்குக் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, நமக்கு கிடைக்கும் விளம்பரங்கள் முதலிய அனைத்தும் டிராபிக் சார்ந்தே அமைகின்றன. எமது தளத்துக்கு கிடைக்கும் வருகைகளை பல விதங்களில் அதிகரிக்கலாம். அந்த வழிகள் நேர்வழிகளாகவும் இருக்கலாம். அல்லது  குறுக்கு வழிகளாகவும்  இருக்கலாம்.

நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்பதை அனேக அன்பர்கள் புரிந்து கொண்டிருபீர்கள். ஆம். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைத்து அதனைக் கொண்டு ஹிட்சுகளை அதிகரித்துக் கொள்வதைப் பற்றிதான் கூற நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு பதிவுலக அன்பர் இதைக் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் என்னளவில் அப்படிக் கடுமையாக விமர்சனம் செய்ய முடியவில்லை. அதற்கான காரணத்தையும் நிச்சயம் சொல்கிறேன். 

அறிமுக இசையமைப்பாளர் அனிருத் பற்றிய செய்தி புகைப்படங்களாக இணையத்தில் வலம்வருவதை யாவரும் அறிவீர்கள். இப்போதைய நிலைமையில் இதைப் பற்றிப் பேசினால் பரபரப்பு பதிவாக மாறும் என்று நினைத்து நான் இந்தப் பதிவை இடுவதாக நினைக்க வேண்டாம். இந்தப் பதிவில் இது ஒரு செய்தி மட்டுமே; நான் ஆராயப் போவது ஒரு பரந்து பட்ட நோக்கில்.  இது பற்றிக் கருத்துகளை இது வரை எனது பதிவில் நான் வெளியிட்டதில்லை. தற்போதைய நிலைமையில் இந்த நிகழ்வு இதை பற்றிப் பேசஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அவ்வளவுதான். 

முதலாவதாக இந்த சூடான விஷயங்களைப் பற்றிப் பேசிவிடுவோம். அந்தப் புகைப்படங்களுக்கு ஒருபுறம் ஹிட்ஸ் மழை பொழிந்தது. மறுபுறம் எதிர்ப்புகளும் அலைமோதின. நான் அதைப் பற்றி மட்டும் பேசினால் எனது பதிவு பத்தோடு பதினொன்றாக , கண்டனப் பதிவாக அல்லது " பொறாமையில்" எழுதிய பதிவாக மாறிவிடும். 

முதலில் இந்த புகைப்படங்களின் விளைவுகளைப் பார்ப்போம். இன்னும் சில நாட்களில் அந்த நடிகையின் பெயரை தேடும்போது ( அவரின் பெயர் வேண்டாம்.) இந்தப் புகைப்படங்களும் இணைந்து கொள்ளும். அவர் நல்ல படங்களில் நடிக்கலாம், அல்லது இன்னும் நல்ல பங்களிப்புகளை வழங்கலாம். ஆனால் இந்த புகைப்படங்கள் அங்கு முன்னிலைப் படுத்தப் பட்டால் அது  அவரது சுயமரியாதைப் பாதிக்காதா? நடிப்புத் துறை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அவரது சொந்த விடயங்களில் தலையிடும் உரிமையை நாம் பெற்றுவிட்டோமா? இதே போன்று சிலவருடங்களுக்கு முன்பு தமிழின் மிகப் புகழ் பெற்ற நடிகையின் அந்தரங்கமும் துகிலுரிக்கப் பட்டது. அது இதை விடவும் அநாகரிகமான வக்கிர புத்தியுடைய செயல். அதையும் மறந்திருக்க மாட்டீர்கள். 

அந்த நடிகை அதற்குப் பின் நிறைய பங்களிப்பை வழங்கிவிட்டார். நல்ல  நடிகை என்றும் பெயரெடுத்துவிட்டார். ஆனால் அவரைப் பற்றிய தேடலில் இந்த செயலும் வருவதை தடுக்க முடியாது. இதே நிலைமைதான் நாளை இவர்களுக்கும் ஏற்படும். 

சில காலத்துக்கு முன்பு இன்னொரு போலிச் சாமியாரின் முகத்திரை கிழிந்தது. பெரும்பாலான மக்களின் உயர் நிலையில் போற்றப் படும் ஒரு " துறவி" என்ற நிலையில் இருப்பவர் என்ற முறையிலும் மத உணர்வுகளைப் புண்படுத்திய குற்றத்துக்காகவும் கட்டாயம் அந்த முகத்திரை கிழிக்கப் படத்தான் வேண்டும். நானும் அவரை என் பதிவில் எள்ளி நகையாடி இருக்கிறேன். ஆனால் அந்த நடிகையைக் காட்சி படுத்தி இருக்கக் கூடாது. ஏனென்றால் அவர் பெண் என்பது மட்டுமல்ல காரணம் . அவர் துறவு நிலை ஏற்றவர் அல்லர். 

ஆனால்  அந்த செயலை ( திரை படங்களில் கூட தணிக்கை செய்யப்பட வேண்டிய அந்த காட்சிகளை) தமிழ் தொலைகாட்சி உலகம் ( குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கக் கூடிய) ஒளிபரப்பி அழகு பார்த்தது. அவ்வளவும் ஆகட்டும். அந்தத் துறவியாவது நாம் ஒதுக்கினோமா ?  இல்லை . உயர் பீடத்துக்கு அனுப்ப முயற்சியை வெட்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ( அந்த காட்சிகளைப் பார்த்தது போல்) இந்தப் பிழைகள் யாருடையவை? எம்மால் புறக்கணிக்கப் பட வேண்டியவை எவை? 

நடிகர் கமல் பற்றி ஒரு  நண்பர் பதிவை வெளியிட்டு இருந்தார். நான் அப்பதிவை வாசித்துவிட்டு , என் தளத்துக்கு வருமாறு அழைப்பு மட்டும் விடுத்து விட்டு வந்துவிட்டேன். அந்த பதிவுக்கு என்ன மறுமொழி கொடுக்க வேண்டும் என அப்போது யோசிக்கவில்லை  . அப்பதிவு பரபரப்பு பதிவாகவும் அமைந்தது. பிறகு அப்பதிவுக்கு மறுமொழி இட சென்ற போது நிறைய நண்பர்கள் விளக்கமாக, தெளிவாக மறுமொழி இட்டு இருந்தார்கள். 

அவரின் நடிப்பை பற்றி விமர்சிக்க, திட்ட எல்லாவற்றுக்கும் எமக்கு உரிமை உண்டு. " Because that is what he presents to us". மற்ற படி அவருடைய தனிப்பட்ட  வாழ்கையை விமர்சிக்க எமக்கு உரிமை இல்லை. அவரே இதை நேரில் சொல்லி இருக்கிறார். நானும் விஜயின் நடிப்பை எனது தளத்தில் ஒரு முறை விமர்சித்தேன்  . ஆனால் அவருடைய   தனிப்பட்ட  வாழ்கையை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை.
பிரபலங்களின் நல்ல குணங்களைப் பற்றி கூற எமக்கு உரிமை உள்ளது, அது மனித மாண்பு. ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்கையை துழாவாமல் இருப்போம். 

நான் இங்கு சொன்ன விஷயங்கள் கொஞ்சம் தான், எல்லாவற்றையும் கூற ஒரு பதிவு போதாது. எல்லாவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளேன். அவ்வளவுதான். ஏனெனில் நமக்கு மறதி அதிகம். இப்போதைக்கு இதை பற்றிப் பேசுவோம். பிறகு மறந்து விட்டு அப்போது வரும் பரபரப்புக்கு அடிமையாகி விடுவோம். அதனால்தான் இது முதல் தடவை அல்ல என்று சில உதாரணங்களை சொன்னேன்.    

இப்போது நம்ம ஸ்பெஷல்க்கு வருவோம். இதெல்லாம் கேட்டுட்டோம். நீ புதுசா ஏதாவது சொல்லுனு நீங்க சொல்றது கேட்குது. 
இதைப் பற்றி காரமாக விமர்சிக்க முடியவில்லை என நான் ஏன் சொன்னேன்? நானும் இப்படி சில் மேட்டர்களை பிறகு வெளியிட தடையாக அமையும் என்று நினைத்தா? அல்லது நானும் இந்த வேலை செய்கிறேன் என்ற குற்ற உணர்விலா? இல்லை, பொறாமைப் பட்ரவன்னு பெயர் வருமேன்னா? எதுமே இல்லை. 

காரணம்  என்னன்னா ஒரு அறிவியல் உண்மை.. 
அதான் நம்ம ஸ்பெஷல்.

முதலில் இந்தப் பதிவுகள், புகைப்படங்கள், விடியோக்கள், பத்திரிகை செய்திகள் எப்படி பிரபலம் அடைகின்றன? நாம் பார்ப்பதால் தானே? எத்தனை காலத்துக்கு நாம் மற்றவர்களைக் குறை கூற முடியும்? நம் மீது குறைகள் இல்லையா..? நாம் அந்த பதிவுகளை, செய்திகளை, படங்களைக்  கண்டதும் நாம் என்ன கண்ணை மூடிக் கொள்கிறோமா? இல்லையே! ஏன்? 

போதை தரும் வஸ்த்துக்கள் உலகில் ஏராளமாக உள்ளன. கஞ்சா, அபின், இப்படி ஏராளமாக.. பெயர்கள் வேறு, உற்பத்தியும் வேறு என்றாலும் செயற்பாடு என்னவோ எறத்தாழ ஒரே மாதிரியானவை. 
முக்கியமாக அவை வலி நிவாரணங்கள்.  இது மருத்துவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. 
இரண்டாவது முக்கியத்துவம்தான் தெரியுமே .. அது நம்ம " பிறவிப்பயன்" .
நல்லதை விட கெட்டதை நாடுவதுதானே நம்ம இயல்பு? 

opioids எனும் போது இனங்கள் நம்ம வலி தொடர்பான சிக்னல்களை மூளைக்கு அனுப்புவதை தடுப்பது மட்டுமல்ல .. மைய நரம்புத் தொகுதியின் சில இரசாயன / வேதிப் பொருட்களையும் தூண்டி விடுகின்றன.. இவை பொதுவாக என்டோர்பின் எனப் படுகின்றன. endo என்றால் உள்ளே என்று அர்த்தம். இவை தான் ஆசாமி போதை ஏறியதும் அடையும் பரவச நிலைக்கு காரணம். 

யோவ் ! கிசு கிசு பத்தி சொல்லுனா போதை பதியா பேசுறியானு கேக்குறிங்களா? இருங்க வரேன். 
இந்த என்டோர்பின் தவிர உடலின் உள்ளேயே அதனைத் தூண்டக் கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றைத் தூண்ட பரபரப்பு, இரகசிய விடயங்கள் , அந்தரங்கம் இதெல்லாம் உதவுகின்றன. அதனால்தான் இந்த விஷயங்களில் நமக்கு இவ்வளவு ஆர்வம். 

பத்திரிக்கைகள் கிசுகிசு போட்டு தாகம் தீர்த்துக் கொள்வது ( அடப் போங்க நம்ம இரவின் புன்னகை நம்ம பதிவையும் நடுப் பக்க நடிகை படத்துக்கு ஒப்பிட்டு போட்டார் .). , ஜோதிட மாமணிகளிடம் போய் நம்ம எதிர்கால மனைவியைப் பற்றித் தெரிந்து கொள்வது ..
( அந்த கொடுமைய அறிஞ்சுக்க அவ்வளவு ஆர்வம்) . 
பெண்களைப் பொறுத்தவரை இந்த அகக் காரணிகளை தூண்ட இந்த அடுத்தவர் சங்கதி தேவை படுவதால் ( அதிகமாக) அவர்கள் gossip செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறர்கள். 
( அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? .... இதெல்லாம் அதான்.) 

நம்மதான் இப்படியா? இல்லை. உலகம்  பூரா இப்படிதாம்பா... 
டயானா, டோடி ஞாபகம் இருக்கிறதா? அவர்களின் மரணத்துக்கு முக்கியப் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. 


சரி சரி... கொஞ்சம் சீரியஸ் ஆகிடுவோம். 
இந்த விஷயங்களுக்கு எல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தானே அவற்றை எழுதுகிறார்கள்? அவற்றை மறுத்துவிட்டால் என்ன? அது கொஞ்சம் கஷ்டம்தான் இல்லையா? 

எல்லாம் போகட்டும் . ஆனால் இந்த விஷயங்களை  வெளியிடுகையில், ஊடகங்கள் கவனமாகக் கையாள வேண்டும். அறிவியல் ரீதியான கதைகளை விட்டு விட்டு உணர்வு ரீதியாக கொஞ்சம்  யோசிப்போம்.  இதே நிலைமை நமக்கு நேர்ந்தால். ? நமது அந்தரங்க விடயங்களை நாம் விட்டுத் தருவோமா? எனவே அந்த அடிப்படையில் இது  வேண்டாம் தோழர்களே...

நான் " அந்த " அரசியல்வாதி பற்றிய பதிவில்கூட குடும்ப அரசியல் என்ற ( குடும்ப வளர்ப்பு) என்ற சொல் பாவனைக்கு மிக யோசித்தேன். பிறகு போது வாழ்கையில் மக்கள் நலனை விழுங்கும் அந்த செயல் தனிப் பட்டதல்ல என்ற நியாயத்தைக் கற்பித்துக் கொண்ட பிறகுதான் வெளியிட்டேன்.  
எனவே நண்பர்களே இத்தனையும் யோசிப்போம். மற்றபடி இதுதான் சரி எனத் தீர்மானிக்கும் உரிமை எனக்கு நிச்சயம் இல்லை. நான் கருத்துகளுக்கு முதலிடம் கொடுப்பவன், எனது நிலை இதுதான். 

ஏன் ? இந்தப் பதிவு கூட டிராபிக் தேடி எழுதப் பட்டதுதான். ஆனால் நோக்கம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். புகழ் எல்லார்க்கும் பிடித்த ஒன்றுதான். அதுவும் என்டோர்பினை கூட்டக் கூடும். ஆனால் அதை சம்பாதிக்க நாம் எதை நாடுவது? 
அனிருத் ஒரு நல்ல இசையமைப்பாளர் .. முடியும் வரை அவரின் இசையை மட்டும் விமர்சிப்போமே?


பதிவு பிடிச்சுருக்கா? ரெண்டு மெசேஜ் சொல்லிருக்கேன். 
அது சரி... மற்ற திரட்டிகளில் நிறைய வோட்டு விழுது ஆனா தமிழ்மணத்துள் கமெண்ட் வருது, வருகையும் இருக்கு ஆனால் வோட்டு மட்டும் விழ மாட்டேன்குதே  ?  அதுலயும் வோட்டு போடுங்க நண்பர்களே...

( இந்தப் பொழைப்பு பொழைக்குறதுக்கு நீ அப்படி பதிவு போட்டே பிழைக்கலாம் அப்படினு சொல்றது விளங்குது .. ஆனால் பப்ளிக் பப்ளிக்.....) 





33 comments:

  1. ஆகா.. தப்பை சுட்டிக் காட்டுறதோட நிற்காம அதுக்கு காரணம் கண்டுபுடிச்சு, திருத்திக்கனும்னு வேண்டுகோள் வைக்குறீங்க.. உங்க ஆதங்கம் + மெஸேஜ் புரியுது நண்பா..
    முடிந்தளவு தவிர்க்கிறேன் :)

    *எனக்கு இந்த அனிருத் கேஸ் பத்தி முழுசாத் தெரியாது.. ஆனா பப்ளிசிட்டிக்காகவே இந்த மாதிரி பண்ணுறவங்களை என்ன பண்ணுறது?

    ReplyDelete
    Replies
    1. அப்பா... நமக்கு முதல் ஆள் கிடைச்சாச்சு... கமெண்ட் போடுங்கப்பா.... 150 ஹிட்சுக்கு பிறகில்ல வருது? நன்றி நண்பா... நம்ம எல்லாருமே publicity வேணுன்னு நினைக்கதான் செய்றம். ஆனால் ஒரு மனுஷனோட அந்தரங்கத்துக்குள்ள போறது தப்பில்லையா சகோ? அதான் நம்ம ஆதங்கம்....

      Delete
    2. எனக்கு இந்த அனிருத் கேஸ் பத்தி முழுசாத் தெரியாது.. ஆனா பப்ளிசிட்டிக்காகவே இந்த மாதிரி பண்ணுறவங்களை என்ன பண்ணுறது?///
      ஒண்ணுமே பண்ண இயலாது நண்பா... நாம சொன்ன நாம அவங்க விஷயத்துல தலையிடுற மாறி ஆகிடும் . என் கருத்து இது. இதை சொல்லி சில பேர் என்னோட ஒத்துப் போனாங்கனா சந்தோஷப் படுவேன் அதான்...

      Delete
  2. பாஸ், எதோ சொல்ல வரீங்கன்னு மட்டும் எனக்கு புரியுது, ஆனால் என்னன்னுதான் தலைப்பைத் தவிர புரியவில்லை. தொடருங்கள், வேறெதுவும் எனக்கு தோன்றவில்லை நண்பா

    ReplyDelete
    Replies
    1. போன பதிவில் நீங்க சுட்டிக் காட்டிய விடயத்தைத்தான் சொல்லி இருக்கிறேன். பரபரப்பு வேண்டும் என சினிமா விமர்சனம் செய்ததையே நீங்கள் விமர்சித்தீர்களே? ஆனால் அதே பரபரப்புக்காக பிரபலங்களின் அந்தரங்க வாழ்வை கூறு போடும் ஊடகங்கள், பதிவுகளை நீங்கள் விமர்சிக்க மாட்டீர்களா? அதைத் தான் கொஞ்சம் தலையை சுற்றி மூக்கைத் தொட்டுள்ளேன் நண்பா.. அது குறித்து உங்கள் கருத்தை பதியுங்கள் நண்பா...

      Delete
  3. முரண்பட்டு என ஓட்டலித்தவன் நான் தான் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை தோழா... எதிர் கருத்துக்கே இடமில்லை என சொல்ல நான் என்ன அரசியல்வாதியா? பதிவின் உள்ளடக்கத்தை இன்னும் எளிமையாக்கி இருக்க வேண்டு என சொல்கிறீர்களா?

      Delete
    2. முதல் முறையாக என் பதிவுக்கு விளக்கம் தர வேண்டி வந்துள்ளது தோழா...
      அறிவியல் ரீதியாக மற்றவருடைய தனிப்பட்ட விடயங்களை அறியும் ஆவல் நமக்குள்ளே மூளை சில ரசாயனங்கள் தூண்டப் படுவதால் ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் கிசுகிசுக்கள், ஆபாசபடங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் எல்லாம் உருவாக்கப் படுகின்றன...
      தர்க்க ரீதியாக இதை சொன்னாலும் அதைத் தாண்டி மனிதத் தன்மையோடு பிரபலங்களின் வாழ்வில் நாம் தலையிடக் கூடாது என்று சொல்வதே இக்கட்டுரையின் சாராம்சம்.
      JZ புரிந்து கொண்டு மறுமொழி தந்தாரே... என் பிழை ( முரண்பாடு) என்னவென்று புரியவில்லை.

      Delete
    3. மன்னிக்கவும், முதலில் நான் தவறாக புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன் நண்பா. நானும் அடுத்தவர் சொந்த விஷயங்களில் தலையிடுவதை நானும் வன்மையாக கண்டிக்கிறேன். முதலில் நான் படித்தபோது ஏதேதோ சம்பந்தம் இல்லாத பல செய்திகளை கோர்த்துள்ளீர் என நினைத்துவிட்டேன், அது மட்டும் இல்லாமல் தலைப்பைப் பார்த்தது விட்டு உள்ளே பார்த்ததும் சிறு குழப்பம் ஏற்ப்பட்டுவிட்டது, பதிவின் நீளம் வேறு சிறு சோம்பலை ஏற்ப்படுத்தி விட்டது, அதனால் தான் நான் அப்படி கருத்து தெரிவிக்க சூழ்நிலை ஏற்ப்பட்டுவிட்டது, அதற்க்கு நான் மிகவும் வருந்துகிறேன். யார் அந்த அணிரூத்?

      நானும் நித்யானந்தா விஷயத்தை சன் டிவி கையாண்ட விதத்தை நானும் கடுமையாக விமர்சித்தேன், அது தவறு... நாம் எப்போதும் மற்றவரது அந்தரங்க செய்திகளை அறிந்து கொள்ளலாமல் இருக்கும் வரையே நமக்கு நல்லது.

      நல்ல எழுத்து, தொடருங்கள் நண்பா...

      Delete
  4. பிறரது சொந்த விஷயங்களை விமர்சிப்பது நல்லது அல்ல. நல்ல கருத்தைத்தான் சொல்லி இருக்கிறீர்கள்
    நன்று

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...

      Delete
    2. தமிழ்மணம் நட்சத்திர பதிவாளராக தெரிவானமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

      Delete
  5. நீங்க சொல்றது நியாயம் தான்...
    ஆனால், எத்தனை பேர் தயாரா இருக்காங்க?

    தலைப்பைப் பார்த்து இன்னொரு பரபரப்பு என்று ஒதுங்கி விட்டேன். அதற்கு வருந்துகிறேன்!

    (திரட்டிகளில் இணைக்கும் ஓட்டை நீங்க தான் போடணும்.. அப்ப தான் மத்தவங்க ஓட்டு போட வசதியா இருக்கும்!)

    ReplyDelete
    Replies
    1. சிலராவது யோசித்தால் போதும் நண்பா..

      தலைப்பைப் பார்த்து இன்னொரு பரபரப்பு என்று ஒதுங்கி விட்டேன்.//

      அதுல இப்படி ஒரு சிக்கலா? ஆனால் திட்டுவதட்காவது வருவாங்க அப்படின்ற நோக்கத்துலதான் அந்த தலைப்பு.

      Delete
    2. தமிழ் 10 இல் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா... நான் பகிர்ந்து விட்டதாகவே நினைத்தேன். ஆனால் எப்படியோ மிஸ் ஆகி விட்டது..

      Delete
  6. வோட்டுங்கிறது..நாங்களா பார்த்து போடறது...கேட்டு வாங்கக்கூடாது..வுட்டா பணமே கொடுப்ப போலிருக்கு...போ..தம்பி.போயி நல்ல..விதமா.ஸ்டேட்ஸ் போடு...

    ReplyDelete
    Replies
    1. வோட்டுங்கிறது..நாங்களா பார்த்து போடறது...கேட்டு வாங்கக்கூடாது..//
      ஹி ஹி அது என்னை நானே கிண்டல் அடிச்சு போட்ட வரிண்ணா... நீங்க சீரியஸ் ஆகாதிங்க .... பிடிக்கலன்னா இந்தப் பழமும் புளிக்கும்னு சொல்றது தப்பே இல்லைண்ணா... ஆனா ஒண்ணு முதல் வோட்டு நாமலே போடலான்னு தெரிஞ்சுகிட்டதே நம்ம ஆளுங்க அருண் சொல்லித்தான். அதுக்கு முதல்ல நன்றி....

      Delete
    2. வுட்டா பணமே கொடுப்ப போலிருக்கு//
      நமக்கு அந்த அளவுக்கு வசதி இல்லைண்ணா... எதோ மனத் திருப்திக்கு எழுதுறேன். நம்ம கருத்துக்கு என்ன பதில்னு தேடுறேன். மத்தவங்க பதிவில் என் கருத்தை சொல்லுறேன். இதிலிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு கற்றதை சொல்கிறேன், அவளவுதான்...

      Delete
    3. போ..தம்பி.போயி நல்ல..விதமா.ஸ்டேட்ஸ் போடு...//

      நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நல்ல பதிவுகளைத்தான் போடுவேன். அதுதான் என் கடமை . நிறைவோ குறையோ இப்படி சும்மா புத்தி சொல்றதுக்கு பதிலா மற்ற பதிவுகளைப் பார்த்துவிட்டு விமர்சனம் தந்துட்டு போய் இருக்கலாமே? நான் புது விஷயங்களை தெரிந்து கொண்டாவது இருப்பேன். ஒருவேளை இன்னொரு இன்னொரு அந்தரங்க செய்தியை காண வந்த ஏமாற்றமோ தெரியவில்லை உங்களுக்கு. எனினும் வருகைக்கு நன்றி.

      Delete
  7. உங்கள் பதிவின் பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன். உங்கள் வருகைதான் ஒவ்வொரு முறையும் புத்துணர்வு அளிக்கிறது.

      Delete
  8. ரொம்ப நல்லா சொல்லி இருக்கேங்க.. ஆனா சொல்ல வந்ததை இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாமோ என்று தோனுகிறது.
    அப்புறம் கண்டிப்பா இன்னொருத்தரோட அந்தரங்கத்தை அவருக்கே தெரியாம பார்கிறது தப்பு தான். ஆனா அனிருத் கேஸ் பப்ளிசிட்டிகாக அவரே தன்னோட மொபைல இருந்து இந்த படங்களை வெளியிட்டு இருக்கார். தெரிஞ்சே என்னோட அந்தரங்கத்தை பாருங்கன்னு சொல்லுறார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். இன்னும் சுருக்கமாக விளக்கமாக சொல்லி இருக்கலாம் ராஜ். அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன்.

      பப்ளிசிட்டிகாக அவரே தன்னோட மொபைல இருந்து இந்த படங்களை வெளியிட்டு இருக்கார்//
      அப்படியா ராஜ்? என்ன ஒரு குரூரம்? ஆனால் அதனை வரவேற்பது நாம்தானே? கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி ராஜ் ... புதிதாய் அறிந்து கொண்டேன்.

      Delete
  9. நண்பா இதுதான் உலகம்.அடுத்தவன் வாழ்வில் எட்டிப்பார்த்து பிரபல்யம் தேடுவது அசிங்கம்.இதை எல்லோரும் புரிந்தால் சுபமே!!!நல்லதொரு விடயத்தை பற்றி பேசியிருக்கிறீர்கள் நண்பா!பேசுவது சரி என்றால் சத்தமாக பேசுவோம்.!நிச்சயம் வெல்லலாம்.!சந்திப்போம் சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி.... இதைதான் எதிர் பார்த்தேன்... உண்மைதான் நமக்கு சரியெனப் பட்டதை உரக்க சொல்வோம். ஏற்றுக் கொள்வதும் எதிர்த்து நிற்பதும் அவரவர் இஷ்டம்.

      Delete
  10. I respect your opinion, but think about this .. Pictures/news/scandals like this 'Anirudh', are mostly leaked to the media by their own people, looking for coverage, limelight. So no point in blaming people who writes articles on them, isn't it?

    ReplyDelete
    Replies
    1. Thank you my dear friend.. Just now I came to know that it was leaked by him. But my article is not only based on Anirudh. It is about these articles which disturb someone's personal life. What if we reject these kind of nonsense? They won't be able to get coverage by this kind of things then. And my dear Azhagan, this is only a case but most of the times we sneak into their lives , Aren't we friend?

      Delete
  11. Anniyan varraar...
    Paraakkk.... Paraaakkkkkkkk..........

    ReplyDelete
    Replies
    1. Dei... indha mobile comment ellam venam . Maruvaadhiyaa olunga vandhu comment sollu nanbaa... Nan apdiye terror agiduven....

      Delete
  12. நல்ல அலசல் கமல் சொல்வதை போல் என் வீட்டு கழிப்பறையை எட்டி பார்க்காதீர்கள் என்று சொல்கிறீர்கள் இருந்தாலும் நாம் மதிப்பவர்கள் அல்லவா அதான் ஒரு ஏக்கம்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பா.. கருத்துக்கு , முதல் வருகைக்கு நன்றி நண்பா...

      Delete
  13. நல்ல விளக்கமான அலசல்..நல்லத விட கெட்ட விசயம் அதிக ஆர்வத்தை தூண்டுது.

    என் வலைப்பூ வில் சாதனை பதிவர்கள்(பதிவுலக சாதனையாளர்கள்) மறக்காம படிங்க.
    http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன்.. பகிர்வுக்கு நன்றி தோழா...

      Delete