Thursday, August 9, 2012

புலியைப் பார்த்து பூனை சூடு வைத்துக் கொண்ட கதையா SLPL


இலங்கையில் தற்போது பரபரப்பாக பேசப் படும் விடயம்தான் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக். இந்தியாவில் வணிக ரீதியாக சக்கை போடு போடும் இன்டியன் பிரீமியர் லீகினை முன்னுதாரணமாகக்  கொண்டு  தொடங்கப் பட்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டு தொடர்தான் இது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. 

இன்டியன் பிரீமியர் லீகிற்கு இது போட்டியாக இது அமையப் போவதில்லை என இந்தியாவுக்கு நன்கு தெரியும். ஏன்? இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும் இது நன்கு தெரியும். பின்பு எதற்காக இந்த முயற்சி.? இன்னும் இலங்கை வீரர்கள் தொடர்பான சம்பளப் பிரச்சினையே தீரவில்லை. 


கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம். அதில் சச்சின் கடவுள் என பிரபலமான கூற்று ஒன்று உள்ளது. அது உண்மைதான். கடவுள் உள்ள இடத்தில பணம் கொழிக்கும் அல்லாவா? 
அந்த அளவுக்கு சந்தைப் படுத்தல் திறமை, வாய்ப்பு இலங்கையில் உண்டா என்பது சந்தேகமானதே...
புலியைப் பார்த்து பூனை சூடு வைத்துக் கொண்ட கதை ஆகி விடுமோ தெரியவில்லை. 

இலங்கையின் பல பாகங்களை வலயங்களாகப் பிரித்து அதற்கு உள்ளூர், வெளியூர் வீரர்களை இணைத்து நடத்தப் படப் போகிறது. அப்படியே இந்தியன் லீக் போல. 

உலகின் மிகப் பெரிய பலம் வாய்ந்த கிரிக்கெட் கட்டுபாட்டு சபை பிசிசிஐ தான். ஐசிசி கூட அதன் கைப்பாவை ஆகி விட்டதாக பல வீரர்களின் குற்றச் சாட்டும் அதன் மீது உள்ளது. அந்தளவுக்கு பலம் கொண்டதல்ல , இலங்கை கட்டுப்பாட்டு சபை. 

இது குறித்து பல தரப்புகளிலும் பல்வேறு பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
இலங்கை கிரிக்கெட் அரசியல் சார்ந்த விஷயமாகவும் மாறி விட்டது. இந்நிலையில் இது நாடு அணிக்காவது உபயோகமா அமையுமாக இருந்தால் சந்தோஷம்தான். ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நஷ்டத்தில் இயங்குகிறது. வீரர்களுக்கான ஒப்பந்தப் பணம் கூட முறையாக வழங்கப் படவில்லை. இந்நிலையில் இந்தப் போட்டிகள் லாபநோக்கம் கருதி மட்டுமே நடத்தப் படுவதில் சந்தேகம் எதுவுமில்லை.

ஏற்கெனவே இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி செலவுகள் விடியப் போவது யார் தலையில்? 
ஏற்கெனவே ஐ பீ எல் போட்டிகளின் சர்ச்சைகளே ஓய்ந்த பாடில்லை. 
இந்தப் போட்டிகளின் மூலகர்த்தா கபில் தேவ். இந்திய அணி கடுமையான வீழ்ச்சியில் இருந்த போது இளம் வீரர்களை உருவாக அவர் உருவாகியதுதான் ஐ சி எல் . காலத்தின் போக்கில் அவரையே ஒதுக்கி பன்பலதுடன் மிரட்டலாக உருவாக்கப் பட்ட அமைப்புதான் ஐ பீ எல். 

சூதாட்டம், பாலியல், போதை மருந்துகள் என எதற்குமே சளைக்காத போட்டித் தொடர்தான் இது. 
ஆனால் தொடர் ஆரம்பிக்கப் பட்ட நோக்கத்தை விட்டு அது எப்போதோ விலகிச் சென்று விட்டது. 

ஆனாலும் இந்திய அதை விடாமல் தொடர பணம் தவிர வேறு  என்ன காரணமாக இருக்க முடியும்?

இந்தப்  போட்டித் தொடரின் மூலம் பெரிய லாபத்தைப் பெற்று விடலாம் என்பதே இலங்கை கட்டுப்பாடு சபையின் கனவு. அந்த கனவு நனவாகுமா என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும்...

ஆனால் இந்தியாவைப் போன்ற வர்த்தக வெற்றியை இலங்கையில் எதிர்ப் பார்க்க முடியாது. முதலாவது இந்தியாவின் சனத் தொகை, சந்தைவாய்ப்பு, பணபலம் பார்வையாளர்கள் அனைத்தும் பன்மடங்கு அதிகம். 
இந்தத் தொடர் சாதிக்குமா அல்லது சொதப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்திய வீரர்கள் யாரும் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என அறிவிக்கப் பட்டுள்ளது. பிசிசிஐ இந்த போட்டி தொடரை விரும்பவும் இல்லை. இதை தொடர்ந்து இலங்கையில் சிலர் பொய்யாக IPL போட்டிகளில் நமது வீரர்களை விளையாட விடக் கூடாது என்றாலும் அது நடக்கப் போவதுமில்லை. ஏனென்றால் அதனால் நட்டம் இலங்கைக்குத்தான். இது வெற்றுக் கே ஊசல் மட்டுமே! இலங்கையில் இந்தியா மீது வெறுப்பு கொண்ட சிலரின் உளறலே இது. 

சென்ற வாரம் நடந்து முடிந்த இலங்கை இந்திய சுற்றுலாவில் காயம் கொண்ட இலங்கை நட்சத்திரம் " குமார் சங்கக்கார " இந்தத் தொடரில் விளையாட மாட்டார் என்பது ஒரு உபரித் தகவல். 

பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்வுக்காக இடது பக்க கீழ் மூலையில் ஒரு முட்டையை வைத்துள்ளேன் பாருங்கள். அதில் போய் பகிந்து கொள்ளுங்கள்.


நன்றி: அருண். 

5 comments:

  1. கிரிக்கெட் ஆர்வலர்கள் (வருகையாளர்கள்) பொறுத்து அமையும்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    நன்றி…

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் திண்டுக்கல் அண்ணா.... பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமானால் பாராட்டத் தக்கதே...

      Delete
  2. ம்ம்ம்ம்! :) நிறைய உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies

    1. உண்மை நண்பா... இதோ இறுதிப் போட்டியும் வந்து விட்டது. ஆனால் நல்ல இளம் வீரர்கள் ஒரு சிலரையே இனம் கண்டுள்ளர்கள் என்பதே எனது ஆதங்கம்... நல்ல நோக்கம் நிறைவேறினால் மட்டுமே பயன் உண்டாகும் தோழா... வருகைக்கும், கருத்துக்கும் நண்பனாக இணைந்தமைக்கும் நன்றி தோழா...

      Delete