Monday, August 6, 2012

பிளாக்கர் follower விட்ஜெட்டை காணவில்லையா? அய்யகோ!




நல்லாத்தான் போயிட்டு இருந்தது. நேற்று முன்தினம் திடீரென என் பிளாக்கர் follower  விட்ஜெட்டை காணவில்லை. நானும் தேடாத இடம் இல்லை ( பிளாக்கர் layout உள்ளே தான். ) வேண்டாத தெய்வம் இல்லை. ம்ஹும். காணோம். இடியே விழுந்தாப் போல ஆகிவிட்டது. இப்போதான் வலைப் பதிவுகளில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். 
இப்போதான் என் பதிவுகளைப் பார்த்து ( அல்லது பரிதாபப் பட்டு) என்னை சில அன்பர்கள் தொடர ஆரம்பித்திருந்தார்கள். ( ஓபனிங் சீன்லயே அவமானமா?) 

 சரி போனால் போகட்டும் விடலாம் என்றால் ....டாஷ்போர்ட் போய் என்னை follow யாரும் செய்யும் அளவுக்கு நான் ஒர்த் இல்லையே!   
எல்லாத் திரட்டியிலும் பதிவை இணைத்து , இல்லாத மூளையை கசக்கி தலைப்பு வைத்து , வாசிக்கும் பதிவுகளின் பதிவர்களை எல்லாம் கூப்பிட்டு , விழி பிதுங்கி நின்றாலும் ஹிட்ஸ் 100 ஐத் தாண்டுவது குதிரைக் கொம்பாக அல்லவா உள்ளது? பின்பற்றுபவர்கள் என்றால் ரீடிங் லிஸ்டில் பார்த்து வாசிப்பார்கள் என்றால் இப்படி ஒரு சோதனையா? 

சில மணிநேரங்கள் தவித்து விட்டேன். கையும் ஓடல, காலும் ஓடல. எதோ என் அட்டுப் பதிவுக்குக் கூட நண்பன் ஹாரி உம் அண்ணன் தனபாலனும் நல்ல கமெண்ட் தந்தனர்.     ( மவ ராசங்கள் என் மனசு கஷ்டப் படக் கூடாதுன்னு ) அதுவும் போச்சா? டெம்ப்ளேட்டே மாத்தி, சில காட்ஜெட்டுகளை நீக்கி, ம்ஹும்....

சில நேரங்களில் மனசு விட்டுப் போனாலும் கொஞ்சம் தேற்றிக் கொண்டேன். கூகிள் சர்ச் பண்ணி ஏதேதோ ட்ரை பண்ணிட்டேன். ஏதும் ஒத்து வாறப் போல தெரியல. 
போலீஸ் கம்ப்ளைன் பண்ணலான்னு கூட தோணிச்சு. எங்க? நம்ம ஊர்ல ' வெள்ளை வான் " மூலம் காணாம போன புண்ணியவாங்கலையே வருஷ கணக்கா தேடுறாங்க .. தக்கனூண்டு விட்ஜெட் எந்த மூலைக்கு?! 

என் சந்தேகம் பலர் மேல் திரும்பியது. ( அரண்டு போனவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே?). குருஜி பத்தி போட்ட பதிவால அவருடைய சிஷ்ய கோடிகளில் யாராவது? ச்சே ச்சே... அவருக்கு அது முடிஞ்சு அடுத்த பிரச்சனைல மும்முரமா இருக்காரே! 
(கிடைக்குற சந்துல விளம்பரம் தேடுவம்ல.....)
ஒருவேளை நம்ம வளர்ச்சி! பிடிக்காம யாரும் பண்ணிருப்பங்கனா நம்ம அந்த அளவா வளந்துட்டோம்?

ஒரு பிளாக்கர் இருக்குனு இவன் பண்ற அலப்பறை தாங்க முடியலன்னு யாராவது? இருக்கலாம். நாமளும் வர வர ஓவராத்தான் போறம். சரி எல்லாம் அவன் செயல்னு நம்ம ப்ளாக் எழுதுறத நிறுத்திடலானு முடிவும் பண்ணிட்டேன். ( இந்த இடத்துல நீங்க அப்பாடான்னு விடுற பெருமூச்சு விளங்குது). அப்பத்தான் ஒரு ட்விஸ்ட் . நம்ம நண்பன் சிகரம் பாரதி போன் பண்ணினான்.

" உன் பிளாக்கர் செட்டிங்க்ஸ்ல மொழி அப்டிங்குற இடத்துல தமிழ் வேணாம் ஆங்கிலம்னு மாத்து. அதான் உன் விட்ஜெட் மாயமான வரலாறு அப்டின்னான். "
 இது என்னடா மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு?? ( நாம இந்த டெக்னாலாஜி விஷயத்துல வீக் ). அஜித் படத்துல வார மாறி கண்ணாடிய திருப்பின உடனே எப்படி ஆட்டோ ஓடும்? 

சரி , நீ படிச்சவன் சொல்ற, பாரு. செட்டிங்க்ஸ்ல போய் மொழிய மாத்திட்டேன் . மாறாது பாரதி ....??????
அட மாறிடுச்சு. !!!!!

சிகரம் சிரித்துக் கொண்டே " உன் சேவை பதிவுலகத்துக்கு தேவை " அப்படினான். ( எல்லாம் பதிவுலகின் தலைவிதி) 
நன்றி சிகரம் பாரதி...  

இந்தப் பதிவின் நோக்கம் என்னவென்றால் மொழி என்ற இடத்தில தமிழ் என பதியும்போது குறித்த விட்ஜெட் காணாமல் போய்விடும். இதனை சரி செய்ய அல்லது இனி அதை செய்யாமலிருக்க உங்களுக்கு மெசேஜ் ஒன்று கிடைத்திருந்தால் மிக்க மகிழ்ச்சி. இதை சற்று சுவாரசியமாக சொல்ல நினைத்தேன். இந்த சந்தர்ப்பத்தை என் வலைப் பதிவுக்கு பல வாசகர்களை அறிமுகப் படுத்திய அன்பு நண்பன் சிகரம் பாரதிக்கு நன்றி கூறவும் பயன்படுத்திக் கொள்கிறேன். 

ஏங்க! ஒரு  சின்னூண்டு விட்ஜெட் விஷயத்தை வைத்து எவ்வளவு மொக்கை போட்டு விட்டேன். ? கொஞ்சம் பகிர்ந்துகொள்ள மாட்டிங்களா? சரி, சரி ..... follower விட்ஜெட் பத்தி சொன்னேன்தானே? அப்படியே இந்த தளத்தில் இணைந்து கொண்டு எனக்கு சப்போர்ட் பண்ணுங்களேன். மாட்டிங்களா! அச்சா பிள்ளை இல்ல!  

பி.கு. 
படு மொக்கைப் பதிவு அப்படின்னு கோபிக்க வேணாம். என் சீரியஸ் பதிவுகளை வாசித்து  கருத்து   சொல்லி விட்டு போங்களேன். 


16 comments:

  1. கலக்க ஆரம்பிச்சுட்டீங்களே... வாழ்த்துக்கள்...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...வந்தாச்சா அண்ணே? ஆனாலும் நீங்க ரொம்ப அநியாயத்துக்கு வேகம்கண்ணே..... ரெம்ப சந்தோஷம்னே.... அப்டியே நமக்கு நாலு கள்ள ஓட்டு குத்திடுங்கண்ணே ...

      Delete
  2. ///என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?//
    உங்க பதிவு முன்னமே பாத்து கமெண்டும் குடுதுட்டேன்கண்ணா.....

    ReplyDelete
  3. //நாம இந்த டெக்னாலாஜி விஷயத்துல வீக்//

    மீ டு மச்சி.. ஆனாலும் சொல்றன் மச்சி அதிக விட்ஜெட் யூஸ் பண்ணாதிங்க.. பலது பிதுங்கி கிட்டு நிக்குது..

    //மவ ராசங்கள் என் மனசு கஷ்டப் படக் கூடாதுன்னு//

    ஏன்யா.. ஏன்?
    சூப்பரா தான் எழுதுறீங்க.. கலக்குங்க..

    ReplyDelete
    Replies
    1. ஹாரி சொன்னது போல Widget நிறைய இருக்கிறது. அதனை குறைத்துக் கொள்ளுங்கள்.

      Delete
  4. Btw, Google Friend Connect is getting retired and you may not able to use either http://support.google.com/friendconnect/bin/answer.py?hl=en&answer=2440229

    ReplyDelete
    Replies
    1. என்ன இளா? இம்புட்டு தூரம் வந்துட்டு ப்ரன்ஸ் ஆகலைனா எப்படி? Yes I know but I hope it will be available for bloggers.

      Delete
  5. ///சூப்பரா தான் எழுதுறீங்க.. கலக்குங்க..///
    ஏய்...என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே? !!

    ReplyDelete
  6. அண்ணா, நாங்க ஓட்டே போட்டது இல்லங்கண்ணா, அதாவது ஓட்டு போடுவது எப்படின்னு யாரும் பாடம் நடத்தவேயிலிங்கண்ணா...................

    ReplyDelete
    Replies
    1. அடக் கடவுளே... ஓட்டு போடலையா? அப்ப ஓட்டு சீட்டை தாங்க சார் .... நாங்களே போட்டுகுறோம் ...... வருகைக்கு நன்றி நண்பரே! என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்....

      Delete
  7. ஹா..ஹா..ஹா... அவசியமான விஷயத்தை நகைச்சுவையாக சொன்னது நன்றாக உள்ளது நண்பா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா... உண்மையில் 'நா அப்டியே ஷாக்காயிட்டேன். "

      Delete
  8. நன்றாக உள்ளது...நண்பா!

    ReplyDelete
  9. நன்றி நண்பா.... என் தளத்தில் இணைந்து எனக்கு உறுதி சேர்க்க வரவேற்கிறேன்.

    ReplyDelete
  10. நன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கு நன்றி அன்பரே..... என் தளத்துடன் இணைந்து கொள்ள வரவேற்கிறேன்.

      Delete