Friday, August 31, 2012

மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....

பதிவின் முன்னைய அத்தியாயங்களுக்கு இங்கு செல்க...
கடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் 
சாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்
மண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3

மிஞ்சி இருந்த தமிழர்கள் என நான் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டது மிகைப் படுத்தப் பட்ட ஒன்று அல்ல.. 
மன்னாரில் இருந்து மாத்தளை நோக்கி சென்ற அவர்களுக்கு தகுந்த வசதிகள் எவையுமே அளிக்கப் படவில்லை. சுகாதார வசதிகளும், இயற்கைக் கடன்களை தகுந்த விதத்தில் பூர்த்தி செய்யும் வசதிகளும் அறவே இல்லை. இலங்கையின் வெப்ப வலயத்தின் எத்தனையோ தடைகளை அவர்களால் தாண்டி வந்திருக்க முடியும். ஆனால் ஒன்றை மட்டும் அவர்களால் தாண்டி வர முடியவில்லை. 
அது : மலேரியா... 

பிழைப்புக்காக வந்த மக்களை அந்த ஆட்கொல்லி நோய் ஆட்கொள்ளத் தொடங்கியது. அவர்கள் என்ன சொந்தமா அல்லது  பந்தமா, ஆங்கிலேயர்களுக்கு?  கூலிக்கு வந்தவர்கள்தானே? 
ஆரம்ப நிலையில் அழைத்து வரப் பட்ட தமிழர்களில் நாற்பது சதவீத மக்கள் மட்டுமே மாத்தளைக்கு முழுதாய் வந்து சேர்ந்ததாக புள்ளிவிபரம் சொல்கிறது. ஆட்கொல்லி நோய்க்கு விருந்தாக  மக்கள் மடிந்து விழுந்தனர்...  மீதம் இருந்தவர்கள் தங்களுடைய உறவுகளின் இழப்பை மனதுக்குள் தேக்கி விட்டு தோட்டங்களுக்கு புறப் படுகிறார்கள். 

மாத்தளை அவர்களின் தரிப்பிடம் மட்டும்தான். அவர்கள் மத்திய மலைநாட்டின் பகுதிகள் முழுவதற்கும் பிரித்து அனுப்பப் படுவார்கள். அங்கு அடர்ந்து கிடக்கும் காடுகளை அழித்து கோப்பி பயிரிட வேண்டும். அது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலை கிடையாது. 
ஆங்கிலேயர்க்கு முன்பு இலங்கையை கைப்பற்றிய போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர் ( டச்சுக்காரர்) இருவருக்குமே மத்திய மலை நாட்டை  கைப்பற்ற முடியவில்லை. இலங்கையின் மன்னன் அப்போதெல்லாம் கண்டியில் ( மலைநாட்டின் தலைநகரம்) ஒளிந்து கொள்வான். அது சிங்களவர்க்கு பாதுகாப்பாக இருக்க மிகப் பெரிய அரண் இந்த மலைகள் மற்றும் காடுகள்தான். 

சிங்களவர்களுக்கு இடையில் உள்ள சாதி அமைப்பில் முக்கியமான பிரிவு இந்த உயர்நாட்டு ( கண்டி) சிங்களவர் , தாழ்நாட்டு சிங்களவர் என்பதுதான். கண்டி சிங்களவர்கள் தங்களை உயர் சாதியினரை பெருமையடிக்கக்  காரணம் தாங்கள் கடைசி வரை சுதந்திரமாக இருந்த வீரர்கள் என்பதுதான். 

ஆனால் அதற்க்கு முக்கியமாக காரணம் மலையகத்தில் காணப் பட்ட இந்த கடுமையான தடைகள். ( இறுதியாக இலங்கையை ஆண்ட மன்னன் கண்ணுசாமி என்ற தமிழன். அவனால்தான் நாங்கள் நாட்டை ஆங்கிலேயரிடம்  இழந்தோம் என இனவாதம் பேசுபவர்கள் இன்றும் உள்ளார்கள். " கண்டி ராச்சியத்தில் இறுதி மன்னன் மக்களிடயே செல்வாக்கு இழக்க முக்கிய காரணம் அவன் சிங்களவன் இல்லை என்பதுதான் " என வரலாறு பாடப் புத்தகங்களில் எவ்வித தயக்கமும் இல்லாமல் போதிக்கப் படுகிறது) 

இத்தகைய கடுமையான இடர்களைக் கடந்து அந்த மலைகளில் பயிர் செய்யத் தொடங்கினார்கள்.
இந்த வரலாறுகளை தெளிவாக எடுத்து சொல்ல மலையக மக்களிடம் முறையான ஆவணம் இல்லை என்பதே உண்மை. ஆதாரம் அற்றவை என்பதோ அவர்கள் விரும்பவில்லை என்பதோ இல்லை. அதற்கான துளி வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை என்பதே அதற்கான காரணம். புத்தக இலக்கியங்களை எழுதி வைப்பதற்கான கல்வியறிவோ, பணவசதியோ அவர்களுக்குக் கிட்டவில்லை. 
எனவேதான் ஈழத்து இலக்கியத்தில் மலையக இலக்கியம் மிகவும் பிற்பட்ட காலத்திலேயே ஆரம்பமாகிறது. 

மலையக இலக்கியம் என்று தேடத் தொடங்கினால் அவர்களின் சமூகம் சார்ந்த படைப்புகளின் தொடக்கம் 1950 களைத் தாண்டித் தேடப் படவேண்டியுள்ளது. பெரும்பாலான படைப்புகள் அவர்களின் வஞ்சிக்கப் பட்ட வரலாறு தொடர்பானது. சில பெருந்தோட்ட மக்களின் கதாநாயகர்களின் வரலாறு தொடர்பானது. 

( என் கைவசம் ஏராளமான நூல்கள் உள்ளன. அவற்றை எனது வாசகர்களுக்கு சுட்டிகள் மூலமாக தர விரும்புகிறேன். அதற்க்குப் போதுமான வரவேற்பு கிடைக்குமா தெரியவில்லை. ஆனால் தனியுரிமை விடயங்கள், ஆக்கிகளின் சம்மதம் என்பவற்றை சரிசெய்து விட்டு அதனை செய்யவுள்ளேன். அதிஷ்டவசமாக பல மூத்த மலையக இலக்கியவாதிகளை நேரடியாக நான் அறிந்து வைத்துள்ளேன். )

அந்த இலக்கியங்களின் சுவை எழுத்து நடை சார்ந்து இராது. மாறாக அவர்களின் துன்பியல் வாழ்வை  சார்ந்து இருக்கும். 
வரலாறு என்று நோக்கும் போது ஆங்கிலேயரின் பதிவுகள் சில உள்ளன. ஆனால் அவை மக்கள் வாழ்வைப் பிரதிபளிப்பதில்லை . ஆனால் வாய்மொழி இலக்கியம் மட்டுமே அதற்கு சான்று. நாங்கள் தமிழ் இலக்கியம் படித்த போது வாய்மொழி இலக்கியங்களில் மலையக நாட்டார் பாடல்களுக்கு தனியிடம் வழங்கப் பட்டது. 

நாட்டார்பாடல்கள் கவித்திறன் மிக்கவர்களால் இயற்றப் பட்டவை அல்ல. மாறாக உழைக்கும் மக்களால் களைப்பு தெரியாமல் இருக்கப் பல்வேறு காலங்களில் பல்வேறு மக்களால் மாற்றங்களுடன் பாடப் பட்டவை. அவற்றில் பல ஏட்டு வடிவம் பெறாமல் அழிந்துபட்டுப் போயிருக்கக் கூடும். கரடு முரடான மலையகம் தமிழர் வருகையின் போது எப்படி இருந்தது என்பதற்கு இந்தப் பாடலின் ஆரம்பத்தைப் பாருங்கள்.

" அன்று இந்த மலைநாடு 
எங்கும் அது பெருங்காடு.....
ஆதவனின் நிழல் கூட
பூமிதனில் படராது............"

கோப்பி பயிர்ச் செய்கைக்கு பின்னர் மக்களுக்கு அந்த குடில்கள் தரப்பட்டன. இலங்கையின் மற்ற பகுதிகளை விட மலைநாட்டில் குளிர் அதிகம். அதற்கு மத்தியிலும் அதிகாலையில் வேலைகளுக்கு விரட்டப் பட்டார்கள். மலைகளில் நின்று கொண்டு வேலை செய்யவேண்டு. பொழுது சாயும்வரை. 
( இன்றும் அந்த நிலை மாறிவிடவில்லை... நான் பாடசாலை போகும் காலத்தில் அந்த காலை நேரத்தில் மழையோ, வெயிலோ மலைகளில் கொழுந்து பறிக்கும் பெண்களை கடந்துதான் பஸ்ஸில் சென்றுள்ளேன்) 

" கோண கோண மலையேறி 
கோப்பிப் பழம் பறிக்கையிலே     
ஒரு பழம் தப்பிச்சுன்னு 
உதைச்சானைய்யா  சின்னத் துரை...."

துரை எனப் பட்டவர்கள் ஆங்கிலேய மேலதிகாரிகள்...

A tea factory



இவ்வாறான நாட்டார் பாடல்கள் மட்டும்தான் மலையக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இலக்கியங்களாக அமைந்தன. மாறாக எழுத்துருவில் தங்களுடைய கருத்துகளை வெளிப் படுத்த மிக நீண்ட காலம் எடுத்தது. 

மலையக மக்களின் வாழ்வை காட்டும் நாவல்கள், கட்டுரைகள் என்பன ஆங்கிலேய ஆட்சி காலத்தின் மிகப் பிற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்றன. நடேச அய்யர் முதலியவர்கள் இதற்கு முன்னோடிகள். 
அந்தனி ஜீவா, சாரல்நாடன், கணேசன் முதலியவர்கள் காத்திரமான படைப்புகளைத் தர அவர்கள் சுதந்திரத்துக்குப் பின்னும் மிக நெடும் காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. 

இந்திய வம்சாவளி தமிழர்களின் குரல், வரலாறு அல்லது பிரச்சினைகள் நிச்சயமாக சர்வதேச அளவில் முன்னெடுக்கப் படவில்லை. தமிழர்களின் உரிமைப் போராட்டம் எடுத்து சொல்லப் பட்ட அளவு கூட இந்த தமிழர்களின் வாழ்வியல் போராட்டம் எடுத்து சொல்லப் படவில்லை. இலக்கியங்கள், கல்வித்துறை என்பவற்றில் அவர்களின் பங்களிப்பு முன்னெடுக்கப் பட மிகநீண்ட காலம் எடுக்கக் காரணங்கள் என்ன? 

முதற்காரணி    வறுமை. 
தோட்டப் புற மக்களின் வாழ்வாதார சுமைகள் அதிகமானவை. குடியேற்றப் பட்டவர்களால் பூர்வீக சொத்துகளைக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே அவர்களின் பொதுபடையான தேவைகளுக்கு முன் வேறு விடயங்களை யோசித்துப் பார்க்கவில்லை. இலக்கியத்துக்கோ, கல்விக்கோ மூலதனம் எதுவும் இருக்கவில்லை. எனவேதான் மலையக  மக்களின் பிரச்சனைகள் இன்றளவும் ஒரு நிறுவனப் படுத்தப் பட்ட முறையில் வெளியே சொல்லப் படுவதோ புரிந்து கொள்ளப் படுவதோ இல்லை. அவர்களின் உண்மையான வரலாறும் பெரும்பாலும் மறக்கப் பட்ட நிலையிலேயே உள்ளது. 

கல்விநிலையோ நல்ல நிலையில் இருக்கவில்லை. கல்வி உரிமைகளும் முறையாக வழங்கப் படவில்லை. 
" உங்கள் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைக்கிறது, அந்த ஒரே காரணத்துக்காகத்  தான் நீங்கள் வாழ முடிகிறது. நீங்கள் தோட்டத்திலிருந்து வெளியேறி உங்கள் பிள்ளைகள் படிக்கப் போய்விட்டால் அப்புறம் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது" என்று வக்கிரமாக தலைமைகள் சிலராலேயே அறிவுறுத்தப் பட்டனர். 

ஒரு சில உதாரணங்களை சொல்லிவிட்டு முடிக்கிறேன். 

ஆங்கிலேயர்களால் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு விடயம் கோதுமை. மலைகளில் 12 மணிநேர கடும் உழைப்புக்கு கோதுமையின் உட்பொருட்கள் கொஞ்சம் உதவியாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. 
இலங்கையின் பிரதான உணவு அரிசி என பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்தாலும் மலையகத்தில் அது கோதுமைக்குப் பின்தான். 
உலக சந்தையில் கூடுகிறதோ இல்லையோ ஒவ்வொரு அரசாங்கமும் தேவைப் படும் போதெல்லாம் அதன் விலையை மலையளவு உயர்த்தி தன் தாகத்தை தீர்த்து அந்த சுமையை மலையக மக்களின் தலையில் போடும்.
இதனால் சிங்களவரின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியதில்லை  . 

மலைநாட்டின் அதிகாரிகள் பெரும்பாலும் சிங்களவர்களாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளப் படுவர். அவர்கள் தாங்கள் தமிழ் கற்க வேண்டுமென ஒருபோதும் யோசிப்பதில்லை. தமிழ் மட்டுமே தெரிந்த தோட்டத் தொழிலாளிகள் தாங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கடும் கஷ்டப் பட வேண்டியிருக்கும். அல்லது அந்த அதிகாரிகளின் அடிவருடிகளுக்கு கொஞ்சம் படியளக்க வேண்டும். 

கல்விச் சுற்று நிருபங்கள், முக்கியமான கிராம சேவைப் படிமங்கள் என்பன தமிழில் இருக்காது. வாக்காளர் பதிவு தொடக்கம் அத்தனை பதிவுகளுக்கும் அதனை நிரப்பவே பத்து இடங்கள் அலையை வேண்டி இருக்கும். 
பஸ் வண்டிகளின் பெயர் பலகையை வாசிக்கத் தெரியாமல் 
" தம்பி , எந்த பஸ்சுல மஸ்கெலியா போகணும் தம்பி.... " என்று பரிதாபமாக கெஞ்சும் வயசான அய்யா மார், பெண்களைப் பார்த்து எத்தனையோ முறை மனம் வெதும்பியதுண்டு. 


இதுவும் உதாரணங்கள்தான். இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. 
1800 களிலேயே மலைகளைத் தகர்த்து விட்டு பயிரிடத் தொடங்கி விட்டனர் , தமிழர்....
அவர்களின் பாரம்பரிய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை என்ன செய்தனர்? 

இன்னும் வருவேன். 

பயணம் ஒன்று குறுக்கிட்டதன் காரணமாக இந்தப் பதிவில் தாமதம் ஏற்பட்டு விட்டது. மன்னிக்க வேண்டும் தோழர்களே......



   

35 comments:

  1. பிரமாதம். இது முழுவதுமாக எழுதப்பட்ட பிறகு புத்தகமாக வர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே... உங்கள் எண்ணம் எனக்கு சாத்தியப் படுமாயின் பெருமகிழ்ச்சி அடைவேன். அழைப்பை ஏற்று வந்த உங்களுக்கு மீண்டும் நன்றி தோழரே...

      Delete
  2. தங்கள் தளத்தில் Follower ஆக இணைந்து விட்டேன்...தொடருங்கள் தொடர்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் விஜயன். தொடர்ந்தும் என் ஆக்கங்களுடன் இணைந்திருங்கள் தோழா... என் பதிவுகளை செப்பனிட உதவுங்கள்...

      Delete
  3. உள்ளத்து உணர்வுகளினைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இலக்கிய நயத்தோடு எழுதும் திறமை இருப்பதால், உங்களின் பதிவுகள் ஜொலிக்கின்றன. வாழ்த்துக்கள்! தொடருங்கள்.... தொடர்ந்து படித்து நல் ஆதரவு தருகிறோம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழா.... என் எழுத்துகளுக்கு அழகு சேர்ப்பது உங்கள் கருத்துரைகள்தான்....
      உண்மையிலேயே உங்கள் பாராட்டுகளால் மிக்க மனம் மகிழ்கிறேன்... இன்னும் சிறப்பாக எழுத உந்தப் படுகிறேன்...

      Delete
  4. உங்கள் ஊக்குவிப்புக்கு, ஆதரவுக்கு மிக்க நன்றி தமிழ்நேசன்.... தொடர்ந்தும் நல்ல பதிவுகளைத் தருவேன்....

    ReplyDelete
  5. சிறப்பாக எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே... அழைப்பை ஏற்று வந்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

      Delete
  6. எவ்வளவு விளக்கங்கள்... உதாரணங்கள்... அருமை...
    தொடர வாழ்த்துக்கள்...

    (இப்போது இன்று Google Chrome-யில் உங்கள் தளம் திறக்க முடிகிறது...)

    ReplyDelete
    Replies
    1. இதற்கு முன்பு அதில் சிக்கல் இருந்ததா? நான் அதனை அறிந்திருக்கவில்லை...
      கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.....

      Delete
  7. (இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
    Caution : Restore/Backup your HTML, before editing :

    (1) Edit html Remove Indli Vote button script

    (2) Remove Indli Follow Widget

    [waiting for ta.indli.com] என்று தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி நண்பரே... அந்த குறையை உங்கள் மூலமாகவே அறிந்து கொண்டேன்... அதனை நீக்கி விட்டேன். இப்போது தளம் வேகமாக துவங்குகிறதா?

      Delete
    2. இன்ட்லியில் என்ன பிரச்சினை என்று புரியவில்லை... ஆனால் சமீப காலமாகவே அனைத்து திரட்டிகளும் திடீரென செயல் இழக்கின்றன... பிரச்சினை என்னவென்றால் இடையில் பகிரப் படும் நல்ல பதிவுகளும் காணாமல் போய் விடுகின்றது தோழரே... நேரடியாக என்னைத் தொடர்பவர்களே தங்குதடையின்றி வருகின்றனர்... அதிக followers கொண்டவர்களுக்கு பிரச்சினை இல்லை.. ஆனால் வலையுலகில் தடம் பதிக்க நல்ல முயற்சிகளை செய்யும் ஆரம்ப பதிவாளர்களுக்கு பிரச்சினைதானே...?

      Delete
  8. திரு நடராஜன் அவர்கள் கூறியது போல், இவை அனைத்தும் புத்தகமாக வர வேண்டும் நண்பா, நான் ஓரளவிற்கு மலையக மக்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்... தங்கள் பதிப்புகள் மூலமாகவே முழுவதுமாக அறிந்து கொள்கிறேன். வாழ்த்துகள், தொடருங்கள் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே இந்த வாழ்த்தினால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... நிச்சயமாக தொடர்ந்தும் நல்ல தகவல்களை வழங்குவேன்... கருத்துக்கு நன்றி நண்பா...

      Delete
    2. பதிவின் நீளம் குறித்து சிந்திக்கிறேன் தோழா... ஆனால் இது சமூக உணர்வு தொடர்பான தொடர்... நீளத்தை சுருக்குவதால் பதிவின் உள்ளடக்கம் குறைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது தோழா....

      Delete
  9. அருமை...தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆட்டோ மொபைல்... எங்கே நம்ம ப்ளாக் பக்கம் கொஞ்ச நாள் காணவில்லையே.... தொடர்கிறேன் தோழா... தொடர்ந்தும் உங்கள் ஆதரவை நல்குங்கள்...

      Delete
  10. வணக்கம் சொந்தமே!உனது நேர நெருக்கீட்டால் ஒரு சிறப்பானதொடர் பதிவை இழக்கப்பார்த்தேன்.மிக்க நன்றி மீண்டும் அழைத்துவந்தமைக்கு.இவை எல்லாம் ஆவணமாகவேண்டும் என்பதே என் அவாவும்.

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கு மிக நன்றி தோழி... ஆவணமாக உருவாக்குவதில் நிச்சயமாக எனக்கும் ஆர்வம் உண்டு .... அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு மிக அவசியம்... தொடரை எழுதி முடித்ததும் சில மாற்றங்களை செய்து விட்டு மின்னூலாகத் தொகுத்து விடலாம் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைகிறீர்கள்?

      Delete
    2. நேர நெருக்கடி உண்மையிலேயே பெரும் கஷ்டத்தை அளிப்பது உண்மைதான் தோழி... ஆனால் கிடைக்கு பயனுள்ள பொழுதில் நல்ல தரமான பதிவுகளையே இடவேண்டுமேன்பதே எனது அவா... தவிர நல்ல பதிவுத் தளங்களுக்கு சென்று பல புதிய தகவல்களையும் உங்களைப் போன்ற நல்ல நண்பர்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறேன்...

      Delete
  11. முகப்புத்தகம் மூலமாக வரிக்குதிரைக்கு விருப்பத்தையும் தரமான ஆக்கங்கள் நோக்கிய உங்கள் கருத்துகளை கூகிள் பிளஸ் மூலமாகவும் தமிழ்நேசன் அவர்கள் தந்திருந்தார்.... ஆனால் அவற்றை நேரடியாக பதிவில் இணைக்கும் முறைமைகளை நான் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. கருத்துக்கு மிக நன்றி தோழரே...

    ReplyDelete
  12. Replies
    1. நீங்கள் எனது நண்பராக இணைந்து கொண்டமையால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

      Delete
  13. கருத்துக்கு மிக்க நன்றி தோழரே.... நான் ஏற்கெனவே இதிரட்டியில் இணைந்துவிட்டேன் தோழா...

    ReplyDelete
  14. மலையக மக்களைப் பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ளும் விதத்தில் தங்களது தொடர் அமைந்துள்ளது. ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு வார்த்தையையும் விடாது படித்தேன். எழுத்து நடையில் நெளிவு சுழிவு இல்லாமல் தெளிந்த ஓடையில் நீரோட்டமாக அமைந்திருப்பது சிறப்பு. தொடர்ந்து எழுதுங்கள்..சக நண்பர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும்விதமாக தங்களது எழுத்துக்களை புத்தகமாகவும் வெளியிடுங்கள்... இதன் மூலம் தங்களுடைய ஆக்க்ங்கள் மேலும் பலரை சென்றடையும் வாய்ப்புகள் இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete
    Replies

    1. நிச்சயமாக அதற்கான முயற்சிகளில் ஈடுபடப் போகிறேன்... அவ்வளவு ஈடுபாட்டுடன் வாசித்ததாக நீங்கள் சொன்னது பெரும் மன நிறைவைத் தருகிறது... நன்றி தோழா...
      PDF முறையில் இப்போது தரவிறக்கி வைத்துள்ளேன். பிழைகளைத் திருத்தி, பின்னூட்டங்களைத் தொகுத்து, மேலும் புதிய விடயங்களைச் சேர்த்து தொகுக்க விரும்புகிறேன். நூலுருவில் வெளியிட உங்கள் அனைவரின் உதவியையும் எதிர்பார்க்கிறேன்...

      Delete
  15. நண்பரே தமிழரின் அருமை கூறும் மிக நல்ல பதிவு தான். தங்களது தளத்தில் இணைந்துள்ளேன். எனது சில பதிவுகள் எழுதும் வேலையில் கொஞ்சம் பிஸியாக உள்ளேன். முடிந்ததும் தஙளது மற்றைய பதிவுகளை படிக்கிறேன். எனது தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழா... எனது தளத்தில் நீங்கள் இணைந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்...

      Delete
  16. உலக சந்தையில் கூடுகிறதோ இல்லையோ ஒவ்வொரு அரசாங்கமும் தேவைப் படும் போதெல்லாம் அதன் விலையை மலையளவு உயர்த்தி தன் தாகத்தை தீர்த்து அந்த சுமையை மலையக மக்களின் தலையில் போடும்.
    இதனால் சிங்களவரின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியதில்லை .

    அருமையான பதிவு. உங்கள் கட்டுரை என் சிந்தனையை பல பரிமாணங்களுக்கு அழைத்து செல்கிறது

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழரே... உங்கள் முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி....என் பதிவுகளுடன் தொடர்ந்து இணைந்திருக்குமாறு வேண்டுகிறேன்.

      Delete
  17. "மலையகம்" சிறப்பான தொடராக எழுதிவருகிறீர்கள். இலங்கைத்தமிழனின் பாடுகளை இலக்கிய நயத்தோடு கூடிய எழுத்தோவியமாக்கிவருகிறீர்கள். பல விடயங்களை படிக்க படிக்க கடல் கடந்த தமிழரின் நிலை மனதை உருக்குகிறது. இன்னின்ன காலகட்டங்களில் என்பது மட்டும் எனக்கு பிடிபடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே.... உங்கள் கருத்துகளால் எனக்கு தொடர்ச்சியான ஊக்கம் அளித்து வருகிறீர்கள்...

      Delete
    2. இன்னின்ன காலகட்டங்களில் என்பது மட்டும் எனக்கு பிடிபடவில்லை.//
      அடடா... நண்பரே... இந்த விடயம் உண்மைதான்... தமிழ் நாட்டவர்களுக்கு அங்கிருந்து எப்போது இலங்கைக்கு மக்கள் குடிபெயர்ந்தார்கள் என்பதில் சரியான விளக்கம் தரப் படவில்லை என்பது உண்மைதான்... நான் ஒரு அறிமுகம் எழுதி விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும். சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி...

      Delete