Friday, August 10, 2012

காயத்துக்கு மருந்து போடும் " சோபாலபுரம்"


காயத்துக்கு மருந்து போடும் " சோபாலபுரம்"
( Silaignar  " Seernithi" - The wound healer


சோபாலபுரம் சோர்வடைந்து கிடக்கிறது. 
முத்தமிழ் , இனியதமிழ், அருந்தமிழ் என்று தொடர்ந்து வரும் அனைத்து இத்தியாதிகளையும் தன்னுடைய எழுத்தாணி கொண்டு வளர்த்து வைத்த ( அல்லது அப்படி சொல்கிற ) சிலைஞர் சீர்நிதி , தன்னுடைய கட்சிப் பொதுக் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார்.  கட்சியில் ஆளுக்கொரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

சீர்நிதி தன் கைகளை உயர்த்தி எதோ சொல்ல முயல்கிறார். சலசலப்பு குறைய மாட்டேன் என்கிறது. தலைவரின் வாரிசுகள் இரண்டினதும் விசுவாசிகள் ஆளுக்கொரு பக்கம் கத்துகிறார்கள். 

தலைவருக்கு தான்தான் கட்சித் தலைவரா என்பது சந்தேகமாக இருக்கிறது. கட்சி நோட் பாடினை எடுத்துப் பார்க்கிறார். ஆமாம் , அவர்தான் தலைவர். 
எதோ முடிவுக்கு வந்தவர், தொண்டையை செருமுகிறார். 
" தண்ணி குடிங்க தலைவரே..!" பக்கத்திலிருந்த தொண்டர் கரிசனையோடு சொல்ல அவரை முறைக்கிறார். 
" அமைதியாக இருக்க சொல்லு..."
சில பல போராட்டத்துக்கு பிறகு ஒருவாறு கொஞ்சம் சத்தம் குறைகிறது. 

" கட்சி கடலுக்குள் மூழ்கி காலாவதியாகி விட்டது; காலமோ எமக்கு காலனாகி விட்டது , இந்நிலையில் உடன்பிறப்புகள் இப்படி உரத்த குரலில் கூச்சல் போடலாமா?"

' இப்படி ஒரு வரி செய்தியை ஒன்னரை மணி நேரம் நீட்டி நீட்டித்தான் "அந்தம்மா " ஜெயிச்சதும் இல்லாம எதிக்கட்சி நாற்காலி கூட குடி முழுகிப் போச்சு என யாரோ சொல்வது தெளிவாகக் கேட்டது... ஆனாலும் தலைவர் தொடர்ந்தார். 

" கட்சிக் கூட்டத்தில் இப்படி என் காலை வாரி பேசாமல் அதைத் தூக்கி நிறுத்த தூண்களாக நில்லுங்கள். உடைந்து போன என் செல்வாக்குக்கு உறுதி சேர்க்க உண்ணாவிரதம் செய்யுங்கள். "

' ம்ம்கும்... .. உங்க உண்ணாவிரதம் பத்திதான் ஊருக்கே தெரியுமே... ' மறுபடியும் ஒரு குரல்...


" ஆமாம். அது கொஞ்சம் உண்மைதான். சாயம் வெளுத்துப் போச்சு. அந்த நேரத்தில் பொங்கி வந்த மக்கள் சக்தியை முட்டுக் கொடுத்து நிறுத்த கொஞ்சம் சாணக்கியத் தனம் தேவைப் பட்டுச்சே.... " 

அது  சாணக்கியத் தனம் இல்லை தலைவரே ... சல்லித் தனம்..." இந்த முறை நேரடியாக.
" நடந்ததை விட்டு நடக்கப் போவதை பேசுவோமா?"

" நேசத் தலைவனுக்கு நேந்துக் கிட்டு எடுத்த விழா "ஏதாவது எடுக்கலாம் இல்லையா? "

" எங்க தலைவரே.... பஞ்சாயத்து நம்ம கைல இருந்தப்ப வராட்டி ஊரை விட்டு விலக்கி வச்சுடுவோனு மிரட்டலாம். இப்பதான் பஞ்சாயத்துல உட்காரவே நாதி இல்லையே! "  

" வழக்கமா பகுத்தறிவும் பேசுவிங்க. பக்கத்துல ஒருத்தர் உங்களுக்கு பல்லாண்டு பாடுவார். உங்க குடும்பத்துல உள்ளவங்க உங்க பிறந்த நாளுக்கு பால்குடம் தூக்குவாங்க. இந்த முறை அந்த பருப்பே வேகாது தலைவரே...." 

" என்னதான் இருந்தாலும் நம்ம மக்கள் அதெல்லாம் மறக்க ரொம்ப நாள் ஆகாது..  அவங்களுக்கு நம்ம ரெண்டு கட்சிய விட்டா என்ன கதி?  " தலைவர் முகத்தில் ஒரு நம்பிக்கை. 

' அதானே அந்த ஒன்னுதான்  நம்ம மக்களையும் எங்களையும்  பிடித்த பீடையும் ' ஒரு வேட்பாள சிகாமணி மனதுக்குள் பொருமிக் கொண்டார். 

" உன் மைன்ட் வாய்சை நான் கேட்ச் பண்ணிட்டேன். தலைவர் தொடர்ந்தார். 
" நம்ம காயத்துக்கு மருந்து போடும் ப்ராஜெக்ட் என்ன நிலைமையில் இருக்குது ? தமிழ் மக்கள் , உலக புலம் பெயர்ந்தவங்க என்ன சொல்றாங்க?"தன் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார். அவரும் டாக்டர்தானே? 

" ஆணியே ***** வேனாங்குறாங்க... "
"ஏன்?"
அடி பட்டப்ப பிடில் வாசிச்சுட்டு இப்ப ஏன் செத்த பிணத்துக்கு  எம்பாம் பண்ண வாரிங்கன்னு கேக்குறாங்க.... "

" அவங்க என்ன மடயன்களா தலைவரே? அடி பட்டப்ப சும்மா இருந்திங்க.... முதுமை காரணமா பயணம் பண்ணாம இங்க இருந்து கடிதம் அனுப்புனிங்க....  ஆனா உங்க மகள் எதோ பஞ்சாயத்துல மாட்டுனதும் சிட்டாப் பறந்துடின்களே.... இதெல்லாம் பாத்துக் கிட்டுதான் இருக்காங்க... பத்தாதுக்கு இந்தப் பதிவுப் பயல்களும் வாங்கு வாங்குன்னு வாங்கிடரானுன்களே   ...."

அது பிள்ளைப் பாசம், பெற்ற மனம் பித்துன்னு சொல்லிருக்கலாமே... நம்ம மக்களுக்கு சென்டிமன்ட் ரொம்ப பிடிக்குமே..."

" அது சொல்லிப் பாத்தாச்சு தலைவரே.... அதான் உங்களை சிறந்த குடும்பத் தலைவனா அறிவிச்சு பதிவர்கல்லாம் விழா நடத்துநாங்களே தெரியாதா? அதனால் குடும்பத்த நீங்க பாத்துக்கங்க எங்கள பாத்துக்க வேற யாரையும் நாங்க தேடிக்குரோங்கறாங்க... அந்தம்மா இந்தப் பஞ்சாயத்து எலெக்சன்ல ஜெயிக்க காரணமே நீங்கதான்னு ஒரு கதையும் இருக்குது. "
தலைவரின் பல்பு மறுபடி அணைகிறது?

" வேறு நல்ல செய்தியே இல்லையா? " 

" ஏன் இல்லாம? உங்க நடிப்பை பார்த்து வியந்து பக்கத்துக்கு நாடு தமிழர்கள் மயங்குரான்களோ இல்லயோ... பெரும்பான்மை மக்கள் நம்பிடுறாங்க. பெரும் வரவேற்ப்பு இருக்கு... உங்களையும் நம்பி எதிர்ப்பெல்லாம் இருக்கு ... புப்ளிசிட்டி தலைவரே.. பேசாம அங்க ஒரு வெப்சைட் தொடங்குவோம். ஹிட்சாவ்து கிடைக்கும். 

வேறு ஏதாவது நாடகம் எழுதி வச்சுருக்கின்களா  ? "
" இல்ல தலைவரே.... உங்க உண்ணாவிரத நாடகத்துக்கு ஏன் தேசிய விருது கிடைக்கலன்னு அங்க பட்டிமன்றமே நடத்துறாங்க... அதை தூக்கி சாபிடற மாறி எதாவது பண்ணனும் தலைவா....."

என்கிட்டே ஒரு ஐடியா இருக்கு ...... 



எல்லோர் பார்வையும் அந்தப் பக்கம் திரும்பின......
ஐடியா கமெண்டில் சொல்லுங்கையா.......     

இதை வாசிக்குறப்பவே தெரிஞ்சுருக்கும்  .   
யாவும் கற்பனை... 
சுபம்.

தொடரும்...

23 comments:

  1. நகைச்சுவையுடன் ஏதோ ஒரு உள்குத்தும் புரிகிறது நண்பரே!!!!!வாழ்த்துக்கள்.அந்த........நிதி எவ்வளவு கத்தினாலும் காதில விழுதிலயே!!!11வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. உள்குத்து எல்லாம் எதுவும் இல்லை நண்பியே.... புரியாமல் எல்லாம் இல்லை இந்த நிதி( நரி) க்கு.......

      Delete
  2. ஹா... ஹா... நல்லதொரு சிந்தனை... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா.... சிந்தனை என்பதை விட நம் தலைவிதி எனலாம் இல்லையா?

      Delete
  3. ஓ.கோ... இப்படி கூட திட்டலாம் போலிருக்கே...

    ReplyDelete
    Replies
    1. திட்டெல்லாம் இல்லை நண்பா.... அவர் நமக்கு எம்புட்டு பண்ணிட்டார்?

      Delete
  4. நல்லா எழுதியிருக்கீங்க...!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கு நன்றி அன்பரே....எனது தளத்தில் இணைந்து கொள்ளுங்கள் தோழா....

      Delete
  5. வெசம் வெசம் அத்தனையும் வெசம்...http://tamilmottu.blogspot.in/2012/08/exclusive.html

    ReplyDelete
    Replies
    1. தேன் கலந்த வெசம்யா ... தாங்கள் என்னுடன் இணைந்து கொண்டமைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே....

      Delete
  6. Replies
    1. உங்கள் முதல் பார்வைக்கு நன்றி அன்பரே...

      Delete
    2. தளத்தில் இணைந்து கொண்ட " கோவைநேரம்" அவர்களை வரவேற்கிறேன். நன்றி சகோதரா... முன்னைய பதிவுகளை வாசித்து கருத்து சொல்லுங்கள்.

      Delete
  7. "புத்தர் பதிவு "தமிழ் 10 இல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து எனது இப்பதிவுக்கு அதிக வரவேற்பும் வோட்டுகளும் கிடைத்தன. அன்பர்களுக்கு என் நன்றிகள்....

    ReplyDelete
  8. நல்லா சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete
  9. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து
    கொச்சி தேவதாஸ்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தேவதாஸ் அவர்களே ... மன்னிக்கவே முடியவில்லை... என் தளத்துக்கு வரவேற்கிறேன் அன்பரே....

      Delete
  10. நல்ல காமெடி பீஸ்!

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரிந்துவிடக் கூடாது என்பதில் அக்கறை செலுத்தி, ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றாக புரிய வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறேன் நண்பா... வயதுக்கு மதிப்பளித்தே பெயரைக் கூறவில்லை...

      Delete
    2. "சோ"பாலபுரத்துக்கு என்ன வயது, நண்பா ?!

      மற்றபடி, தங்களது வயிற்றெறிச்சல் புரிகிறது!

      Delete
    3. உண்மைதான் ... ஆனால், இந்த வங்குரோத்து அரசியல்தான் நமக்கு பழகி விட்டதே நண்பா...

      Delete
  11. "அப்ப சண்டை முடியலையா? பிரதமர் அப்டிதான்யா சொன்னார்.... பயபுள்ள ஏமாத்திட்டார் போலருக்கு..."
    மகாநாடு முடிவை பாத்திங்களா? ஐ நாவையும் ஏமாத்தப் போறாங்களாமே...? இருக்கட்டும்.. இன்னொரு பதிவோடு வாறன்,,, இன்னும் கோபத்துடனும் வேகத்துடனும்...

    ReplyDelete